Monday, May 18, 2009

என் நாடும் என் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்

நேற்று நண்பன் கனடாவில் இருந்து போன் செய்து “ பிரபாகரன் செத்து போய்விட்டார் என்று CNN-IBN Website’ல வந்துயிருக்கிறது. செய்தி உண்மையா?? “ என்றான். நானும் CNN-IBN Website'ல செய்தியை பார்த்து உறுதி செய்துவிட்டு தொலைக்காட்சியில் ஒவ்வொரு செய்தி சேனலாக மாற்ற ஆரம்பித்தேன்.

எல்லா செய்தி சேனல்களிலும் புதிய மக்களவையில் யார் யாருக்கு என்ன அமைச்சர் பதவி என்பதை பற்றிதான் செய்திகள் வெளியிட்டுக்கொண்டு இருந்தனர். அவர்களுக்கு நமது அண்டை நாட்டில் நடுக்கும் பிரச்சனைகள் பற்றி அக்கறை இல்லை. ஏன் என்றால் இப்பொழுது மக்களவை செய்திக்குத்தான் விளம்பரம் கிடைக்கும்.

ஆங்கில செய்தியாவது பரவாயில்லை, கலைஞர் மற்றும் சன்’னில் ” திமுக கூட்டணிக்கு கிடைத்த் வெற்றி தமிழ்மக்களுக்கு கிடைத்த வெற்றி “ என்று ஒவ்வொரு தலைவர்களும் பேட்டி தந்துக்கொண்டு இருந்தனர்.

பாவம் அவர்கள் அனைவருக்கும் இலங்கை தமிழர் என்ற வார்த்தையே மறந்துவிட்டது. சீமானை நினைக்கும் போது பாவமாய் இருந்தது. தமிழக மக்கள் தி.மு.க கூட்டணிக்கு 28 இடங்களில் வெற்றி வாங்கித்தந்து இருக்கிறார்கள். நம் தமிழனுக்கு தனது சகோதரன் இலங்கையில் துயரம் அடைவது பற்றி சிறிதும் வருத்தம் கிடையாது, தன் ஒட்டுக்கு பணம் வந்தால் போதும். கற்றது தமிழ் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி “இன்னைக்கு நாற்பது ஆயிரம் பணத்திற்காக பெயரை மாற்றுவாய், நாளைக்கு 5 லட்சம் பணம் தந்தால்...”

வேறு என்ன நான் சொல்ல “ என் நாடும் என் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ”

6 comments:

யூர்கன் க்ருகியர் said...

மனசே சரி இல்லீங்க சார். வரும் காலம் நம்மை தூற்றும் என்பது மட்டும் நிச்சயம்!

Rangs said...

naasama poyaachu

-L-L-D-a-s-u said...

என் நாடும் என் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் . I am ashamed of being recognized as Indian

Kumar said...

WE LOST EVERYTHING...NOTHING TO SAY...

emmvee said...

இந்த நாசமாப்போன அரசியல்வாதிகள் தமிழர்களுக்காக என்ன செய்தார்கள் . அனைத்தும் கபட நாடகம். இனிமேல் தந்தி அனுப்பினால் என்ன அனுப்பாவிட்டால் என்ன .தேர்தல் முடிந்து விட்டது. யாரை அமைச்சர் ஆக்கலாம் என்பதுதான் கவலை. தமிழ்நாட்டு மக்களுக்கோ சீரியல் மற்றும் ஏர்டெல் சின்கரை பற்றி கவலை. டெல்லிக்கோ ராகுல் வருவாரா இல்லையா என்பதுதான் கவலை .

இப்போது எங்கே போனார் திருமாவளவன். ?

இறந்துகிடக்கும் என் தமிழின மக்களை பார்க்கும் போது தொண்டை அடைக்கிறது. இவர்களை வைத்து வ்யாபாரம் பண்ணிய சன் மற்றும் கலைஞர் டிவியை புறக்கணியுங்கள்.

இலங்கை தமிழர்களே தமிழ்நாடு அரசியல்வாதிகள் சுயரூபத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுங்கள்.

தமிழன் அஹ பிறந்தும் ஏதும் செய்ய முடியாத நான் வெட்கி தலை குனிகிறேன்.

வெங்கடேசன்.

பேரின்பா said...

என்ன செய்யறது சரவணா... நம்ம கையையும் காலையும் பூட்டி சாவிய
வாயில திணிச்சு முழுங்க வெச்சுட்டானுங்க...கலி முத்திப்போச்சு
இந்த யுகத்திலேயே இவங்களுக்கு தண்டனை கிடைக்கனும்...கிடைச்சாகனும்