யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லை
தந்தையிடம் மகன் என்ற உரிமையுடன்
பேசத் தெரியவில்லை
அக்காவிடம் தம்பி என்ற பாசத்தோடு
பேசத் தெரியவில்லை
நண்பனிடம் நட்போடும், காதலியிடம் காதலோடும்
தோழியிடம் தோழமையோடும் பேசத் தெரியவில்லை
தெரியாதவர்களிடம் வழிப்போக்கனைப் போலவும்,
நன்கு அறிந்தவர்களிடம்
கடைசி சந்திப்பை நினைவு கூர்ந்தும்
பேசத் தெரியவில்லை
வெற்றி பெற்றவனை பாராட்டியும்
தோல்ல்வி அடைந்தவனுக்கு ஊக்கம் அளித்தும்
அழுகின்றவனை சந்தோஷ படுத்தியும்
பேசத் தெரியவில்லை
முதலாளியிடம் அடிமையை போலவும்,
அடிமையிடம் முதலாளி போலவும்
பேசத் தெரியவில்லை
எனக்கு யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லை
ஆம், இவை எல்லாம் நீங்கள் என்னிடம் சொன்னது.
3 comments:
yaru??unaka paesa therila??Nambitane!!
may be dis is d only reason of dis post :) காதலியிடம் காதலோடும்
தோழியிடம் தோழமையோடும் பேசத் தெரியவில்லை.. lol :)
அது எப்படிங்க? நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரிஞ்சு போயிடுது... உண்மைதான்.
Post a Comment