Tuesday, October 21, 2008

இரண்டு புத்தகங்கள்




சமிபத்தில் இரண்டு புத்தகங்களை படிக்க நேர்ந்தது. ஒன்று Chetan Bhagat எழுதிய "One Night at Call Center" என்ற புத்தகம், மற்றொன்று நடிகர் சூர்யாவின் "இப்படிக்கு சூர்யா' என்ற புத்தகம்.


1) ONE NIGHT AT CALL CENTER:

"FROM INDIA'S BEST SELLING ENGLISH NOVEL WRITER" என்கின்ற தலைப்புடன் வந்திருக்கும் புத்தகம் இது. 2005ல் வெளிவந்த புத்தகம். Chetan Bhagat இதற்கு முன் "Five Point Someone" என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். நான் இன்னும் அந்த புத்தகத்தை படிக்கவில்லை. "One Night at Call Center" புத்தகத்தை நண்பன் ஒருவன் மிகவும் நல்ல புத்தகம் என்று கூறிக் கொடுத்தான். நானும் மிகவும் எதிர்பார்புடன் வாங்கிப் படித்தேன். புத்தகம் ஆரம்பம் முதல் இறுதி வரை வேறும் அபத்தங்கள்.

இப்படி தான் கதை ஆரம்பிக்கின்றது, ஓர் train compartment'ல் Chetan'னும் ஓர் இளம்பெண்ணும் தனியாக பயணம் செய்கிறார்கள். (!!!!!!...). அந்த பயணத்தில் அந்த இளம்பெண் ஓர் உண்மை கதையைச் சொல்ல சம்மதிக்கிறாள், ஆனால் அந்தக் கதையை அடுத்தப் புத்தகமாக எழுத வேண்டும் என்ற condition'வுடன். இப்படி புத்தகம் ஆரம்பத்திலேயே ஓர் சினிமாத்தனம். இந்த சினிமாத்தனம் புத்தகம் முழுவதும் தொடர்கிறது. கிளைமாக்ஸில் கடவுள் வந்து அவர்களிடம் போனில் பேசும் போதும், அடுத்து பிளான் செய்து project manager'யை ஏமாற்றும் போதும், chetan அங்கிலப் படங்களை மிஞ்சி விடுகிறார்.

IT கம்பெனியில் வேலைப் பார்பவர்கள் அனைவரும் அவர்களுடைய manager'யை வெறுக்கிறார்கள் என்ற ஓர் point'யை வைத்துக்கொண்டு கதையை நகர்த்தி இருக்கிறார் chetan. ஷியாம், பிரியங்கா, ராதிகா, வரூண், மிலிட்டரி அங்கிள், இஷா என்று இந்த கதையில் ஆறு முக்கியக் கதாபாத்திரங்கள். ஆனால் யாரை பற்றியும் முழுமையாக சொல்லவில்லை. கால்சென்டரில் வேலை செய்பவர்களை முழுமையாக அறிந்து கொள்ளாமல் இந்த புத்தகத்தை எழுதி உள்ளார் Chetan. ஓர் ஆங்கிலப் படத்திற்கு தேவையான Romance, Comedy, Sex, Twist என்று சகலமும் இதில் உள்ளது. ஓருவேளை இவை தான் இந்த புத்தகத்தை வெற்றியடைய செய்ததா என்று தெரியவில்லை. இப்பொழுது இந்த கதை "Hello" என்ற பெயரில் படமாக வெளிவந்து உள்ளது. என்ன கொடுமை சார் ???...

2) இப்படிக்கு சூர்யா

Landmark புத்தகக்கடையில் பல மாதங்களாக நான் பார்த்தப் புத்தகம் "இப்படிக்கு சூர்யா". ஓர் நடிகனால் என்ன எழுத முடியும் என்ற எண்ணத்தில் இந்த புத்தகத்தை தொட்டு கூட பார்த்தது இல்லை. தவிர்க்கமுடியாத மற்றும் சொல்லமுடியாத சில காரணங்களால் இந்த புத்தகம் என் கைக்கு வந்தது. ஓர் கோபத்தில் தான் இந்த புத்தகத்தை படிக்க தொடங்கினேன். ஆனால் அந்த புத்தகத்தின் வந்த முதல் அத்தியாயமே என்னை படிக்க தூண்டியது.

