உங்களால் மட்டுமே எனக்கு
உதவ முடியும்
என்று நம்பிக்கொண்டு இருந்தேன்.
எங்கள் முதல் சந்திப்பில்,
முதல் பேச்சில்,
முதல் புன்னகையில்,
முதல் சண்டையில்,
முதல் பேச்சுவார்த்தையில்,
எல்லாவற்றிலும் நீங்களும்
இருந்தீர்கள்.
பல நேரம் அமைதியாக பார்த்துக்கொண்டு
இருந்தீர்கள்,
சில நேரம் உள்ளே புகுந்து
உங்களால் ஆனவற்றை
நடித்து காட்டிக்கொண்டு இருந்தீர்கள்.
எப்பொழுதும் என்னுடனே இருந்த உங்களுக்கு,
ஒரு நொடிகூடவா தோன்றவில்லை
"எனக்கு உதவி தேவை" என்று.
கடைசியாக,
நீங்களே எனக்கு வில்லனாக மாறியதை
இன்னும் என்னால்
நம்ப முடியவில்லை.
கேட்காத உதவிகளும் எதிரிகளை
உருவாக்கும் என்பதை
இப்பொழுது புரிந்து கொண்டேன்.
3 comments:
அருமை தோழா
onnum puriyala ;)ungal na yaru engal(எங்கள் முதல் சந்திப்பில்) na yaru :)
உங்கள் என்றால் - அவர்கள். உனக்கு உதவ மறுத்தவர்கள், அல்லது உதவ மறந்தவர்கள்.
எங்கள் என்றால் - நீயும் அதுவும். அந்த அது என்பது. எதுவாவகவும் இருக்கலாம். ஒரு அசையா பொருளாகவும் இருக்கலாம். ஆனால், அது நீ மிகவும் விருப்பபட்ட பொருள்.
Post a Comment