பின்நவீனத்துவம் என்பதை ஆங்கிலத்தில் எப்படி உச்சரிக்கவேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. சிலர் "post-modernism" என்றும், சிலர் "existentialism" என்றும் சொல்கிறார்கள். எது சரியான வார்த்தை என்று என்னிடம் யாராவது சொன்னால் அவர்களுக்கு புண்ணியமாக போகும்.
பின்நவீனத்துவத்தை பற்றி சகா ஒருவன் எழுத சொன்னவுடனே, எனக்கு செம சந்தோஷம். நமக்கும் நாலு விசயம் தெரியும் என்று ஒருவன் நம்புகிறானே என்று.
எப்படியாவது எல்லாருக்கும் புரிவதை போல எழுதிவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை எழுத தொடங்கினேன். உங்களுக்கு புரிகிறதா?? இல்லையா?? என்பதை படித்த பிறகு நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
முதலில் நவீனத்துவம் என்றால் என்ன??. தற்பொழுதைய காலத்திற்க்கு ஏற்றவாறு, நாம் மாற்றம் அடைவது நவீனத்துவம். இந்த மாற்றம் அறிவியல், தோற்றம், எண்ணங்கள் என்று ஏது சம்மந்தமாகவும் இருக்கலாம். இந்த மாற்றங்களால், எற்படும் பாதிப்புகளை பற்றி மிகவும் விரிவாக பார்பதே பின்நவீனத்துவம். அந்த பாதிப்புகளை பற்றி ஒரு வாக்கியத்தில் சொல்லாமல், மிகவும் ஆளமாக அதை பற்றி எடுத்து சொல்வதே பின்நவீனத்துவம. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டும்தான். மற்றவர்களிடம இருந்து மாறுப்பட்டு சிந்திப்பது என்று கூட சொல்லாம். அல்லது இப்படிகூட சொல்லலாம், ஒரு மாற்றத்தால் எற்படும் நன்மைகளை பற்றி சொல்வது நவீனத்துவம், அந்த மாற்றத்தால் எற்படும் பாதிப்புகளை பற்றி தீவிரமாக ஆராய்வது பின்நவீனத்துவம்.
பின்நவீனத்துவம் பற்றி சிந்திப்பவர்கள் pessimist என்றால் அது முற்றிலும் தவறு. உலகத்தில் உள்ள மக்கள் அனைவராலும் ஏற்றுகொள்ளபட்ட கருத்துக்கள் என்று எதுவும் இல்லை. பெரும்பாண்மையான மக்களால் ஏற்று கொள்ளபட்ட கருத்துகளே சரியான கருத்துகள் என்ற ஒரு மாயை உருவாகியிருக்கிறது. எதனால் அந்த கருத்துக்களை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, என்று யோசிப்பது இல்லை. இந்த மாற்று கருத்துகளைப் பற்றி விரிவாக அலசுவதும் பின்நவீனத்துவம்தான்.
அதற்காக மாறுபட்டு சிந்திக்கபடும் அனைத்துமே பின்நவீனத்துவம் என்று சொல்லிவிட முடியாது.
"ஜே ஜே சில குறிப்புகள், ஜீரோ டிகிரி" ஆகிய இரண்டும் தமிழின் மிக சிறந்த பின்நவீனத்துவ புத்தகங்கள். " ராஸலீலா, கோபாலபுர கிராமம், உபபாண்டவம்" போன்றவை மாறுபட்ட எழுத்து நடையை கொண்டாலும், அவை பின்நவீனத்துவ புத்தகங்கள் அல்ல.
எஸ்.ராவின் "கடவுளின் குரலில் பேசி" என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்த பின்நவீனத்துவ சிறுகதை. அந்த சிறுகதையை இங்கே படிக்கலாம்.
http://www.moderntamilworld.com/illakiyam/story_ramakrishnan.asp
"ஆயிரத்தில் ஒருவன்" வித்தியாசமான கதை கொண்ட திரைப்படம் என்றாலும், அந்த ஒரு சில வித்தியாசமான காட்சிகளை வைத்து அது பின்நவீனத்துவ திரைப்படம் என்று சொல்லிவிட முடியாது. குத்துப்பாட்டு, ஹீரோயிஸம், ஓவர் பில்டப் கொண்ட ஒரு கமர்ஸியல் திரைப்படம் என்பதே சரி. "கற்றது தமிழ்" ஒரு பின்நவீனத்துவ திரைப்படம். இந்த திரைப்படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை நவீனம் என்ற மாயத்தால் ஒரு மனிதன் அடையும் இன்னல்களை தெளிவாக சொல்லி இருப்பார்கள்.
