நாம் ஏன் மற்றவர்களுக்காக நடிக்க வேண்டும் ?
நமது நடிப்பின் மூலம் ஒருவரின் தற்கொலை ஒரு நாள் தள்ளிபோகும் என்றால், கண்டிப்பாக நடிக்கலாம் தவறே இல்லை.
நமது நடிப்பின் மூலன் ஒருவரின் முகத்தில் ஒரு கணநேரம் சிரிப்பு வரும் என்றால், ஒருவரின் அந்த கணநேர மகிழ்ச்சிக்காக நமது சுயத்தை மறைத்து நாம் நடிக்கலாமா?? தேவையே இல்லை.
அதே நேரம் அந்த ஒருவர் யார் என்பதும் இங்கே முக்கியம் இல்லையா. அந்த ஒருவர் நாம் நேசிப்பவராக இருக்கலாம், அல்லது நாம் வெறுப்பவராக அல்லது அவர் நம்மை நேசிப்பவராக, இப்படி ஏதோ ஒருவராக..
ஆனால் அவரின் மகிழ்ச்சிக்காக நாம் நமது சுயத்தை விட்டு தரக்கூடாது என்று நினைப்பதும் ஒருவகையான சுயநலம் இல்லையா??
நமக்கான சுய பிம்பத்தை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்வது, அது ஒரு வீதமான ஆணவம். என்னை பார், நான் யாருக்காகவும் எப்பொழுதும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று நிருபிக்க துடிக்கும் ஆணவம். நாம் நிருபித்து இங்கு எதை சாதிக்க போகிறோம்.
இருக்கும் ஒரு பிறவியை மற்றவர்களுக்காக வாழ்ந்து விட்டு செல்வோமே.