முத்தம் என்பது ஒரு பெயர்ச்சொல்.
முத்தம் என்பது நாம் ஒருவர் மீது செலுத்தும் வன்முறை.
முத்தம் என்பது ஒருவர் மீது நமது இருப்பை நினைவூட்ட நாம் செலுத்தும் ஒரு ஏகபத்தியச் செயல்; அல்லது, “நான் உனக்காக இருக்கிறேன்” என்று நம்ப வைக்கும் ஒரு நாடகம்.
முத்தம் என்பது எப்பொழுதோ நடக்கப்போகும் ஒரு கொலைக்கான ஆரம்பம்.
முத்தம் என்பது அடுத்த நொடி நடக்கவிருந்த ஒரு தற்கொலைக்கான முடிவு.
கவிதா ஒருமுறை என்னிடம் சொன்னது போல், “முத்தத்தை வெறும் முத்தமாக மட்டும் பார்ப்பவர்களின் வாழ்க்கை அந்தளவு Complicated-ஆக இல்லை.”