ஆங்கிலத்தில் பின்நவீனத்துவ புத்தகங்கள் பல உள்ளன. ஆங்கில புத்தகங்களை நானே குத்துமதிப்பாகவே அர்த்தம் புரிந்து படிப்பதால், அதை பற்றி இங்கு பேசவேண்டாம். இத்துடன் பின்நவீனத்துவ கட்டுரை முடிவு பெறுகிறது. இது கடந்த இரண்டு வருடங்களாக நான் படித்து புரிந்துகொண்டது.
இது தவறு, இது பின்நவீனத்துவம் அல்ல என்று யாராவது சொன்னால், அவர்கள் சொல்வதையும் கேட்பதற்க்கு தயாராக இருக்கிறேன். பின்நவீனத்துவம் பற்றி படித்தும், அதை பற்றி விவாதிக்கும் போதுதான் அதன் சரியான அர்த்தம் நமக்கு புலப்படும். ஏனென்றால் பின்நவீனத்துவம் என்பது ஒரு feelings. புரிகிறதோ இல்லையோ, தொடர்ந்து அதை பற்றி படியுங்கள், தொடந்து விவாதியுங்கள், கண்டிப்பாக ஒருநாள் நமக்கு அந்த feelings கிடைக்கும். எனக்கு லா.சா.ரா சொன்ன ஒன்று நினைவில் வருகிறது
"புரிந்தது, புரியாதது இந்த இரண்டு நிலைகளுக்கும் உண்மையிலேயே என்ன வித்தியாசம் இருக்கிறது? இரண்டுமே தற்காலிக நிலைகள். ஒருவருக்கு ஒருவிதமாகப்படுவது, அடுத்தவருக்கு வேறு விதமாகப்படுகிறது. அதே ஆளுக்கே வேறு சமயத்தில் வேறு விதமாகப்புரிகிறது. அட, கடைசிவரை புரியாமல் இருந்தால்தான் என்ன? இருந்துவிட்டுப் போகட்டுமே".
**************************************
7 comments:
existentialism என்பது இருத்தலியல். இருத்தலை உறுதி செய்யும் ஒரு போக்கு. ஆனால் post-modernism பின் நவீனத்துவம். அது இருத்தலைக் கேள்வி கேட்டு விவாதிப்பது. இருத்தல் மற்றும் இல்லாதிருத்தல் இடையே பயணம் செய்யும் ஒரு வழி என்று சொல்லலாம். உதாரணத்திற்கு இது இப்படித்தான் என்று யாரவது சொன்னால், ஏன் அப்படி இருக்கக் கூடாது? என்று கேட்பதும் அதைத் தொடர்ந்து அது தொடர்பான அபத்தங்களைக் விரிவாகப் பேசுவதும் பின் நவீனத்துவத்தின் ஒரு கூறு.
நன்றி சரவணன்-சாரதி ....
சரி, அது என்ன பாஸ் இருத்தலியல் :)...
sathiyama my knowledge s not enough to understand பின்நவீனத்துவம் :) may be wil read dat story n tel u
existentialism is a very complex concept.I was an existentialist for 4 yrs.If you undersrand existentialism to the core,then u have ony only two choices to commit sucide or become mad.I dont have time,i talk to you about existentialism in detail when i have time.But surely i will.
"If you understand existentialism to the core,then u have ony only two choices to commit sucide or become mad".. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. நான் ஒரு existentialist என்று சொல்வதற்க்கும் ஒரு தைரியம் வேண்டும்.
யாருமே நம்மை புரிந்து கொள்ளாததால், எப்பொழுதும் தனிமையில் இருப்பது போல் ஒர் உணர்வை தரும்.
கண்ணதாசன் பாடல் வரிகள் " குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா!!!!!!"
//பெரும்பாண்மையான மக்களால் ஏற்று கொள்ளபட்ட கருத்துகளே சரியான கருத்துகள் என்ற ஒரு மாயை உருவாகியிருக்கிறது. எதனால் அந்த கருத்துக்களை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, என்று யோசிப்பது இல்லை. இந்த மாற்று கருத்துகளைப் பற்றி விரிவாக அலசுவதும் பின்நவீனத்துவம்தான்//
நல்ல கருத்து........... .
பின் நவீனத்துவம் குறித்த கோட்பாட்டு புத்தகங்களை படித்திருக்கிறீர்களா?
அ.மார்க்சின் "பின்நவீனத்துவம் - இலக்கியம், அரசியல்" போன்ற புத்தகங்களை படியுங்கள் இது குறித்து மிக ஆழமான புரிதலுக்கு வரலாம். ஆனால் இவற்றிற்கெல்லாம் முன்நிபந்தனை நவீனத்துவம் என்றால் என்ன? எந்த தத்துவ ஆசிரியர்கள் எல்லாம் நவீனத்துவம் சார்ந்தவர்கள், அறிவொளி இயக்கம் என்றால் என்ன? முதற்கொண்டு உலக வரலாறு வரை நிறைய தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
Post a Comment