Friday, November 14, 2008

பொய்

எனக்கு உள்ள சில கெட்ட பழக்கங்களில் ஒன்று நிறைய பொய் பேசுவது. இந்த உலகில் யார் தான் பொய் பேசவில்லை. ஒருவருக்கு பொய்யாக தெரியும் ஒரு விஷயம் மற்றவருக்கு உண்மையாக தெரியலாம். என்னை பொருத்தவரை ஒரு மோசமான உன்மைக்கு பதிலாக ஒரு அழகான பொய்யை தைரியமாக சொல்லாம். பொய் பேசுவதில் உள்ள நல்ல விஷயம் எதை வேண்டுமானாலும் அழகாக சொல்லலாம். பொய் எப்படி உருவாகிறது.... ஒரு உண்மையை மறைக்கும் போது தானாகவே ஒரு பொய் உருவாகிவிடுகிறது. " நான் சரவணா இல்லை " என்று நான் கூறினால் அது பொய்யா??. நான் சரவணா என்பது நான் சொல்லிதானே உங்களுக்கு தெரியும், அதை நானே இல்லை என்று சொல்லும் போது நான் பொய் சொல்கிறேன் என்று அர்த்தமா??...

தமிழ்நாட்டில் உள்ள விநாயகருக்கு மனைவி கிடையாது, ஆனால் வடமாநில கோயில்களில் உள்ள விநாயகருக்கு மனைவி உண்டு. இதில் " எது உண்மை எது பொய் " என்று உங்களால் கூற முடியுமா ??. இந்த உலகில் நாம் உண்மை என்று நம்புகின்ற எல்லாமே யாரோ ஓருவர் கண்டுபிடித்த பொய் தான்.

என் பெயர் சரவணா என்பது, எனது பெற்றோர் ஆரம்பித்து வைத்த பொய். 2+2=4 இது கணிதத்தில் யாரோ ஒருவன் சொன்ன பொய். ஆக, ஒரு பொய் திரும்ப திரும்ப சொல்லப்பட்டு அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் போது அது உணமையாக மாறிவிடுகிறது.

எல்லாராலும் உண்மை என்று நம்பபட்டவை சில நேரங்களில் கால மாற்றத்தால் பொய்யாக மாறலாம். solarsytem'ல் உள்ள ஓன்பதாவது கிரகம் pluto என்று எனக்கு பள்ளியில் சொல்லித்தந்தார்கள், ஆனால் இன்று pluto ஒரு கிரகமே இல்லை என்று முடிவு செய்துவிட்டார்கள். அப்படி என்றால் நான் பள்ளியில் ஒரு பொய்யை தான் படித்தேனா??..

பொய் என்பது நாம் சொல்லும் வாக்கியங்களை வைத்து முடிவு செய்யபடவில்லை, அந்த வாக்கியங்களால் ஏற்படும் பாதிப்பை வைத்து தான் முடிவு செய்யபடுகிறது. நாம் ஒருவரை புண்படும்படி பேசும் ஒவ்வொரு சொல்லும் பொய் தான்.

சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஒரு காட்சி. தலையில் ஒரு தடவை முட்டினால் கொம்பு வளரும் என்று ஜெனிலியா சொல்ல, கவுசல்யா "சந்தோஷ் இதை எல்லாமா நம்புவான் ?" என்பாள். ஜெனிலியா கூறும் பதில் "நல்லா இருக்குல". அதை மாதிரி நல்லா இருக்கிற பொய்களை நாம் நம்புவதில் நமக்கு ஒன்றும் நஷ்டம் இல்லையே.

2 comments:

Ree_mathi said...

Naala than ... irrukku ... :)

Shakthee said...

"பொய் என்பது நாம் சொல்லும் வாக்கியங்களை வைத்து முடிவு செய்யபடவில்லை, அந்த வாக்கியங்களால் ஏற்படும் பாதிப்பை வைத்து தான் முடிவு செய்யபடுகிறது." அனுபவமா சரவணா....??
ஆனாலும் சிலருக்கு ஏன் பலருக்கு விளையாட்டுக்கு கூட பொய் சொல்வதில்
கோபம் வருகிறதே...!!
என்னிடம் யாரேனும் பொய் சொல்லி எனக்கு தெரிந்தால் தெரியாதது மாதிரி
போய்விடுகிறேன்...!!!