Wednesday, February 4, 2009

நல்லவன் எனக்கு நானே நல்லவன்

மங்களூரில் ஸ்ரீ ராம சேனாவை சேர்ந்தவர்கள் Pub'ல் வன்முறை தாக்குதல் நடத்திய மறுநாள், ஆபிஸில் ஒரு நண்பர் சொன்னது " நேற்று டிவியில அந்த அடியை எல்லாம் பார்த்தியா? தலையில் நச்சு நச்சு வச்சான் பாரு.. செம அடி. வரிசையா எல்லா பெண்களையும் நிக்க வைத்து அடிச்சான். எல்லாம் Teen- age பொண்ணுங்க தான். இந்த Pub, Disco'வுக்கு வர பெண்களை எல்லாம் பார்த்து இருக்கியா?? பார்க்கவே ஒரு மாதிரி இருக்கும். அதுவும் தண்ணியடிச்சு அதுங்க அடிக்கிற ஆட்டம் இருக்கே. வரது எல்லாம் முக்கால்வாசி Pair'ஆ தான் வரும். எல்லாம் பணம் இருக்கிற திமிர். இதுங்கள எல்லாம் இப்படி தான் அடிக்கனும். இனிமே கொஞ்ச நாள் எவனும் Pub, Disco'னு போகமாட்டான் பாரு. இன்னும் ரெண்டு சாத்து சாத்தி இருக்கனும்."

கம்யூனிஸ்ட் தோழன் ராகுல் சில நாட்களுக்கு முன்னால் என்னிடம் சொன்னது ஞாபகம் வந்தது. "இப்ப இருக்கிற எல்லா பிரச்சனைக்கும் காரண்ம் உங்கள மாதிரி I.T பீப்பிள் தான்டா. எல்லாம் உட்கார்ந்த இடத்தில் பணம் சம்பாரிக்கும் திமிர்டா. உங்கள் யாருக்காவது உடல் உழைப்பு என்றால் என்னவென்று தெரியுமாடா?? என்னைக்காவது வேர்வை சிந்தி சம்பாரித்து இருக்கிங்களா. சும்மா இல்லாம ஊருல அமைதியா வேலை பார்க்கிற்வனையும் I.T பக்கம் வாடானு சொல்லி உசுப்பு எத்துறது. நீங்கள் எல்லாம் 1000 ரூபாய் வாடகை வீட்டை 5000 ரூபாய் தந்து பிடிச்சா, நாங்க எல்லம் எங்கடா போறது??. இப்ப எல்லாரும் விவசாயம் என்பதையே மறந்து போய்ட்டீங்க, இப்படியே போனா சாப்பிடற அரிசிக்கு என்ன பண்ணுவீங்க பார்போம். ஏன்டா எவனோ முகம் தெரியாத அமெரிக்கனுக்கு வேலை பார்க்க வெட்கமா இல்லை. பணம் தந்தா எதையும் செய்வீங்களா. I.T கம்பேனி'ல வேலை பார்க்கிற எல்லாரையும் நடுரோட்டில் நிக்க வைச்சு அடிக்கனும்."

12 comments:

mvalarpirai said...

இந்த கருத்துகள் உங்களுக்கு உடன்பாடா ? உங்க கருத்துக்களை நேரிடையா பதிவு செய்ய தைரியம் இல்லாம அவன் சொன்னான்..இவன் சொன்னானு போடுரீங்களா ?

அந்த கம்யூனிஸ்ட் நண்பருக்கு..மன நோய் சிகிச்சை தேவைனு நினைக்கிறேன்..அவரோட ரொம்ப பழகாதீங்க உங்களுக்கும் பரவ போகுது...

Arun said...

ஏழை மற்றும் மத்திய தர வர்க்கம் கொதிப்படைந்துள்ளது உண்மையே.
இதெல்லாம் எங்கள் நாட்டில் இல்லை என்று மனசாட்சி தொட்டு பொய் சொல்ல முடியாது..
Every thing cant be swiped under carpet...

Ree_mathi said...

