Saturday, February 7, 2009

நான் கடவுள்

"Evil Dead" படத்தை தியேட்டரில் தனியாக உட்கார்ந்து பார்பவருக்கு ஒரு லட்சம் பரிசு என்று அறிவிக்கபட்டது போல, "நான் கடவுள்" படத்தை கண் மூடாமல் பார்பவருக்கு ஒரு லட்சம் பரிசு என்று அறிவிக்கலாம்.

மனதில் பல பிரச்சனைக்கு நடுவில் கொஞ்ச நேரம் சந்தோஷமாக இருக்கலாம் என்று திரைப்படத்திற்கு போய். மனதில் இன்னும் அதிகமான பாரத்தோடு திரும்பி வந்தேன். கண்டிபாக இந்த படம் இதயம் பலவீனம் ஆனவர்களுக்கு அல்ல ( என்னையும் சேர்த்து தான் ).

பாலா சார், ஒரு கொடூரமான திரைப்படத்தை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் நாங்க உங்களிடம் இருந்து அனைவரும் ரசிக்கும் படியான திரைப்படத்தை எதிபார்கிறோம். காசியில் கதை ஆரம்பிக்கும் போது இருந்த பிரம்மிப்பு கொஞ்சம்கொஞ்சமாக கதை செல்ல செல்ல ஒரு அருவருப்பாக மாறியது. ஒர் உண்மையை தான் சொல்லியிருக்கிறேன் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அதை திரைப்படத்தில் சொல்லும் பொழுது மக்கள் ரசிக்கும் படி சொல்ல வேண்டியது அவசியம். இந்த படத்தில் மூலம் தமிழ் திடைப்படங்களை நீங்கள் அடுத்த பரிணாமத்திற்கு கொன்டு சென்றதாக கொஞ்ச மக்கள் சொல்லலாம். அவர்களிடம் "பசி, சோறு" போன்ற படங்களை பார்க்க சொல்ல வேண்டும்.

இந்த படத்தின் பல காட்சிகளை நான் பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டேன். ஆகவே இந்த படத்தை பற்றி முழுமையாக விமர்சனம் செய்ய நான் தகுதியற்றவன் ஆகிறேன்.

பாலா, ஜெயமோகன், ஆர்யா, பூஜா, இளையராஜா, கவிஞர் விக்கிரமாதித்யன் என்று இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த படம் ஒரு மைல்கல். ஆனால் இந்த படத்தை நான்கு வருடமாக தாயாரித்த தயாரிப்பாளருக்கு????


பின்குறிப்பு:
-------------

இந்த திடைப்படத்தை பார்த்த அந்த இரவு சரியாக தூங்க முடியவில்லை, பல நினைவுகள் என்னை சூழ்ந்துக் கொண்டு இருந்தன. ஒருவேளை இது தான் இந்த திரைப்படத்தின் வெற்றியா???.

9 comments:

மாதவராஜ் said...

சரவணன்!

மிக எளிமையாக, நேராக உங்களுக்குப் பட்டதைச் சொல்லியிருக்கிறீர்கள்.

ராம்ஜி.யாஹூ said...

good posting

சிவாஜி த பாஸ் said...

வணக்கம் சரவணன்,
பாதிப்பு ஏற்படுத்தினாலே நல்ல படம் என்று எண்ண முடியாது.இன்றுதான் பார்க்க போகிறேன்,

சிவாஜி த பாஸ் said...

nice comment, thanks for ur comment, help me a lot to understand the film!
good luck!

மஞ்சூர் ராசா said...

உங்கள் கண்ணோட்டம் ஒரு சாதரண தமிழ் ரசிகனின் கண்ணோட்டமாகவே பார்க்கவேண்டியிருக்கிறது. படத்தின் வெற்றியில் சாதரண ரசிகனின் பங்குதான் மிகவும் முக்கியமானது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்

Valaipookkal said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

பிரியமுடன் பிரபு said...

///
இந்த திடைப்படத்தை பார்த்த அந்த இரவு சரியாக தூங்க முடியவில்லை, பல நினைவுகள் என்னை சூழ்ந்துக் கொண்டு இருந்தன. ஒருவேளை இது தான் இந்த திரைப்படத்தின் வெற்றியா???.
///

அதுதான் உங்களூக்கே புரிந்திடுத்தே

இதையும் குறை சொல்கிறீங்க????
போங்க போய் சிவாஜி,வில்லு படிக்காதவன் பாருங்க
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Ree_mathi said...

Its always fun to watch feel good movies ...
I suppose its healthier to watch Thought-provoking movies once in a while ...
I heard it took them 4 years cos ... some of the people are not actors so they had to wait 14 - 15 hours in order to shoot one scene ...
PS: I cannot wait to watch it ...

Subramania Athithan said...

nice. :) but thoongalanu solrathu too much :)