முன்னொரு காலத்தில் சுதந்திர தினம் என்பது "மிட்டாய்" கிடைக்கும் நாள், அதுவும் ஆரஞ்சு மிட்டாய். ஆரஞ்சு மிட்டாய்களின் மவுசு குறைந்த இந்த காலத்தில், சுதந்திர தினம் என்பது "ஒரு விடுமுறை நாள்".
வெள்ளையர்களை விரட்டி வாங்கிய சுதந்திரம், உண்மையாகவே நமக்கு தேவைதானா??. அந்நியர்களை விரட்டிவிட்டு, இப்பொழுது அவர்களுக்கு தானே நமது பூமியை கொஞ்சம் கொஞ்சமாக அடகு வைத்துக்கொண்டு இருக்கிறோம். இதற்காகவா நாம் சுதந்திரம் பெற்றோம்.
எல்லா துறைகளிலும் அந்நிய முதலீட்டை வரவேற்கிறோம். முதலில் 25 சதவீதம், பின்னர் 49%, 51% என்று போய் இப்பொழுது 100 சதவீத அந்நிய மூதலீட்டிற்கு நமது அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துக்கொண்டு இருக்கிறது. கேட்டால் இதற்கு உலகமயமாக்கல் என்று பெயர் வேறு.
அரசாங்கத்தை மட்டும் சொல்லி குற்றம் இல்லை. இது நமது அனைவரின் குற்றம். நான் வேலைப் பார்க்கும் கம்பெனி அமெரிக்க கம்பெனி என்று சொல்லிக்கொள்ளதானே நமக்கும் ஆசை. இது என்னையும் சேர்த்துதான்.