2 thoughts ... I would like to catch the person who made the first comment and BEAT THE SHIT OUTTA (him) !!!!
and i could like to high-five Rahul ... I live in a welfare state and I know what it feels like... meaning what he is talking about ...

PS: Knowing what I know about you thru ur blog ... I would like to disagree with mvalarpirai ... your words are and will continue to be full of courage and life ... and i kno you ain't no coward either !!!!

சரவண வடிவேல் said...

@ mvalarpirai:
--------------

என் கம்யூனிஸ்ட் தோழர் சொன்ன கருத்துக்கு எனக்கு முழு உடன்பாடுஉண்டு. கண்டிப்பாக என் கம்யூனிஸ்ட் தோழருக்கு சிகிச்சை தேவை இல்லை. சொல்ல போனால் எல்லா I.T பீப்பிள்களுக்கும் தான் மன நோய் சிகிச்சை தேவை (இது என்னையும் சேர்த்துதான்). அப்புறம் இன்னொரு matter நண்பா.... நான் தைரியம் இல்லாதவன் தான், பயந்தவன் தான்.

@Arun:
=====
u r correct..

Every thing cant be swiped under carpet..

நேற்று டி.வியில் இலங்கை ராணுவ தளபதி சொல்கிறார், " அப்பாவி இலங்கை தமிழர்கள் யாருமே கொல்லபடவில்லை " என்று.

@Ree_Mathi;
-----------

ரொம்ப நாளாவே நான் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.... என் பதிவுகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்கு "மிக்க நன்றி"....

நீங்கள் சொன்னது சரி தான். யார் மனதையும் காயபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இதை நான் எழுதவில்லை.

mvalarpirai said...

உண்மையை சொன்னதுக்கு நன்றி...

என்னை பொருத்த வரை நான் ஒரு உலகவாசி... எனக்கு சோறு போடும் நான் செய்யும் தொழில் எனக்கு தெய்வம்...அதை இழிவு படுத்த நினைப்பவர்களை நான் கண்டிப்பா கருத்தின் வழியே எதிர்ப்பேன்....வன்முறை எல்லாம் நமக்கு பிடிக்காது...

நீங்க வெட்கப்பட்டுகிட்டு ஏங்க இந்த அமெரிக்க கம்பெனிக்கு வேலை செய்றீங்க..? வேலை விட்டுட்டு விவசாயம் பார்க்க வேண்டியதுதானே!
உங்க கம்யூனிஸ்ட் நண்பர் என்ன விவசாயம் பார்க்கிறாரா ...? மண்வெட்டி தூக்கினாதான் உழைப்புனு இல்லைங்க ! நேர்மையா யாரையும் ஏமாற்றாமா அறிவை பயன்படுத்தி உழைக்கிறதும் உழைப்பு தான்...உங்க கருத்துபடி பார்த்தா ...உடலால உழைக்காத யாரும் இந்த உலகத்திலே வாழ தகுதி இல்லை போல (அப்ப வாத்தியார், அரசு அலுவலர்கள்,வங்கி ஊழியர்கள் , ...இப்படி சொல்லிட்டே போகலாம்..அவங்களாய் எல்லாம் உழைக்காம சாப்பிடுறாங்களா ? )

"ஏழை மற்றும் மத்திய தர வர்க்கம் கொதிப்படைந்துள்ளது உண்மையே" - I-T பார்த்து ஏங்க கொதிப்படனும் ? எனக்கு புரியலை ....
அவர்கள் (எங்கள் - என்று சொல்லனும் நானும் முன்னாள் ஏழை,இன்னாள் மத்திய தர வர்க்கம்) அரிசியையா புடுங்கி நாங்க சாப்புடுறோம் ? இவங்க உழைத்த காசை டாஸ்மார்க் புடுங்குகிறது , சினிமா புடுங்குகிறது..இதைப்பார்த்து கொதிப்படையாம, I-T பார்த்து ஏங்க கொதிப்படனும் ? எனக்கு புரியலை.
இந்திய கம்பெனிகளுக்கு தாங்க நிறைய பேர் வேலை செய்றாங்க (infosys,wipro,tcs..satyam) ! அவுங்க இந்திய அரசுக்கு எவ்வளவு வருமானவரி கட்றாங்க தெரியுமா உங்களுக்கு..? அமெரிக்காவுக்கு மட்டும் இல்லைங்க ,இந்திய நிறுவனங்கள் மற்றும் இந்தியர்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களுக்கும் நம்மாளுங்க வேலை செய்றாங்க ( SBI,AIRCEL,TNEB,ICICI,HSBC,INDIAN OIL,BSNL,AIRTEL,Relaince.....etc) இவங்க எல்லாம் உங்க கம்யூனிஸ்ட் கண்களுக்கு தெரியாதா ?

