ஒரு சமூக அறிவியல் வகுப்பில்,
கடைசி பென்ச்சில் அமர்ந்து
எங்கள் ஊரின் தேவதைகள் பட்டியலை
உருவாக்கினோம்.
எங்கள் ஊரின் முதல் தேவதை
காணாமல் போனபோது,
நாங்கள் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு
எழுதிக்கொண்டு இருந்தோம்.
சங்கர் "எனக்கு அப்பொழுதே தெரியும்,
ஒரு நாள் கடற்கரையில்
ஜோடியாக பார்த்தேன்" என்றான்.
எங்கள் ஊரின் இரண்டாவது தேவதை
காணாமல் போனபோது,
எங்கள் கணித வாத்தியாரும்
காணாமல் போய் இருந்தார்.
பனிரெண்டாம் வகுப்பில்
கணிதத்தில் மதிப்பெண் குறைந்ததற்க்கு
இதுதான் காரணம் என்று
அனைவரையும் நம்ப வைத்தோம்.
எங்கள் ஊரின் முன்றாவது, நான்காவது தேவதைகள்
காணாமல் போனது,
கல்லூரி விடுதியில் தங்கி படித்துக்கொண்டு
இருந்த எனக்கு சில நாட்கள் கழித்தே தெரிந்தது,
இதன் பின்னர் தேவதைகள் யாரும்
காணாமல் போகவில்லை.
ஆனால், எங்கள் ஊர் தேவதைகள் கடத்தப்பட்டார்கள்.
"தேவதைகள் கடத்தப்படுகிறார்கள்"
என்று நாங்கள் கூச்சலிட்டதை ஊர்மக்கள்
யாருமே கண்டுகொள்ளவில்லை.
மாறாக பூக்கள் தூவி தேவதைகளை
வழியனுப்பினார்கள்.
எங்கள் ஊரின் கடைசி தேவதை அகல்யா
முதிர்கன்னியாக சென்ற மாதம்
தற்கொலை செய்துகொண்ட போது,
அவள் வயது 34.
இப்பொழுது தேவதைகள் இல்லாத ஊரில்,
தேவதைகளை பற்றி
எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
6 comments:
பனிரெண்டாம் வகுப்பில்
கணிதத்தில் மதிப்பெண் குறைந்ததற்க்கு
இதுதான் காரணம் என்று
அனைவரையும் நம்ப வைத்தோம்.
hi this line is really very super
-ragul
enna "தேவதையோ” onnnum puriyala :)
காதலையையும், திருமணத்தையும் மையபடுத்தி இதை எழுதியிருக்கிறேன்.
கடத்தபடுகிறார்கள் என்றால், திருமணம் நடந்து ஊரைவிட்டு போகிறார்கள்.
எங்க ஊர்ல இத வேற மாதிரி இல்ல சொல்லுவாங்க ...."எவன் கூடயோ ஓடி போயிட்டாலாம் ..."
அவ்வ்வ்வவ்.........................
///...."எவன் கூடயோ ஓடி போயிட்டாலாம் ..." //
தேவதைகள் எப்பொழுதும் ஓடி போவது இல்லை. அவர்கள் தவறாகா புரிந்து கொள்ளபடுகிறார்கள்.
// இப்பொழுது தேவதைகள் இல்லாத ஊரில்,
தேவதைகளை பற்றி
எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
//
அருமை :-)
Post a Comment