Wednesday, March 17, 2010

இதோ, இதோ, அவள் எனை பதம் பார்க்கிறாள்

"அசோக், தண்ணி எடுத்துகிட்டு வந்துரேன்" என்று சொல்லிவிட்டு அவள் போனாள். அவள் போவதை பார்க்க கூடாது என்றுதான் நினைத்தேன், முடியவில்லை. அவள் நடந்து சென்றுக்கொண்டு இருந்தாள். இறுக்கமான சுடிதார், அந்த வளைவுகள் நெளிவுகள் எதோ செய்தன. அவளே சொல்லி இருக்கிறாள் "எனக்கு இந்த Jeans, T-Shirt’லாம் பிடிக்காது. அவை ரொம்ப expose பண்ணும்". Jean, T-Shirt’ல எப்படி இருப்பாள் என்று கற்பனை செய்து பார்த்தேன். இப்படிதான் இப்பொழுது எல்லாம் எதோ எதோ எண்ணங்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. அவளே இன்று கேட்டுவிட்டாள் "அசோக், இப்பொழுதுலாம் நீ என்னை பார்த்தே பேச மாட்டேங்கிற !!".

இரண்டு டம்ளரில் தண்ணி எடுத்துக்கொண்டு எதிரே வந்து அமர்ந்து இருந்தாள். "நாளைக்கும் உன் கூடவே பைக்'ல வந்துரேன். Cab’ல வந்தா, அரை மணிநேரம் முன்னாடியே கிளம்ப வேண்டியதா இருக்கு".

நான் இதுவரை எந்த பெண்னையும் பைக்கில் அழைத்து சென்றது கிடையாது. முதல் முறை இவளை அழைத்து செல்லும் போதே ஒரு மாதிரி கூச்சமாகதான் இருந்தது. அதன்பின் பலமுறை அவளை அழைத்து சென்று இருக்கிறேன். ஆனால் அவை எல்லாம் மாலை நேரம்தான்.

இன்று Morning Shift என்பதால், காலை 5 மணிக்குகே எழுந்து குளித்துக்கொண்டு இருந்தேன். அப்பொழுதுதான் அவளிடம் இருந்து போன் வந்தது, "அசோக், இப்பதான் எழுந்தேன், அனேகமாக Cab Miss ஆயிடும்னு நினைக்கிறேன். நான் உன்கூட பைக்ல வந்துறேன்" என்றாள். அவள் என்னிடம் அனுமதிகூட கேட்கவில்லை. இந்தளவு உரிமையுடன் பேசுபவளிடம் எப்படி முடியாது என்பது. நானும் "சரி, ரெடியா இரு. நான் ஒரு இருபது நிமிடத்தில் வந்துவிடுவேன்" என்றேன்.

மார்கழி குளிரில், காலை ஆறு மணிக்கு, ஒரு பெண்னை பின்னாடி உட்கார வைத்துக்கொண்டு OMR ரோட்டில் போனால், எப்படி இருக்கும். நான் வைத்து இருப்பது கரிஸ்மா பைக். அதில் பின்சீட் 60 டிகிரியில் இருக்கும். பிரேக் போடும்போது பின்னாடி உட்கார்ந்து இருப்பவர்கள், வண்டி ஒட்டுபவர் மீது சாய்ந்தால் மட்டுமே கீழே விழாமல் தப்பிக்க முடியும். கரிஸ்மாவில் ஒரு பக்கம் மட்டும் காலை போட்டு உட்காரவும் முடியாது. அந்த OMR ரோட்டில், டோல்கேட்டுக்கு பக்கத்தில் ஒரு Speed-Breaker இருக்கிறது. Thermometer’யை அந்த நேரம் மட்டும் வைத்து பார்த்து இருந்தால், கண்டிப்பாக் நூற்றி ஜந்துக்கு மேல் காட்டி இருக்கும். அதுவும் அந்த டாம் பாய் perfume, அவளை ஆபிஸில் இறக்கிவிட்ட பிறகும் என் கூடவே வந்துக்கொண்டு இருப்பது போல் தோன்றியது.

