Saturday, March 6, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - "i am crazy about you"

காதல், காதல், காதல் இதை தவிர இந்த திரைப்படத்தில் வேறு ஒன்றுமே இல்லை. காதல் படம் என்றாலே அதில் சண்டைக்காட்சிகள் , ஒரு குத்துபாட்டு, ஹீரோவுக்கு நண்பனாக ஒரு காமெடியன், இப்படி இவை எல்லாம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் தமிழ்சினிமாவில் உருவாகிவிட்டது. இதை கெளதம் இந்த திரைப்படத்தில் உடைத்துவிட்டார்.

திரைப்படம் முடிந்தவுடன், "மச்சி, இதே மாதிரி எனக்கும் நடந்து இருக்குடா!!" என்று என் நண்பன ஒருவன் சொன்னான். நீங்கள் இதுவரை யாரையாவது காதலித்து இருந்தாள், கண்டிப்பாக இந்த திரைப்படம் "உங்களின் உண்மை கதை".

"இந்த உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் ஜெசிய லவ் பண்ணேன்...??".

இதில் ஜெசிக்கு பதிலா உங்கள் காதலியின் பெயரை போட்டால் இது உங்கள் கதை.

படம் முழுவதும் சிம்புவும், த்ரிஷாவும் மட்டுமே ஆக்கிரமித்து இருக்கிறார்கள். ஒரு தெளிந்த நீரோடை போல படம், மிகவும் மெதுவாக செல்கிறது. ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை கதை எங்கும் திரும்பாமல், காதல் என்ற ஒரே கோட்டில் செல்கிறது. இதை போல் Slow moving movies தமிழுக்கு புதியது, ஆகவே பலருக்கு இந்த திரைப்படம் பிடிக்காமல் போகலாம்.

சிம்பு திரைப்படத்தின் ஆரம்பத்தில் பேசும் வசனம்

" காதல் என்பது, அதுவா நமக்கு நடக்கனும்.. நம்மளப் போட்டு தாக்கனும்... நம்மள அப்படியே தலகீழா திருப்பி போடனும்...அது எனக்கு நடந்துச்சு ".

அதே போலவே இந்த திரைப்படம் முதல் அரைமணி நேரத்திலேயே நம்மை போட்டு தாக்கிவிடுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை படத்திற்க்கு இன்னொரு ப்ளஸ்.

நவயுக காதல் எல்லாம் உடலை மையபடுத்தியே வருகின்ற என்பதை நாசுக்காக சொல்லியிருக்கிறார்கள்

----------------------------------------------------------------------------

இப்பொழுது எல்லாம் தமிழ் திரைப்படம் பற்றி கருத்து சொல்லவே பயமாக இருக்கிறது. இப்படிதான் நண்பன் ஒருவன் "ஆயிரத்தில் ஒருவன்" பற்றி கருத்து கேட்டான். நான் படம் ரொம்ப மோசம், சுத்தமாக பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டேன். அதற்க்கு அவன் ஒரு மணிநேரம் அட்வைஸ் கொடுத்தான். " உங்களை போன்றவர்களுக்கு வேட்டைக்காரன் போன்ற திரைப்படங்கள்தான் பிடிக்கும். இதனால்தான் தமிழ் சினிமா ரொம்பவும் பின்னோக்கி இருக்கிறது. செல்வராகவன் எப்படி ஒரு மாஸ்டர் பீஸை உருவாக்கியிருக்கிறார்". இப்படி அவன் பேசிக்கொண்டே போனான்.

என்னை பொருத்தவரை, ஆயிரத்தில் ஒருவன் ஒரு மசாலா திரைப்படம் மட்டுமே. சோழர்களை இந்தளவு இழிவாக சித்தரிக்க காரணம் என்ன என்பது எனக்கு கடைசிவரை புரியவே இல்லை.

சிலர் இது தமிழின் "முதல் பின்நவீனத்துவ திரைப்படம்" என்று சொல்கிறார்கள். நான் இதுவரை பார்த்து உள்ள ஒரே தமிழ் பின்நவீனத்துவ திரைப்படம் "கற்றது தமிழ்" மட்டுமே.

4 comments:

நிலவுக்காதலன் said...

nice movie and nice climax :(

"நவயுக காதல் எல்லாம் உடலை மையபடுத்தியே வருகின்ற என்பதை நாசுக்காக சொல்லியிருக்கிறார்கள்" saga u need to explain me here. who said the old loves not lik this. there s no luv widout this. its outcome of much love dats it. LUST and SEX s totally out of this.

"ஆயிரத்தில் ஒருவன்" s the best comedy movie i hav evr seen. in climax i lol.:) no one can describe this much worst abt our wel educated dravidians (chola's). kattuvaasiyada namma.

ethanai varudangal pasiyil kadanthalum nam nagarigamum vazhkai muraiyum maaraathu.

வாழ்க தமிழ் !! வாழ்க தமிழினம் !!

சரவண வடிவேல்.வே said...

"நவயுக காதல் எல்லாம் உடலை மையபடுத்தியே வருகின்ற என்பதை நாசுக்காக சொல்லியிருக்கிறார்கள்".... "saga u need to explain me here. who said the old loves not lik this."


ம்.. சரிதான்.. எல்லா காலத்திலும், காதல் உடலை மையபடுத்தியே வருகிறது என்று மாற்றி எழுதி கொள்ளலாம்.

"டேய், மொத்தம் 15 french kiss இருக்குடா!!!".. இது படத்தை பார்த்துவிட்டு ஒரு நண்பன் சொன்னது...

நிலவுக்காதலன் said...

jus kissin on lips is not french kiss i guess. isnt it :)

சரவண வடிவேல்.வே said...

எனக்கு தெரியல மச்சி, எனக்கு இதுல அனுபவம் இல்லடா!!!!!!!!!!