நீங்க என்னமோ I-T la எல்லாரும் சும்மாவே உட்கார்ந்து சம்பாதிக்க மாதிரி பேசுறீங்க...நீங்க இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறீங்கனு நினைக்கிறேன்...முதுகு வலி வந்துருக்கா உங்களுக்கு ? யாரோ சில பேரு ஒப்பி அடித்து சம்மாதித்த...அது எல்லாத்துறையிலும் இருக்குதுங்க ! அதற்காக எல்லாரையும் அடிச்சுடுவீங்களா...வேலையில்லா திண்டாட்டம் ஓரளவு குறைந்ததற்கு காரணமே I-T தாங்க. அதனால ஏற்படுகிற நன்மைகள் ஏராளாம்...ஒரு சில குறைகளை பூதக் கண்ணாடி போட்டு பார்க்காம..நன்மைகளை வரவேற்க்க பழகுங்க ...

நீங்க தப்பா புரிந்த விசயங்களை எல்லாம் ஒரு வாத்ததிற்காக உண்மைனு வைத்து கொள்வோம்...
I-T ல இருக்கிற கிட்ட தட்ட 10 லட்சம் பேரு ராஜினாம செய்திட்டா , அடுத்த நாள் சாப்பாட்டுக்கு வழி இருக்க இந்த நாட்டிலே ....என்ன சொல்வாரு உங்க நண்பர்..வேலை இல்லா பட்டதாரிகள் எல்லாம் சுய தொழில் செய்யனும் அப்படினு lecture அடிப்பாரு....சுயதொழில் செய்ய வங்கி கிட்ட போய் பாருங்க அவ்ங்க என்ன என்ன கேள்வி கேற்ராங்கனு..நான் போயிருக்கேன்...கடைசில என்னோட I-T நிறுவன ஊதிய சீட்டை வைத்து personel loan தான் எடுத்து கொடுத்தேன் Msc படித்த எங்க அண்ணாவோட சுயதொழிலுக்கு !
கடைசிய simpla ஒரு கேள்வி கேட்கிறேன்..நாங்க I-T லா வேலை பார்த்து சம்பாதிப்பதினால் உங்க நண்பருக்கு என்ன பிரச்சனை ..? ஒரே பிரச்சனை வாடகை. சரியா ?..அதுக்கு மூலகாரணம் என்ன ?
1. வீடுகள் பற்றா குறை...2. வாடகை வசூலுக்கென்று ஒரு முறையான் சட்டம் இல்லை, இருந்தாலும் கடைப்பிடிப்பது இல்லை 3. சென்னைக்கு ஒரு வருடத்தில் குறைந்தது 50 ஆயிரம் பேரு வர்றான்..அதுக்கான முன்னேற்பாடு எதாவது அரசு செய்யுதா..இல்லை... இப்படி மூலகாரணத்தை எல்லாம் விட்டுட்டு..வேண்டாதவன் பொண்டாட்டிக்கு கால் பட்டா குத்தம் கை பட்ட குத்தம் என்கிற மாதிரி I-T யெ குற்றம் சொல்லாதீங்க ...
கிட்ட தட்ட I-T பார்த்து சொல்லப்படுகிற எல்லா குற்ற சாட்டுகளுக்கும் பதில் அளிக்கும் வண்ணம் ..நானும் IT - துறையை பற்றி எழுதி இருக்கிறேன்
(http://m-valarpirai.blogspot.com/2009/01/it.html) ...நேரம் இருந்தால் ஒரு நடு நிலையான மனதுடன் படியுங்கள்..உங்கள் நண்பரையும் படிக்க சொல்லுங்கள் உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்......
எனக்கு வன்முறை மீது நம்பிக்கை இல்லைங்க..கருத்துக்கு கருத்து மோதிப் பாப்போம்..

