Thursday, March 4, 2010

அவன் கதை எழுதுகிறான்

Writing is the only thing that, when I do it, I don't feel I should be doing something else - Gloria Steinem

எப்பொழுதும் எல்லாராலும் தவறாகவே புரிந்துகொள்ளப்படும் ஒரு மனிதன், ஒரு கதை எழுதுகிறான். அவனுக்கு நன்றாகவே தெரியும் அந்த கதையும் தவறாகவே புரிந்துகொள்ளப்படும் என்று.

அவன் முன்னர் போல் இப்பொழுது எல்லாம் ஒரு கதையை முன்னரே யோசித்து எழுதுவது கிடையாது. கதை எழுதும்பொழுது தோன்றும் வார்த்தைகளை வைத்தே கதைகளை உருவாக்குகிறான். அவன் என்னதான் எழுதினாலும், படிப்பவர்கள் தங்களுக்கு தேவையான வார்த்தைகளை மட்டுமே தேடிக் கண்டுபிடிக்கிறார்கள். அந்த வார்த்தைகளே அவனைப் பற்றி தவறாக புரிந்துகொள்வதற்க்கு போதுமான ஆதாரமாக உள்ளது.

தன்னைப் பற்றி தவறாக புரிந்துகொண்டவர்களிடம், தன்னைப் பற்றி புரியவைப்பதற்காக அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகள், ஒருமுறைகூட இதுவரை வெற்றி பெற்றது இல்லை. இருந்தாலும் அவன் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறான். அப்படி அவன் கடைசியாக முயன்ற ஒரு முயற்சியிலும் தோல்வி அடைந்த விரக்தியில், தன் பதிவுகளை எல்லாம் அழித்துவிட்டான். இப்படி இவன் அழிப்பது இது இரண்டாவது முறை. ஆனால், சென்ற முறையை போல் இந்தமுறை அவன் நகல் எடுவும் வைத்துக்கொள்ளவில்லை.

எல்லா பதிவுகளும் அழிக்கபட்ட இந்த இரண்டுவார காலத்தில் யாருமே இதைப்பற்றி அவனிடம் விசாரிக்காதது அவனுக்கு எந்த விதத்திலும் வியப்பை தரவில்லை. மற்றவர்களை பற்றிதான் புரிந்து வைத்துக்கொண்டதற்கான வெற்றியாகவே இதை கருதினான்.

எப்பொழுது இருந்து தான் தவறாக புரிந்துகொள்ளப்பட்டோம் என்று ஒரு முறை அவன் நினைத்து பார்க்கிறான். தன் சிறுவயது முதலே இவ்வாறுதான் அவன் தவறாகவே புரிந்துகொள்ளபடுகிறான். அவன் தங்கைகள் அவனைப்பற்றி தவறாக புரிந்துகொண்ட போது தான் வித்தியாசமானவன் என்பதை நிருபித்து விட்டதாகவே கருதினான். கல்லூரியில், அவன் முதல் காதலி இவனை தவறாக புரிந்துகொண்ட போது, அது ஒரு ஆரமபம் என்பது அவனுக்கு தெரியவில்லை. கடைசியில் தன் நண்பர்களே அவனை தவறாக புரிந்துகொண்டபோதுதான் அவனுக்கு அவனைப்பற்றியே சந்தேகம் வரத்தொடங்கியது.

முதலில் எழுத்தின் மூலம் தன் சந்தேகங்களை தீர்த்துகொள்ளலாம் என்று அவன் நினைத்தான். கதைகள் எழுதினான், கவிதைகள் எழுதினான், தன்னை பற்றி எழுதினான், தன் காதல்களை பற்றி எழுதினான். ஆனால் இவை அவனுக்கு மேலும் சந்தேகங்களைதான் எற்படுத்தியது. இப்பொழுதும் ஒரு சந்தேகத்தோடு அவன் அந்த கதையை எழுதிக்கொண்டு இருக்கிறான். ஆனால், அந்த சந்தேகம் எதைப்பற்றியது என்று அவனுக்கே விளங்கவில்லை.

6 comments:

Chittoor Murugesan said...

என்னை பத்தி சைட்ல கீட்ல போட்டு வாங்கலியே ( உங்க பதிவு 100 சதம் எனக்கும் பொருந்துதுங்கண்ணா ஹி ஹி அதனால சொன்னேன்)

DHANS said...

