நம் வருங்கால வல்லரசு இந்தியாவின் வருங்கால பிரதமர் என்று எண்ணப்படும், மோடி (என்கின்ற) மோதி பற்றிய ஒரு பதிவு எழுத வேண்டும் என்று ரொம்ப நாட்களாகவே ஆசை.
சரி, அந்த ஆசையை நிறைவேற்றிவிடுவோம் என்று உட்கார்ந்தால், மனதில் ஒரு சின்ன சந்தேகம்.
மோதி-யா அல்லது மோடி-யா?
சற்று முன் பார்த்த "புதிய தலைமுறை" தொலைக்காட்சியில் "மோதி" என்றுதான் சொன்னார்கள். ஆனால், உள்ளதை உள்ளபடி சொல்லும் ஒரே நாளிதழ் என்று என் அப்பா நம்பும் "தினமலர்" செய்தித்தாளில் "மோடி" என்றுதான் போடுகிறார்கள்.இப்போது நான் நம் வருங்கால பிரதமரை எப்படி அழைப்பது?
"மோடி"யா அல்லது "மோதி"யா?
ஒருவேளை நான் அவர் பெயரைத் தவறாக எழுதிப் போய், நாம் அனைவரும் நினைப்பது போல் அவர் பிரதமராகி, இந்தப் பெயர் பிரச்சனை அவருக்குத் தெரிய வந்தால், என் நிலைமை என்ன ஆகும்?
அவ்வளவு பெரிய கலவரத்தையே நம் இந்திய மக்கள் நினைவிலிருந்து அழிக்கச் செய்தவர் ஆயிற்றே?
இப்போது கூட நான் அந்தக் கலவரத்தின் பெயரையும் ஆண்டையும் நினைவுக்குக் கொண்டு வர முயற்சிக்கிறேன். ஆனால் முடியவில்லை.
அப்படிப்பட்டவரின் பெயரை நான் தவறாக எழுதினால் நன்றாக இருக்குமா?
ஆகவே, மோடி என்கின்ற மோதியைப் பற்றியோ, அல்லது மோதி என்கின்ற மோடியைப் பற்றியோ, இப்போதைக்கு எந்தப் பதிவும் எழுதும் எண்ணம் இல்லை.
வாழ்க பாரதம்.

2 comments:
good one.
rgds
bala
good one.
rgds
bala
Post a Comment