சரவண வடிவேல் said...

@ mvalarpirai:
===============

வணக்கம் சார்... நீங்கள் இந்த அளவு பெரிய Reply செய்ததால் நானும் பெரிய அளவு பதிவு போடும் கட்டாயாத்தில் உள்ளேன். அதற்கு முன்:: உங்கள் பதிவுகளையும் படித்தேன். நன்றாக எழுதியுள்ளீர். எனக்கு மிகவும் பிடித்த, என்னை மிகவும் பாதித்த படங்களில் ஒன்று 'கற்றது தமிழ்'. அந்த படத்தில் சொன்னது போல் இதுவரை எந்த ஒரு தமிழ் படத்திலும் காதலை சொன்னது இல்லை. இதை பற்றி உங்கள் பதிவில் தனியாக reply செய்ய இருப்பதால் அங்கு இதை பற்றி விவாதித்து கொள்வோம்.

///" உடலால உழைக்காத யாரும் இந்த உலகத்திலே வாழ தகுதி இல்லை போல (அப்ப வாத்தியார், அரசு அலுவலர்கள்,வங்கி ஊழியர்கள் , ...இப்படி சொல்லிட்டே போகலாம்..அவங்களாய் எல்லாம் உழைக்காம சாப்பிடுறாங்களா ? ) "////.............

இவர்கள் அனைவருக்கும் மாதம் சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா??..

//"இவங்க உழைத்த காசை டாஸ்மார்க் புடுங்குகிறது , சினிமா புடுங்குகிறது..இதைப்பார்த்து கொதிப்படையாம, I-T பார்த்து ஏங்க கொதிப்படனும் ?"///....

அப்படி என்றால் I.T'ல எவனும் (எவளும்) தண்ணி அடிப்பது இல்லையா??. சினிமாவுக்கு போவது இல்லையா??.. கேட்டால் Tension என்பீர். எல்லாரும் தான் தண்ணியடிக்கிறார்கள். அவனுக்கு டாஸ்மார்க் என்றால் இவனுக்கு Bar, அவனுக்கு ரோகிணி, தேவி என்றால் இவனுக்கு சத்தியம், மாயாஜால்.. அந்த அளவு தான் வித்தியாசம்..

//"முதுகு வலி வந்துருக்கா உங்களுக்கு ?"//.....

எங்க ஊரில் ஒருவர் எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து மள்ளிகை கடையில் கணக்குபிள்ளையாக வேலை பார்த்தார்.. கணக்குபிள்ளை வேலை என்றால் என்னவென்று தெரியும் அல்லவா??.. தரையில் உட்காந்து கொண்டு முன்னால் இருக்கும் சின்ன ஸ்டுலில் கணக்குகளை எழுதி கொண்டே இருக்க வேண்டும். கடையில் உள்ள அனைத்து சமான்களின் விலையையும், சரக்கு வந்த நாளையும், மீதம் இருக்கும் சரக்கு என்று அனைத்தையும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். என்னுடைய பத்தாம் வகுப்பு வரை என் கணக்கு பாடத்திற்கு அவர்தான் வழிக்காட்டி. அவர் அறிவுக்கும் ஞாபக சக்திக்கும்நிகர் யாருமே இல்லை. பல நாட்கள் முதுகுவலியால் அவதிபட்ட அவர் முதுகில் கேன்சர் வந்து ஒரு நாள் இறந்தே போனார். அவர் வேலையை போல் உங்கள் வேலையும் கடினம் என்று மணசாட்சி தொட்டு சொல்லுங்கள்..???