"கடல் வேண்டாம்என்று துப்புகிற கிளிஞ்சல்களைக்கூட திறமையாக பொறுக்கத் தெரியவில்லையே என்கின்ற தாழ்வு மனப்பான்மைத்தான் என் ஓரே சொத்து" என்பது தான் முதல் அத்தியாயம். நாம் நினைப்பது போல் சூர்யா ஓர் ஹீரோவாகவே பிறந்து விடவில்லை. அவருடைய பள்ளி நாட்களில் தன்னால் ஓன்றும் முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையில் தவித்து இருக்கிறார். எல்லோரும் தன் தம்பியிடம் பாசமாக இருப்பதை பார்த்து தம்பியை வெறுத்து இருக்கிறார். ஏழாம் வகுப்பில் "FAIL" ஆனதால் வேறு பள்ளியில் ஏட்டாம் வகுப்பு பயில்கிறார். இவை அனைத்தும் மிகவும் யதார்தமாகவே கூறப்பட்டு உள்ளது.

மேலே கூறியவை எல்லாம் முதல் 80 பக்கங்களில் முடிந்து விடுகின்றன். அடுத்து வரும் பக்கங்கள் சூர்யாவின் சினிமா வாழ்க்கையை பற்றி சொல்கின்றன். இவற்றை படிக்கும் போது ஓர் சலிப்பு உண்டாகிறது. முதல் 80 பக்கங்களை மட்டும் வைத்துப் பார்த்தால், இது கண்டிப்பாக ஓர் சிறந்த "SELF MOTIVATION" புத்தகம். என்னால் 130 பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை.



பின்குறிப்பு:
=======

அருண் தனது வலைபதிவில் கவிதைகள் எழுதி வருகிறான். அதன் முகவரி ::: http://www.perinba.wordpress.com/

அந்த கவிதைகளை படித்தவுடன் எனக்கு தோன்றிய கவிதை........................

தெருமுனை டீக்கடையில்
படிக்கிறேன் தினத்தந்தி

தயவு செய்து கவிதை எங்கே என்று மட்டும் கேட்காதீங்க.... முடிந்தால் முடிவில் "கன்னித்தீவு தொடர்கிறது" என்று சேர்த்துப் படிக்கவும்.

கீழே மறந்தமிழனின் கவிதை....

என் தேவைகளுக்காக
ஓர் தேவதையைத் தேடினேன்
அவளும் தேவதையாகத் தான் இருந்தால்
அவள் தேவைகள் முடியும் வரை.


என்னை அடிக்க எதையோ தேடுவது போல தெரிது????/

4 comments:

Arun said...

“Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquility”
-William Wordsworth


https://www.perinba.wordpress.com




சரவணாவின் வலையில் என் கவிதைகளும் எழுத்துக்களும் அடிக்கடி அடிபடுகின்றன.

என் வரையில் கவிதையை நான் ரகம் பிரிப்பதில்லை. அது நல்லது அல்லது லாயக்கற்றது என்பதை அடுத்த கவிதை எழுதும் போதுதான் தீர்மானிக்கிறேன். எழுத்துப்பிழை இல்லாமல் இருப்பதில்லை. கவிதையை அதுபாட்டுக்கு நடை பழகவிட்டுவிடுவதே என் வழக்கம். “இந்த கவிதை புரியவேயில்லை” என்பது, “அவனுக்கு கோர்வையாக பேசத்தெரியாது “

என்பதைப் போன்றது. வார்த்தைகளை கைபிடி அளவே பயன்படுத்துவது கவிதையின் அடிநாதம். ஒருவன் சொல்லவந்த விஷயத்தை அவன் பார்வைக்கே சென்று பார்ப்பது மேலோங்கிய ரசனை. எழுதிய அத்தனை கவிதைகளும் அனைவருக்கும் புரிவதில்லை. ‘இதுதான் என் கவிதையின்

சாரம்‘ என பிரச்சார வார்த்தைகளைக் கொண்டு புனைவது கவிதையாகாது என்பது என் சார்பு. என்றோ நான் பார்த்த என் அம்மாயி வீட்டின் திண்ணையை நான் கவிதையாய் சொல்லும்போது அது காட்சி விவரிப்பில் அம்சமானதாக இருப்பினும் , வாசிப்பவர் மனது என்றோ தான் பார்த்த அழுக்கு கிராமத்துத் திண்ணையை ஞாபகப்படுத்திக்கொள்ளும்.

நான் பார்த்த திண்ணை இப்படித்தான் இருந்தது என்பதை விவரிக்கிறேன். அவர்கள் கற்பனையில் அது வேறு ஒரு திண்ணை. வேறுபாடு வந்தேதீரும். அதை எற்றுக்கொள்ளும் மனம் என்னிடமுண்டு.


-பேரின்பா

சரவண வடிவேல் said...

தலைவா யாரு அந்த William Wordsworth... உங்க சொந்தகாரரா???

Arun said...

உன்ன பசிச்ச புலி திங்க....

Subramania Athithan said...

//என் தேவைகளுக்காக
ஓர் தேவதையைத் தேடினேன்
அவளும் தேவதையாகத் தான் இருந்தால்
அவள் தேவைகள் முடியும் வரை//

awesome machi.. gr8 :)