Friday, June 18, 2010

ராவணன்

"ராவணன்", எதற்காக இந்த டைட்டிலை வைத்தார்கள் என்று எனக்கு புரியவில்லை. இராமாயணத்தின் கதையைதான் எடுக்க வேண்டும் என்று நினைத்து இருந்தால், அந்த கதையை முழுமையாக சொல்லி இருக்கலாமே?? இராமயணத்தின் முக்கிய அம்சமே ராவணன் சீதை மேல் கொண்ட மோகம்தான். அதை இந்த படத்தில் இப்படி சொதப்பி இருக்கவேண்டாமே. சரி, இராமாயணத்தை வெளிப்படையாக சொல்லவில்லை என்றால், அந்த அனுமான் கதாபாத்திரம் எதற்க்கு. அதுவும் கட்டிய சேலையுடன் மட்டும் இருக்கும் ஐஸ்வர்யாவிடம் “உங்களை சந்திதற்க்கு சாட்சியாக எதாவது பொருள் தாருங்கள்” என்று கார்த்திக் கேட்கும் காட்சி, இது மணிரத்னம் திரைப்படமா?? என்று சந்தேகம் அடைய செய்தது.

கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே நன்றாகதான் இருக்கிறது. ஆனால், இதே போன்ற திரைப்படத்தை யாராலும் எடுக்க முடியும், ”மணிரத்னம் உங்களிடம் இருந்து ஒரு புதிய, மாறுபட்ட திரைப்படத்தை அல்லவா எதிர்பார்கிறோம்”.

விக்ரம், ஐஸ்வர்யா எப்பொழுதுமே நன்றாக நடிப்பார்கள் . சந்தோஷ் சிவன் கேமரா எப்பொழுதுமே நன்றாக இருக்கும், ஏ.ஆர் ரஹ்மானின் இசையை பற்றி யாருக்கும் அறிமுகம் தேவை இல்லை. இவர்கள் வழக்கம் போல் இந்தபடத்திலும் ஒரு படி மேலே செல்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.

திரைப்படத்தில் குறைசொல்வதற்க்கு ஒன்றும் இல்லை, ஒரு வித்தியாசமான திரைப்படத்தை எதிர்பார்த்து சென்றேன், அது கிடைக்கவில்லை அவ்வளவே!!

”ராவணன்” ஹிந்தியிலும் வந்து இருக்கிறது. ஹிந்தியிலும், தமிழிலும் ஒரே மாதிரி எடுத்து இருக்கிறார்கள் என்று கேள்வி. ஒருவேளை ஹிந்தியில் இந்த திரைப்படம் ஒரு மாறுபட்ட திரைப்படமாக இருக்கலாம். ஏனென்றால் “குரு” திரைப்படமும் அப்படிதான் இருந்தது. “ராவணன்” ஹிந்தியில் ஒரு மாபெறும் வெற்றிபடமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.

மணிரத்னத்தின் நேரடியான ஒரு தமிழ் திரைப்படத்திற்க்குகாக காத்துக்கொண்டு இருக்கிறேன். அது நடக்குமா???.

---------------------------------------------------------------------------------

”உசிரே போகுதே” பாடல், திரைப்படம் ஆரம்பத்திலேயே வந்துவிடுகிறது. அந்த காட்சியில்தான் விக்ரமிற்க்கு, ஜஸ்வர்யா மீது முதல் முறையாக ஒரு ஈர்ப்பு வருகிறது. ஆனால், அந்த பாடல் வரிகளோ காதலின் உச்சியில்,மோகத்தில் பாட வேண்டிய பாடல் வரிகள் அவை,

"ஒடம்பும் மனசும் தூரம் தூரம் ஒட்ட நெனைக்க ஆகல,
மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய ஒடம்பு கேக்கல,
தவியா தவிச்சி, உசிர் தடங்கெட்டு திரியுதடி,
தைலான் குருவி என்னை தள்ளி நின்னு சிரிக்குதடி"


நடராஜர் சிலை முன்னால் விக்ரம் பேசும் போது, வந்து இருக்க வேண்டிய பாடல். எப்பொழுதும் பாடல்களை, காட்சிகளோடு சரியாக பொருத்தும் மணிரத்னம் இந்த பாடலை எப்படி தவறவிட்டார்!!!!!

4 comments:

Anonymous said...

///“ராவணன்” ஹிந்தியில் ஒரு மாபெறும் வெற்றிபடமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்///---நோ சான்ஸ்...

மணிரத்னம் பயங்கரமான ஒரு புத்திசாலி. தமிழ்நாட்டில், இராமனுக்கு குறைந்த பக்தர்களும், இராவணனுக்கு அமோக ஆதரவாளர்களும், இராமாயனத்துக்கு அந்த அளவுக்கு மவுசு இல்லாமல் இருப்பதால், தைரியமாக பாத்திரங்களை தம் இஷ்டத்துக்கு தேர்வு செய்தார்...

ஆனால், ஹிந்தியில் அந்த பாச்சா பலிக்காது என்று பயந்து அல்லது நன்கு தெரிந்து, ஆதர்ஸ பாப்புலர் பச்சன் தம்பதிகளை 'ராவண்-சீதா' வேடத்துக்கு போட்டார். அதுமட்டுமா? ஹிந்திகாரர்களுக்கு, யோரோ முகம் அறியாத பரிச்சயமற்ற விக்ரமை-தமிழ்நாட்டு விக்ரமை போட்டார்... அப்படியாவது இந்த ஹீரோ பாத்திரத்திலிருந்து படம்பார்க்கும் ஹிந்திக்காரர்கள் அந்நியப்படட்டுமே என்று..!

ரொம்ப ஆர்வமாய் சில ஹிந்தி படத்தின் விமர்சன்களை படித்தால்... ஒருமாதிரியாக பட்டும்படாமல் ஒரே புலம்பல்ஸ். மறுமொழி போடுபவர்கள் உண்மையை உரக்க கூற யாருக்கு பயப்படுவார்கள்? இந்த 'ராவண ஆதரவு படத்திற்கு' தொண்ணூறு பின்னூட்டம் திட்டித்தான் வந்துள்ளது.

'ராமபிரானா-பச்சன் தம்பதியா' என்ற ஹிந்தி பரிட்சையில்-, கடவுள் ராமபிரான் வேற்றி பெற்றுவிட்டார்... சினிமா'ராவண்' தோற்றுப்போய் விட்டார்.

மனிரத்தினத்தின் இந்த 'பச்சன் தம்பதி' என்ற ஒரே நம்பிக்கை அஸ்திரமும் 'டமால்'.

சரவண வடிவேல்.வே said...

அப்ப... இது மணிரத்னத்திற்கு உண்மையான கஷ்ட காலம்தான்..

சரவண வடிவேல்.வே said...

@ Anonymous

///"யாரோ முகம் அறியாத பரிச்சயமற்ற விக்ரமை-தமிழ்நாட்டு விக்ரமை போட்டார்."...////

இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இது விகரம் நடிப்புக்கு கிடைத்த அங்கிகாரம் என்றே கருதுகிறேன்.

சரவண வடிவேல்.வே said...

@ Anonymous

இது பேயோன்தானே!!!!!