Tuesday, January 27, 2009

என் தேவதை

தேவதைகள் கோபப்படுவார்களா ??, தேவதைகள் பொய் பேசுவார்களா??, தேவதைகள் மற்றவர்களை கேலி செய்வார்களா??, தேவதைகள் மற்றவர்களை வெறுப்பார்களா??. இந்த கேள்விகள் அனைத்தையும் அவளை பார்க்கும் முன் என்னிடம் யாராவது கேட்டு இருந்தால், கண்டிப்பாக பதில் சொல்ல திணறி இருப்பேன். இப்பொழுது இந்த கேள்விகள் அனைத்துக்கும் ஒரே பதில் "ஆம்". ஆம், என் தேவதை அழகாக கோபபடுவாள், என் தேவதை சின்ன சின்ன ரசனையான பொய்கள் பேசுவாள், என் தேவதை கேலி செய்வாள், என் தேவதை என்னை வெறுப்பாள் !!!!.

என்னுடைய பாட்டி எனக்கு சொன்ன கதைகளில் வரும் தேவதைகள் அழகானவர்கள், ஏழைகளுக்கு வரங்களை வாரி இழைப்பவர்கள். ஆனால் என் தேவதை கதை சற்று வித்தியாசமானது. ஒரு எதிர்பாராத விபத்தில் என் தேவதை எனக்கு முதல் காட்சி அளித்தாள். பழகிய சில நாட்களிலேயே நன்றாக பேச தொடங்கினாள். எனக்கு சந்தோஷம் என்ற வரத்தை போதும் போதும் என்கின்ற அளவுக்கு தந்தாள். இதுவரை பாலைவனமாக சென்ற என் வாழ்வில் மிகவும் சந்தோஷமான நாட்கள் அவை. தேவதை கதைகளில் வருவது போல் இந்த சந்தோஷம் எனக்கு கொஞ்ச நாட்கள் தான் நிலைத்தது.

வரங்கள் தருகின்ற தேவதையிடம், வரமாக அவளையே கேட்கலாமா ??. பேராசை யாரை விட்டது. ஒரு நாள் தேவதையை வரமாக கேட்டேன்.

நான் கேட்டவுடன் தேவதை முடியாது என்று ஒரே வார்த்தையில் சொல்லியிருக்கலாம் அல்லது என்னை திட்டி இருக்கலாம்,. ஆனால் தேவதையோ அழுது கொண்டே சென்று விட்டாள். தேவதையை அழ வைத்த பாவியல்லாவா நான்.

இப்பொழுது என் தேவதை என்னிடம் பேசுவது இல்லை. நான் எதிரில் சென்று மன்னிப்பு கேட்டாலும் என் தேவதை என்னை மன்னிப்பதாக இல்லை. நான் மன்னிக்க கூடிய குற்றமா செய்து உள்ளேன். என் தேவதை என்னை வெறுக்கிறாள்.

ஆம் மீண்டும் சொல்லுகிறேன், தேவதைகள் கோபபடுவார்கள், பொய் பேசுவார்கள், மற்றவர்களை வெறுக்க கூட செய்வார்கள்.

2 comments:

சுப்பிரமணி சேகர் said...

அருமை அண்ணாத்தே! உண்மைகளைப் போட்டு உடைக்கிறீங்க... ஆனால் என் தேவதை, என் மீது கோபப்படவே இல்லை. என்னன்னுதான் எனக்குப் புரியவே இல்லை.

சரவண வடிவேல்.வே said...

/*** ஆனால் என் தேவதை, என் மீது கோபப்படவே இல்லை. என்னன்னுதான் எனக்குப் புரியவே இல்லை.***//

இந்த பொண்ணுங்களே இப்படிதான் பாஸ்.