//அது ஒரு ஆரமபம் என்பது அவனுக்கு தெரியவில்லை. கடைசியில் தன் நண்பர்களே அவனை தவறாக புரிந்துகொண்டபோதுதான் அவனுக்கு அவனைப்பற்றியே சந்தேகம் வரதொடங்கியது. //

perfectly suits for me....i am not sure whether you know me or not, but i beleive there are some in this world thinks, alike...
ellam purinthu naame nammai santheegam kollumpothuthaan ellam aarambikkirathu, athuvarai nammaipattri namakku iruntha nalla bimbam nammidame illamal poividugirathu, athaitthedi oodugaiyil sila kaalathil namathu palaiya vaalkkaiye inimaiyaai thondrum....

சரவண வடிவேல்.வே said...

முதல் முறையாக அவனுடைய கதை சரியான முறையில் புரிந்துகொள்ளபட்டது.

நிலவுக்காதலன் said...

i dono wat to tel. live ur own life. feel ur heart and sense ur feelings. if its ryt no need to change it at any cast. and there is nothing bad if we change our bad attitudes. take ur own path in these two saga :)

தனி காட்டு ராஜா said...

//அவன் என்னதான் எழுதினாலும், படிப்பவர்கள் தங்களுக்கு தேவையான வார்த்தைகளை மட்டுமே தேடி கண்டுபிடிக்கிறார்கள். அந்த வார்த்தைகளே அவனை பற்றி தவறாக புரிந்துகொள்வதற்க்கு போதுமான ஆதாரமாக உள்ளது.//

மனம் எப்போதுமே இவ்வாறு தான் செயல் படும் .....
"படிப்பவர்கள் தங்களுக்கு தேவையான வார்த்தைகளை மட்டுமே தேடி கண்டுபிடிக்கிறார்கள்."...நம் மனம் எப்பொழுதுமே நமக்கு தேவையான வற்றை மட்டுமே தேடி கண்டுபிடிக்கும் ......



//தன்னை பற்றி தவறாக புரிந்துகொண்டவர்களிடம், தன்னை பற்றி புரியவைப்பதற்க்காக அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகள், ஒருமுறைகூட இதுவரை வெற்றி பெற்றது இல்லை. இருந்தாலும் அவன் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறான்//

ஒரு போதும் இது வெற்றியை தருவதில்லை ....இதை புரிந்துகொண்டு செயல் பட ஆரம்பிப்பது தான் முதல் வெற்றி .....

//எல்லா பதிவுகளும் அழிக்கபட்ட இந்த இரண்டுவார காலத்தில் யாருமே இதைப்பற்றி அவனிடம் விசாரிக்காதது அவனுக்கு எந்த விதத்திலும் வியப்பை தரவில்லை. மற்றவர்களை பற்றிதான் புரிந்து வைத்துகொண்டதற்க்கான வெற்றியாகவே இதை கருதினான்.//

ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும் .....
இந்த உலகம் என்பது சுய நலத்தின் அடிப்படையில் செயல் படுகிறது ......
ஒரு தாய் தன் குழந்தையை பாதுகாக்கிறாள் என்றால் அது தன்னுடையது என்ற தன் உணர்வு -வின் அடிப்படையில் தான் ......
தாயே இப்படி என்னும் போது மற்ற உறவுகளை என்ன வென்று சொல்வது ...........

யாரும் இதை பற்றி விசாரிக்க வில்லை என்றால் ....அதன் அர்த்தம் என்ன .....தங்கள் நலத்திற்கு அது ஒரு போதும் பயன்படவில்லை என்று அர்த்தம் ....அதனால் அவர்களுக்கு அது பற்றி ஒரு கவலையுமில்லை ......

//கல்லூரியில், அவன் முதல் காதலி இவனை தவறாக புரிந்துகொண்ட போது, அது ஒரு ஆரமபம் என்பது அவனுக்கு தெரியவில்லை//

காதலி கூட தன் சுய நலத்திற்கு தகுந்த மாதிரி காதலன் இருகிறானா என்று பார்க்கிறாள் .....இல்லை எனும் போது விலக முற்படுகிறாள் ......

சரவண வடிவேல்.வே said...

கோபி உங்கள் கருத்துகளுக்கு நன்றி....