இதுல நாளைக்கும் பைக்'ல வராளாம். எனக்கு இப்பொழுதே ஜன்னி வந்தது போல, உடம்பு எல்லாம் நடுக்கம் கண்டது.

நாளைக்கு என்ன பொய் சொல்லி அவளிடம் இருந்து தப்பிப்பது என்று, எனது கேபினில் அமர்ந்து யோசித்துக்கொண்டு இருந்தேன். "என்ன மச்சி, செட் ஆயிடுச்சு போல?" என்று சிரித்துக்கொண்டே குமார் கேட்டான்.

நான் அவனை குழப்பத்தோடு பார்த்தேன். அவனே "இன்னைக்கு காலை’ல பார்த்தேன், பைக்’ல இரண்டு பேரும் ஜோடியா வந்திங்க?"

"நீ வேற, Cab Miss ஆயிடுச்சாம். அதான் அழைத்து வந்தேன்".

"பார்த்து மச்சி, எல்லாமே இப்படிதான் ஆரம்பிக்கும்" என்றான்.

குமாரை பற்றி இங்கு கண்டிப்பாக சொல்லி ஆக வேண்டும். எனக்கு ஆபிஸில் நண்பர்கள் அதிகம் கிடையாது, நான் எல்லா விஷயங்களை பகிர்ந்து கொள்வது என்றால் அது குமாரிடம் மட்டும்தான். இவன் ஒருமுறை கூட என்னிடம் பொய் சொல்லியது கிடையாது. எனக்கே இது வியப்பாக இருந்தது. நான் எதாவது பொய் சொன்னாலும், "ஏன், மச்சி பொய் சொல்ற?" என்று சொல்லிவிட்டு அலட்டிக்கொள்ளாமல் போய் விடுவான். அவனிடம் பழகி பழகி கொஞ்ச நாட்களாக நானும் உண்மை மட்டும்தான் பேசி வருகிறேன். அந்தளவு என்னுள் மாற்றத்தை எற்படுத்தியவன் குமார்.

அடுத்தநாள், அவளை அழைக்க சென்ற போது, "தம்பி, உள்ளே வந்து காப்பி சாப்பிட்டு போகலாம்’ல?" என்று அவள் அப்பா உரிமையுடன் அழைத்தார். இதுவே எங்க ஊராக இருந்து இருந்தாள் "என்ன நடந்து இருக்கும்" என்று கற்பனை செய்து பார்த்தேன். பின்னாடி கொலைவெறியோடு ஒரு கும்பல் என்னை துரத்திக்கொண்டு வந்தது.

நானும் அவளும் உள்ளே நுழைவதற்கும், குமார் வருவதற்கும் சரியாக இருந்தது. "என்ன மச்சி, இன்னைக்கும் Cab miss ஆயிடுச்சா" என்று நக்கலாக கேட்டான்.

இந்த குமாரை பற்றி இன்னொரு விஷயம் உங்களிடம் சொல்லியாக வேண்டும். பெண்களின் பின்நவீனத்துவும் பற்றி ஒரு புத்தகம் எழுதும் அளவிற்கு பேசுவான். "பெண்கள் இப்படி கோணலாக நடப்பதற்கு காரணமே எல்லோரும் தன்னை பார்க்கவேண்டும் என்பதற்குதான். வலது காலை லேசாக Cross'ஆக வைத்து நடந்தால், எல்லாருக்கும் நடை நேராகவரும், அப்படிதான் நடக்க வேண்டும். ஆனால், இந்த பெண்கள் வேண்டும் என்றே இரண்டு காலையும் நேராக வைத்து நடக்கிறார்கள், அப்பொழுதுதான் பின்னழகு கூடுமாம்". இதை போல் பல விஷயங்களை குமார் சொல்வான், அவற்றை இங்கு எழுதினால், பின் இது போர்னோ கதையாக மாறிவிடும்.

சரி, கதைக்கு வருவோம்.

