ரியால்டி ஷோக்களை அடுத்து புதிய வீதமான ஒன்று சமீப காலமாக உலாவ தொடங்கியுள்ளது. ஒழுங்கற்ற முறையில் கும்பலாக நடனமாடப்படும் Mob Dance அது. பெங்களூர் மும்பை டில்லி போன்ற நகரங்களில் வசிப்பவர் நீங்கள் என்றால், இது உங்களுக்கு மிகவும் அறிமுகமான ஒன்று. கொஞ்ச நாட்களுக்கு முன்னால் மும்பை இரயில்வே நிலையத்தில் நடந்த ஒரு மாஃப் நடனம் மிகவும் பிரபலம். அந்த நடனத்தை HD வடிவில் நீங்கள் இணையத்தில் பார்க்கலாம். (http://www.youtube.com/watch?v=Iyt16efRrBo)
Mob Dancing பற்றி தெரியாதவர்களுக்கு அதைப் பற்றி ஒரு சின்ன விளக்கம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடன கலைஞர்கள் மக்களோடு மக்களாக இருப்பார்கள். தீடிர் என்று எங்கிருந்தோ பாடல் ஒலிகள் கேட்கத்தொடங்கியவுடன், அந்த நடனக் கலைஞர்களில் சிலர் நடனமாட தொடங்கிவிடுவார்கள். மற்றவர்கள் மக்களோடு மக்களாகவே நின்றுக்கொண்டு இருப்பார்கள். பாடல் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத்தொடங்கியவுடன், மற்ற நடனக் கலைஞர்களும் அந்த நடனத்தில் பங்குக்கொள்ள தொடங்கிவிடுவார்கள். இதைப் பார்க்கும் மக்களும் உண்மையாகவே பார்வையாளர்கள்தான் நடனமாட ஆரம்பித்துவிட்டார்கள் என்று நினைத்து அவர்களும் அதில் பங்குபெற தொடங்கிவிடுவார்கள். இது தான் அந்த Mob Dancing.
கடந்த ஞாயிறு அன்று மாலை நீங்கள் Express Avenue'க்கு சென்றிருந்தால், இந்த மாஃப் நடனத்தை நீங்களும் நேரில் பார்த்திருக்கலாம். இதன் HD வடிவம் இன்னும் கொஞ்ச நாட்களில் இணையத்தில் வந்துவிடும் அப்பொழுது பார்த்துக்கொள்ளுங்கள்.
EA'வில் இந்த நடனத்தைப் நான் பார்த்துக்கொண்டு இருந்த போது, அருகில் நின்ற பெரியவர் சொன்னது "சந்தோஷத்தை கொண்டாட எப்பொழுதும் எதாவது காரணம் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது" என்றார். அவர் சொன்ன காரணம் எனக்கு புரியவில்லை, உங்களுக்கு??

No comments:
Post a Comment