ஏதாவது கேளுங்கள்
சிறுபிள்ளைத்தனமாக
அல்லது அறிவாழித்தனமாக
ஏதாவது கேளுங்கள்
கேள்வி கேட்காதவன் முட்டாளாகிறான்
கேள்வி கேட்காதவன் அடிமையாகிறான்
கேள்வி கேட்காதவன் ஏமாளியாகிறான்
ஆகவே கேள்வி கேளுங்கள்
உங்கள் இருப்பை
இந்த உலகிற்க்கு காட்டுவதற்க்கு
உங்கள் கேள்வி துணையிருக்கும்
ஆகவே கேள்வி கேளுங்கள்.
உங்களுக்கு பதில் தெரிந்தாலும் கேளுங்கள்
அது இன்னொருவனுக்கு
கேள்வி கேட்க ஊன்றுகோலாய்
இருக்கலாம்
எல்லா கேள்விகளுக்கும்
பதில் இருக்கிறது
ஆகவே கேள்வி கேளுங்கள்
1 comment:
நம்ம கேள்வி கேட்க ஆரம்பித்தால் பலர் feel பண்ண வேண்டியிருக்கும். ஏம்பா :)
Post a Comment