நீங்கள் சொல்லலாம் திறமை இருக்கிறவன், அறிவு இருக்கிறவன், Brain இருக்கிறவன் சம்பாரிக்கிறான் என்று. ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இரண்டு பேர் தான் இருக்கிறார்கள். ஒருவன் வாய்ப்பு கிடைத்தவன், இன்னொருவன் வாய்ப்பு கிடைக்காதவன் அவ்வளவு தான், இந்த வாய்ப்பு கிடைத்தவன் வாய்ப்பு கிடைக்காதவனை பார்த்து நக்கலாக சிரிப்பதை தான் நிறுத்த சொல்கிறேன்.

நீங்க சொன்னது போல் எடுத்துக்காட்டுக்கு I.T'ல இருக்கிற அனைவரும் நீக்கபடுகிறார்கள் என்று வைத்துகொள்வோம். அப்பொழுது I.T'யை பற்றி தப்பாக பேசும் முதல் ஆளும் நீங்களாக தான் இருப்பீர்கள்.
I.T ppl'யை சார்ந்து வேலை பார்க்கின்ற அனைவருக்கும் ஒரு சுயதொழில் இருக்கிறது. ஆனால் I.T ppls'னின் நிலையை நினைத்து பாருங்கள்.

//".நாங்க I-T லா வேலை பார்த்து சம்பாதிப்பதினால் உங்க நண்பருக்கு என்ன பிரச்சனை ..?"//...

இது என் நண்பருக்கு மட்டும் உள்ள பிரச்சனை இல்லை, அனைவருக்கும் தான்.. உங்களால் economic imblance உண்டாகிறது. வீடு என்று மட்டும்இல்லை, எல்லா பொருள்களுக்கும் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுத்து வாங்க ரெடியாக இருக்கிறிர்கள். அதனால் விலையும் ஏற தான் செய்யும். அப்பொழுது எழை மக்களின் நிலை !!!!!!!!!..

இன்னொரு விசயம் தெரியுமா.. இப்பொழுது எல்லாம் வங்கிகளில் I.T மக்கள் personel loan கேட்டு போனால் ரொம்ப யோசனை செய்றாங்க. நீங்கள் அடித்த பந்து மீண்டும் உங்கள் பக்கமே வந்துக்கொண்டு
இருக்கிறது. இதற்க்கும் நீங்கள் அரசாங்கத்தை குறை சொல்லலாம் !!!!!!!!.

உங்கள் பதிவில் I.T மக்கள் யாருக்கும் தாழ்ந்தவர்களும் இல்லை , உயர்ந்தவர்களும் இல்லை என்று எழுதியிருக்கிங்க. ஆனால் I.T'யில் வேலை பார்க்கும் அனைவரும் "நான் தான் மற்றவர்களை உயர்தவன்" என்று நினைக்கிறார்கள். இது அதிகம் சம்பாரிக்கும் மக்கள் அனைவருக்கும் உள்ள இயல்பு தான். அது தான் பிரச்சனையின் காரணமே.

Arun said...

@ALL
கோடை நெருங்குவதால் வரும் பிரச்சனைதான் இது... கொஞ்சம் தலையில் எல்லோரும் எழுமிச்சை
தேய்த்து குளித்தால் பித்தம் சரியகும்...
சில பேர் ஆகதும்பான்.. அவனுக்கெல்லாம் ஆகாது...

Arun said...

குறைகள் மனிதன் இருக்கும் மட்டும் இருக்கும்...
மறுபடியும் சொல்கிறேன்

"ஏழை மற்றும் மத்திய தர வர்க்கம் கொதிப்படைந்துள்ளது அப்பட்டமான உண்மையே"

எங்கள பாத்து ஏன் கொதிப்படையனும்னு
நீங்க கேட்பது உங்கள் கருத்து.
சமுதாய மற்றும் பொருளாதார ஏற்ற தாழ்வு இருக்கும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இருக்கும் பிரச்சனைகள்தான் இது.

