Wednesday, March 3, 2010

சாரு, நித்யா, நான்

"இப்பொழுது சாருவுக்கு தேவை, அவருடைய காயங்களுக்கு மருந்து அளிக்கும் வார்த்தைகள்தான். உங்களால் மருந்தை தரமுடியாவிட்டாலும் பரவாயில்லை, தயவுசெய்து அவர் காயத்தை அதிகரிக்காதீர்கள்."

இனிமேல் உயிரே போனாலும் இந்த வலைப்பதிவு பக்கமே வர கூடாது என்று நினைத்து இருந்தேன். ஆனால் இப்பொழுது நான் அமைதியாக இருந்தால் பின் எப்பொழுதும் என்னால் இதைப்பற்றி எழுத முடியாது.

நான் எனது பதிவுகள் அனைத்தையும் அழித்து இரண்டுமாதங்கள் ஆக போகிறது. "ஏன் எழுதுவது இல்லை??" என்று யாரும் என்னிடம் கேட்கவும் இல்லை. இப்படிபட்ட so called fans இருக்கின்ற என்னாலயே எதையும் வெளிப்படையாக எழுத முடியவில்லை என்றால், சாரு போன்ற எழுத்தாளர்கள் நிலைமையை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.

எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் முதலில் இருப்பவர் சாரு. அதைபோல் எனக்கு பிடிக்காத எழுத்தாளர்களில் முதலில் இருப்பதும் சாருதான். எனென்றால் சாருவால் இரண்டுவித extreme'லயும் எழுத முடியும். கதைளை தேடி அவர் எங்கும் போவது இல்லை. அவர் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையே கதையாக எழுதுகிறார். "காமரூப கதைகள்" காரணமாக அவர் தற்கொலை வரை சென்றுஇருக்கிறார் என்றால், அவர் எந்தளவு வெளிப்படையாக எழுதுகிறார் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். செக்ஸ், காமம் என்று நாம் பேசவே அச்சபடும் வார்த்தைகளை, அவரால் சுலபமாக தனது வாழ்க்கையில் நடக்கும் விசயங்களுடன் வெளிப்படையாக எழுத முடிகிறது. மற்றவர்கள் மனதை காயப்படுத்தும் வார்த்தைகள் மட்டுமே கெட்ட வார்த்தைகள் என்று எனக்கு புரியவைத்தவர் சாரு. சாருதான் என் மனதிலும், தோன்றத்திலும் பல மாற்றங்களை எற்படுத்தியவர் என்பதை பலரிடம் பெருமையுடன் சொல்லி இருக்கிறேன்.

மனதில் உள்ளதை வெளிப்படையாக எழுதுவதால் எற்படும் பிரச்சனைகளை, சாரு தொடர்ந்து சந்தித்து கொண்டுதான் வந்தார்.

சாருவின் எழுத்தை கடந்த இரண்டு வருடங்களாகவே தொடர்ந்து படித்து வருகிறேன். கடைசி நான்கு மாதங்களாக அவர் நித்யானந்தாவை புகழ்ந்து கட்டுரைகள் எழுதிக்கொண்டு வந்தார். இவைதான் இப்பொழுதைய பிரச்சனை.

"சன் பிக்சர்ஸ்" பெருமையுடன் வழங்கிய அந்த சீன் படத்தை பார்த்து தமிழகமே அதிர்ச்சியில் உள்ளது. இத்தனை நாட்களாக தாங்கள எமாற்றபட்டு உள்ளோம் என்பதை விட, "ஆர்" என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் அந்த நடிகையில் பெயர் என்னவாக இருக்கும் என்பதை பற்றிதான் மிகவும் தீவிரமாக பேசிக்கொண்டனர்.

எல்லாரும் எமாந்ததை போலவே சாருவும் எமாந்து இருக்கிறார். அனைவரையும் உடனே நம்பிவிடும் சாரு, நித்யானந்தாவிடம் கொஞ்சம் அதிகமாகவே எமாந்துவிட்டார், மிகவும் அதிகமாகவே அவரை பற்றி புகழ்ந்தும் எழுதிவிட்டார். நித்யானந்தா செய்த துரோகத்தை சாருவால் கண்டிப்பாக தாங்கி கொள்ளமுடியாது. இதை பற்றி கண்டிப்பாக சாரு தற்பொழுது வருத்தபட்டுக்கொண்டு இருப்பார்.

இப்பொழுது சாருவுக்கு தேவை, அவருடைய காயங்களுக்கு மருந்து அளிக்கும் வார்த்தைகள்தான். உங்களால் மருந்தை தரமுடியாவிட்டாலும் பரவாயில்லை, தயவுசெய்து அவர் காயத்தை அதிகரிக்காதீர்கள்.

ஒரு எழுத்தாளனை பற்றி சாரு சொன்னது நினைவில் வருகிறது. "என்னுடைய எமாற்றங்கள் மற்றும் தனிமையை நான் எழுத்தால் கடந்துவிட்டேன், பாவம் அவனுக்கு எழுத்தால் கடக்க முடியவில்லை, தற்கொலை செய்துக்கொண்டு விட்டான்." நித்யானந்தாவின் துரோகத்தின் காரணமாக சாரு எழுத்தின் தீவிரம் இன்னும் அதிகமாகும் என்று நம்புவோம்.

6 comments:

Unknown said...

welcome back ... was wondering what was going on ??

May I ask ... ena achu ... yen evalo naala ezhuthala ?

சரவண வடிவேல்.வே said...

I wann to tell u a lot. I am angry on me. I am very much angry on ppls who r surrounding me.

One day u comment abt me right "u r not the one, what u r writing". its 100% correct reemathi.

I am back now. No one can stop me from writing.

நிலவுக்காதலன் said...

dats it. dats the spirit :) the real boost shud come from us. its permanent. even if it comes from ur lover, at the end of day u wil get frustrated we are doing all/changing attitude for them nu:)so keep writing:)

comments only for u not for this post. ssh silence :)

சரவண வடிவேல்.வே said...

"even if it comes from ur lover, at the end of day u wil get frustrated we are doing all/changing attitude for them nu
"...

சகா, இதுல எனக்கு உன்னைமாதிரி நிறைய அனுபவும் இல்லடா..

ஆனால், நம் மனதிற்கு பிடித்த ஒருவருக்காக நம்மை மாற்றிகொள்வது ஒரு சுகமான அனுபவம். அதை எழுத்தால் சொல்லமுடியாது.

நிலவுக்காதலன் said...

"ஆனால், நம் மனதிற்கு பிடித்த ஒருவருக்காக நம்மை மாற்றிகொள்வது ஒரு சுகமான அனுபவம். அதை எழுத்தால் சொல்லமுடியாது."

100% agree. u ll be in heaven wen u love someone more than YOURSELF. bcoz of dis only LOVE existing in each n evry living/non living (bikes,mob:)) things al thro thes years.

y i said frustration s only d cases wen ur lover gives slight angry luk n u ll be broken into pieces :) so to be happy evr, be ur self n choose ur kinda gal. choosin doesnt mean lik goin beyond it. it wil come in ur life n make u not u :) don understand rite.:) LOVE it n FEEL it :)

தனி காட்டு ராஜா said...

//"ஏன் எழுதுவது இல்லை??" என்று யாரும் என்னிடம் கேட்கவும் இல்லை. இப்படிபட்ட so called fans இருக்கின்ற//

எனக்கும் இந்த மாதிரி so called பான்ஸ் நெறய இருக்கங்க ...
அவ்வ்வ்வ்வ்வ்...................