அடுத்த ஆறு மாதங்களில் சத்தியம், மாயாஜால், வி.ஜி.பி, மெரினா என்று சென்னையில் அனைத்து இடங்களையும் ஒன்றாக சுற்றினோம். இந்த ஆறு மாதங்களில், எங்கள் இருபத்தைந்து வருட வாழ்கை கதைகள் எல்லாவற்றையும் பேசி முடித்துவிட்டோம். சில நாட்களின் முடிவில் இனி பேசுவுதற்கு ஒன்றுமே இல்லாதது போல தோன்றும், ஆனால் அடுத்த நாள் காலையிலேயே அவளிடம் சொல்வதற்கு ஓராயிரம் கதைகள் காத்துக்கொண்டு இருக்கும். "உனக்கு பொது அறிவு அதிகம்" என்று அவள் பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறாள்.

இதைபோல் எனக்கு எல்லாமே தெரியும் என்று நம்பிக்கொண்டு இருக்கும் இன்னொருவன் குமார். அவன் எதை செய்வதற்கு முன்னாலும் என்னிடம் கருத்து கேட்காமல் செய்ய மாட்டான். நானும் எதாவது அவனிடம் பேசி சாமாளித்துவிடுவேன். "மச்சி 5800 மாடல் போன் வாங்கலாமா?, அந்த கம்பெனி சேர் வாங்கலாமா?, அந்த கம்பெனிக்கு resume அனுப்பலாமா?" என்று என்னிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பான். இது எல்லாம் பரவாயில்லை, போன வாரம் அவன் தோழிக்கு Dress வாங்க வேண்டுமாம், "எங்க வாங்குறது, என்ன கலர் வாங்கலாம்?" என்று எல்லாவற்றையும் என்னிடம் கேட்கிறான்.

சே, எனக்கு காதலிக்கதான் தெரியவில்லை என்று நினைத்தால், காதல் கதை எழுதுவதற்கு தெரியவில்லை. இந்த கதையில் இப்பொழுது இந்த குமாரை பற்றி ஏன் பேசவேண்டும். அவன் ஒரு மூனா கேனா, இனி அவனை பற்றி பேசவேண்டாம்.

மறந்தே போய்விட்டேன் இன்னும் அரைமணிநேரத்தில் அண்ணா நகர் diva'வில் அவள் எனக்காக காத்துக்கொண்டு இருப்பாள். நான் போக வேண்டும். நேற்று சத்தியம் தியேட்டரில் பத்து நிமிடம் காக்க வைத்தற்கே ஒரு மணிநேரம் திட்டினாள். அவள் திட்டிய அந்த ஒரு மணிநேரமும் அவள் டிரஸை தான் பார்த்துக்கொண்டு இருந்தேன். நேற்று அவள் Ghagra Dress போட்டு இருந்தாள். என்ன அழகு, நான் டிரஸை'யை சொல்லவில்லை, அவளை சொல்கிறேன்.

இப்பொழுது அதை போல், Ghagra Dress வாங்கதான் Diva போகிறோம். சரி நேரம் ஆயிடுச்சு. Bye bye.

11 comments:

Travis Bickle said...

cha cha superb narration.Your narration reminds me of a poetry quote by sujatha

computerlabil vasanthakalam
oru manuda men porulai
kathalikkum neram

excellent flow keep it up.

சரவண வடிவேல்.வே said...

நன்றி Travis Bickle..

உங்கள் பெயரை தமிழில் எப்படி உச்சரிக்க வேண்டும்..

இந்த பெயர் கொண்டவர்கள் தமிழ் படிப்பார்களா என்ன?? எங்கள் ஊரு குப்புசாமியே ஆங்கிலத்தில் மட்டும்தான் பேசுகிறான். அவனுக்கு தமிழே மறந்துருச்சாம்!!!!!.

Travis Bickle said...

மார்கழி குளிரில், காலை ஆறு மணிக்கு, ஒரு பெண்னை பின்னாடி உட்கார வைத்துக்கொண்டு OMR ரோட்டில் போனால், எப்படி இருக்கும். Thermometer’யை வைத்து பார்த்து இருந்தாள், கண்டிப்பாக் நூற்றி ஜந்துக்கு மேல் காட்டி இருக்கும்.சே, எனக்கு காதலிக்கதான் தெரியவில்லை என்று நினைத்தால், காதல் கதை எழுதுவதற்க்கு தெரியவில்லை. இந்த கதையில் இப்பொழுது இந்த குமாரை பற்றி ஏன் பேசவேண்டும். அவன் ஒரு மூனா கேனா, இனி அவனை பற்றி பேசவேண்டாம்.