"எங்கள பாத்து ஏன் கொதிப்படையனும்" என்று வளரும் நாடுகளில் ஒரு வளர்ந்துவிட்ட மிகச்சிறுபான்மை சமூகம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

அத்தனைக்கும் தவறான பொருளாதார கொள்கைகள் தவறான அரசியல் வழிகாட்டிகளால் நடத்தப்படுவதே...

இத்தனைக்கும் ஒரே தீர்வு அடுத்த தேர்தலில் அலுப்பு பார்க்காமல் காலையிலேயே போய் தெளிவாக சரியன நபருக்கு ஒட்டு போட்டுவிட்டு வருவதுதான். இல்லையா... 49ஓ போடுங்கள். முடிந்தால் நன்பர்களுக்கும் சிபாரிசு செய்யுங்கள்.

பேசியே யாரையும், சினிமாவில் காட்டுவதுபோல், திடீரென மனதை மாற்ற முடியாது.

சரவண வடிவேல் said...

நீங்க கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் கொஞ்சம் யோசனை செய்து இதை டைப் செய்ததால் "Delay" ஆயிடுச்சு மன்னித்துக்கொள்ளவும்.

///I-T la உடல் கஸ்டம் ( முதுகு வலி ) விட mental வலி அதிகம்///. இது எதனால் வருது தெரியுமா.. உடலை வருத்தி வேலை செய்யாததால்.

///எனக்கு 3k கொடுத்தாலும் ,30k ///.. எனது நண்பன் கம்பேனியில் மூவாயிரம் சம்பளத்தில் ஆட்கள் தேவை.. நீங்க ரெடியா பாஸ்.

///ஆள் பற்றா குறையால மற்ற துறைகளோட சம்பளமும் உயர்ந்திருப்பதாக///...... economic imbalance மறைமுகமா இப்படி ஆரம்பிக்குது. ஒருவன் உங்களால் அதிகம் சம்பளம் வாங்குகிறான் நல்லது, ஆனால் முறைமுகமாக எத்தனை பேர் பாதிக்கபடுகிறார்கள் என்பது மீண்டும் அந்த economic imbalance example வைத்து பார்த்தால் தெரியும்.

//நாங்க அடித்த படித்த பந்து //... அது சும்மா அந்த நேரத்தில் ஒரு ரைமிங்காக சொன்னது அதை விட்டுறங்க நண்பா......

//இந்திய நிறுவனங்கள் மற்றும் இந்தியர்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களுக்கும் நம்மாளுங்க வேலை செய்றாங்க ( SBI,AIRCEL,TNEB,ICICI,HSBC,INDIAN OIL,BSNL,AIRTEL,Relaince.....etc) இவங்க எல்லாம் உங்க கம்யூனிஸ்ட் கண்களுக்கு தெரியாதா ?
///..... Relaince'யின் கம்பேனியின் முதல் எதிரி யாரு தெரியுமா... கம்யூனிஸ்ட் தான்...

நீங்க கேட்ட மற்ற கேள்விகளுக்கு என்னால் சரியான பதில் தர முடியாமல் போனதுக்கு வருந்துகிறேன்.... நான் இந்த பதிவை யார் மனதையும் காயபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதவில்லை... இந்த பதிவிற்க்கு இந்த அளவு எதிர்வினை வரும் என்று கூட நான் எதிர்ப்பார்க்கவில்லை.. நான் இத்துடன் இந்த கருத்து மோதலை முடித்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். சில கேள்விகளுக்கு எப்பொழுதும் யாராலும் பதில் அளிக்க முடியாது. அல்லது எப்பொழுதும் யாராலும் அனைவராலும் எற்றுக்கொள்ளும் பதிலை அளிக்க முடியாது.

ஒருவேளை என்னுடைய கம்யூனிஸ்ட் தோழர் இந்த பதிவை படிக்க நேர்ந்தால் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

என்னோட கருத்துகளுக்கு மதிப்பளித்து பதில் சொன்னதுக்கு மீண்டும் நன்றி................

பேசியே யாரையும், சினிமாவில் காட்டுவதுபோல், திடீரென மனதை மாற்ற முடியாது............................... :)

mvalarpirai said...

