Monday, December 14, 2009

நிராகரிக்கப்பட்ட பரிசுப்பொருள்

ஏற்க மறுக்கபட்ட பரிசுப்பொருளை
வைத்துக்கொண்டு என்னதான் செய்வது

தூக்கி எறியவோ
மற்றவர்களுக்கு கொடுக்கவோ முடியாது,
அது ஒரு பழிவாங்கும் செயல்.

நாம் உபயோகப்படுத்தவும் கூடாது,
அது ஏற்க மறுத்தவரை நினைவு செய்து
மேலும் வெறுப்பை உண்டாக்கும்.

நிராகரிக்கப்பட்டவர்கள் போலவே,
நிராகரிக்கப்பட்ட பொருட்களும்
தனிமையையே விரும்புகின்றன.

இரண்டாவது காதலியால்
மறுக்கபட்ட ஒரு புத்தகம்,
நினைவுப்பொருளாய்
என் வீட்டு அலமாரியின் இடது ஓரத்தில்
இருந்துக்கொண்டு,
என்னை
தினமும் பயமுறுத்துகிறது.

“நீ பரிசுப்பொருள் என்கின்ற
ஒரே காரணத்தால், நிராகரிக்கப்பட்டாய்”
என்ற உண்மையை,
நிராகரிக்கப்பட்ட பொருட்கள்
எந்த காலத்திலும் நம்ப போவதுமில்லை.

5 comments:

சரண் said...

இது போல் எனக்கு எந்த அனுபவமும் ஏற்படவில்லை. இந்தக் கவிதையைப் படித்ததும்தான் அப்படி மறுக்கப்பட்டால் என்ன செய்வது என்ற அச்சம் எழுகிறது. நான் கல்லூரியில் படிக்கும்போது சக மாணவிகளில் இரண்டு பேர் என் பிறந்த நாளுக்காக கேக் கொடுத்தால் ஏதாவது காரணம் சொல்லி மறுத்து விட வேண்டும் என்று நினைத்திருந்தது தெரியவும் இரண்டு நாட்கள் யோசித்து அனைவருக்கும் ஒரு ஆப்பிள் வாங்கிக் கொடுத்தேன். அவர்களால் மறுக்க இயலவில்லை என்பது அந்த நாட்களில் மிகப் பெரிய வெற்றியாகத் தெரிந்தது.

Subramania Athithan said...

yen saga ivlo feelingu :) sollunga adichidalam :)

அருண் said...

என்னிடமும் இது போன்ற ஒரு பரிசுப்பொருள் இருக்கிறது.... நிஜமாகவே ரசித்தேன்... வாழ்த்துக்கள்

தனி காட்டு ராஜா said...

எந்த அளவுக்கு தூக்கி எரிய பழகுறோமோ ..அந்த அளவுக்கு மனசு நிம்மதியா இருக்கும் தல ....
ஆனா தூக்கி எரிய மனசு வரது கடினம் தான் ...

கோவி said...

நல்ல கவிதை..