Glimpses of sujatha here.


இந்த பெயர் கொண்டவர்கள் தமிழ் படிப்பார்களா என்ன?? எங்கள் ஊரு குப்புசாமியே ஆங்கிலத்தில் மட்டும்தான் பேசுகிறான். அவனுக்கு தமிழே மறந்துருச்சாம்!!

I am little bit disappointed by your sarcastic comment here.

Anyway i just want to tell you that even sujatha didnt write on his own name.

I write in english coz i know english typing only and i dont havea net connection so i have to do lots of works within an hour so thats it..

En travis bicklenu name vachuttu tamil padikkakudatha.4 yrs back
i met a 30 yrd lady frm us,california she was studying some course in american college,she was in india 4r almost 4 yrs,do u know what she was studying?Priniciples of Mahatma Gandhi,so dont judge anyone without knowing them..

Anyway did you read director Ram's(Katradhu Tamil)story in anandha vikatan few weeks back,it was a gem of story.Do read it.

Travis Bickle said...

I am frm madurai and i met that american lady in madurai nly.

சரவண வடிவேல்.வே said...

நண்பா, .. நான் சத்தியமாக உங்கள் மனதை காயப்படுத்தும் நோக்கில் சொல்லவில்லை. அது சும்மா ஒரு காமெடிக்கு சொன்னது. இதை, இந்தளவு நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நம் நட்பின் முதல் சந்திப்பே இப்படி சண்டையில் ஆரம்பிக்கிறதே!!!!!!!!!!... சரி, இதை பற்றி இனி பேச வேண்டாம். என் வார்த்தைகள் உங்கள் மனதை காயப்படுத்தி இருந்தால், என்னை மன்னித்துக்கொள்ளுகள்.

ராம் எழுதிய கதையின் லிங்க் இருந்தால் அனுப்பவும், நானும் புத்தகம் யாரிடமாவது இருக்கிறதா என்று தேடிப்பார்க்றேன்.

நிலவுக்காதலன் said...

machi sema sema sema da. cha for all ur blogs am giving the same comments la. i dono wat else to tel for the things which is happeni in everyone's life. by the way temme who's dat kumar :) is dat our real kumar. machi ana nee ipdi comedy a pesiey sikidura. ha ha ha :)

to Mr.Travis, savarava is very jovial and it reflects in his comments not in any way to hurt u. cheers :)

நிலவுக்காதலன் said...

not வழைவுகள், its வளைவுகள் :) romba admired pola :)

"அசோக், இப்பொழுதுலாம் நீ என்னை பார்த்தே பேச மாட்டேங்கிற !!" y அசோக் y :)

"சே, எனக்கு காதலிக்கதான் தெரியவில்லை என்று நினைத்தால், காதல் கதை எழுதுவதற்க்கு தெரியவில்லை."

cute. xpress ur own character n u ll get the gal who loves it. dat wud be real :)

சரவண வடிவேல்.வே said...

""அசோக், இப்பொழுதுலாம் நீ என்னை பார்த்தே பேச மாட்டேங்கிற !!" y அசோக் y :)",,,,,

சகா, நாமலாம் என்னைக்கு பெண்கள் முகத்தை பார்த்து பேசி இருக்கோம்... :)

சரவண வடிவேல்.வே said...

வளைவுகள்... done machi....

Travis Bickle said...

cha cha sadailam onnum illa.U n I r sumwat same in personality,we think we r being funny but others take it seriously,oh god.

நிலவுக்காதலன் said...

don give dis comments "சகா, நாமலாம் என்னைக்கு பெண்கள் முகத்தை பார்த்து பேசி இருக்கோம்... :)" jus bcoz i wud be happy if u remove "நாமலாம்" ha ha ha:)

travis, exactly :)