சரி..NEXT meet பண்றேன்..... :-)

கடைசிய ஒரு விளக்கம்..என்னோட 3k 30K கருத்தை நான் விளக்கமா சொல்லைனு நினைக்கிறேன் ..நான் என்ன சொல்ல வந்தேனா...

நான் I-T பத்தி குறை சொல்ல மாட்டேன் ..ஏன்னா நான் சம்பளம் இல்லாம கூட நான் வேலை பார்த்து இருக்கேன்..3k வாங்கும் போதும் அதை அளவு interest ஒட தான் பார்த்தேன்..இப்பவும் அதே அளவு interest ஒட தான் பார்க்கிறேன்...இப்ப எங்க கம்பெனியில global economic crisis la சம்பளத்தை குறைத்தாங்கனு வச்சுகோங்க அதே அளவு interest ஒட தான் பார்ப்பேன்....இல்லை என்னை வேலைவிட்டு தூக்கிட்டான் வச்சுகொங்க..நான் மறுபடியும் சம்பளம் இல்லாம start பண்ணிலாலும் அதே அளவு interest ஒட தான் பார்ப்பேன்..உடனே வா என் நண்பரொட கம்பெனிக்குனு கூப்பிடாதீங்க என்னை வேலைவிட்டு தூக்கினா வறேன்..:-)

அப்புறம் உங்க நண்பரடோ கம்பெனி விலாசம் கொடுங்க எங்க கல்லூரி juniors வேலை தேடிட்டு இருக்காங்க அவங்களுக்கு உதவியா இருக்கும்..

Subramania Athithan said...

நீங்கள் இருவரும் எதிர்மறையான கருதுக்களை சொன்னது நன்மைக்கே. சிந்தனை வளர்ச்சிக்கே . ஏனெனில் கையாண்ட தலைப்பு அப்படிப்பட்டது.
IT இல் விசுவாசமாக வேலை செய்யும்,வருமானத்தை சிக்கனமாக செலவு செய்து வாழ்கையில் முன்னேற துடிக்கும் நல்ல உள்ளம் கொண்ட யாருக்கும் அதை பற்றி(அதாவது தன் வேலையை(கடவுளை) பற்றி குறை கூறுவது பிடிக்காது, பிடிக்கவும் கூடாது. (lik valarpirai sir do). பிறர் ஏளனமாக எண்ணும் அளவிற்கு அது வெறும் சீட் தேய்கின்ற வேலை அல்ல.(those who r workin in IT wil know dat)

ஆனால் communism கொள்கைப்படி பார்க்கையில் imbalance ஏற்படுவது உண்மையே. தராசு ஒரு பக்கம் சரிவது போன்றது . பொதுவான கண்ணோட்டத்தில் பார்த்தால் ஏழைகள் வயிறேறிவதில் தவறு இல்லை. இதில் கலாச்சார சீரழிவு வேறு.. :) பெண்கள் jeans tshirt அணிவதை வெறுக்கும் நாம் ஆண்கள் nike shoes,raybon glasses அணிவதையும் இந்நேரத்தில் குறை சொல்லியே ஆக வேண்டும் :) ஆண்களும் பெண்களும் சம உரிமை எல்லாவற்றிலும் கொண்டாடும் இக்காலத்தில் ஆண்டவன் மட்டுமே வருங்காலம் அறிவான். :)
நல்லொழுக்கமும் நல் எண்ணமும் நம் மக்களிடம் நிலைப்பட,சமநிலை எல்லாவகையிலும் ஏற்பட வேண்டுகிறேன் .

P.S: for saravana:- sorry for d delay machi(no, hereafter saga.. OK :) ) jus now readin all ur posts and commenting

சரவண வடிவேல் said...

///ஆண்களும் பெண்களும் சம உரிமை எல்லாவற்றிலும் கொண்டாடும் இக்காலத்தில் ஆண்டவன் மட்டுமே வருங்காலம் அறிவான். :) ////

நண்பா..சிக்கனமாய் சொன்னாலும் சரியா சொன்னாய்.. நீ சொன்ன flow எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.