என் பிரிவு உன்னில்
எந்தவொரு அதிர்வையும்
ஏற்படுத்தப்போவது இல்லை
என்பதை அறிந்தே இருந்தேன்.
எனது இருப்பைப் போலவே
எனது பிரிவும்
உன்னை
எந்த விதத்திலும் பாதிக்கப்போவது இல்லை.
அந்த பிரிவின் கடைசி சந்திப்பில்
நீ
சிறிதாவது பேசியிருக்கலாம்,
சிறிதாவது வருத்தப்பட்டுயிருக்கலாம்,
சிறிதாவது அழுது இருக்கலாம்,
சிறிதாவது சிரித்திருக்கலாம்.
சிறிதாவது நடித்திருக்கலாம்.
அப்படி அமைதியாக இருந்திருக்க
தேவையில்லை.
இனி எப்பொழுதும், உனக்கு
நான் தேவையில்லை
என்பதையே மீண்டும் நிரூபித்தாய்.
உனக்கு தெரியும்,
எனது இருப்பை எப்படி எல்லாம்
நிரூபிக்க முயற்சித்தேன் என்று.
எனக்கு தெரியும்,
உண்மையாகவே
நான் மரித்துப்போவதையே நீ
விரும்பினாய் என்று.
எந்தவொரு அதிர்வையும்
ஏற்படுத்தப்போவது இல்லை
என்பதை அறிந்தே இருந்தேன்.
எனது இருப்பைப் போலவே
எனது பிரிவும்
உன்னை
எந்த விதத்திலும் பாதிக்கப்போவது இல்லை.
அந்த பிரிவின் கடைசி சந்திப்பில்
நீ
சிறிதாவது பேசியிருக்கலாம்,
சிறிதாவது வருத்தப்பட்டுயிருக்கலாம்,
சிறிதாவது அழுது இருக்கலாம்,
சிறிதாவது சிரித்திருக்கலாம்.
சிறிதாவது நடித்திருக்கலாம்.
அப்படி அமைதியாக இருந்திருக்க
தேவையில்லை.
இனி எப்பொழுதும், உனக்கு
நான் தேவையில்லை
என்பதையே மீண்டும் நிரூபித்தாய்.
உனக்கு தெரியும்,
எனது இருப்பை எப்படி எல்லாம்
நிரூபிக்க முயற்சித்தேன் என்று.
எனக்கு தெரியும்,
உண்மையாகவே
நான் மரித்துப்போவதையே நீ
விரும்பினாய் என்று.
9 comments:
Fantastic, gr8 keep it up
நன்றி ந்ண்பா..
//இனி எப்பொழுதும், உனக்கு
நான் தேவையில்லை
என்பதையே மீண்டும் நிருபித்தாய்.//
அப்படிப்பட்ட உறவுகளை விட்டு பிரிவது ஒரு விதத்தில் நல்லது தானே சரவணா?
இந்த பிரிவு வேறு ஒரு நல்ல உறவுக்கு அழைத்து செல்லலாம் தானே ?
@ ராஜா,
அதே நம்பிக்கையில் நானும். :)
அதிர்ந்து விட்டேன்! இப்படியெல்லாம் பதிவு போட்டு, நோகடிப்பது சரி இல்லிங்க அண்ணா! நல்ல விதமாய் நாலு வார்த்தைகள் எதிர்பார்த்தேன்! பிரியும்போது கூட நான் அழவில்லை. இப்ப அழ வச்சுட்டிங்களே!
@ தமிழகழ்வன்,
என்ன செய்ய நண்பா, இப்படிலாம் எழுதுனாதான், நாலு பேரு நம்மை மதிக்கிறாங்க..
விடுங்க அடுத்த தடவை, நாலு என்ன??, நூறு நல்ல வார்த்தைகள் சொல்லிடலாம்.
இப்போதுதான் உள்ளம் குளிர்ந்தது. என் முகமும் மலர்ந்தது. எப்படியோ, இப்படிக் கூடச் சிந்திக்க முடியும் என்று காட்டி விட்டீர்கள். வார்த்தைகளின் பொருளிலிருந்து வெளிவருவதுதான் இயலவில்லை. நெஞ்சில் தைத்த சுகமான துன்பம் போல.
"எனக்கு தெரியும்,
உண்மையாகவே
நான் மரித்துப்போவதையே நீ
விரும்பினாய் என்று" ஏன் சகா இவ்வளவு சோகம்.:) நண்பர்/ நண்பியை ரொம்ப கொடூரமானவர்களாக வாசிப்பவர் நினைக்குமளவு சித்தரித்து உள்ளீர். :) அவர்களும் நீங்களும் பிரிவில் துயரப்படுவது போல் கவிதை இருந்தால் அழகு :)
என் பிரிவுக்குகாக ஒருமுறையாவது அவள்(ர்) வருத்தப்படட்டும், அப்பறம் எப்படி எழுதுறேன் மட்டும் பாருங்க சகா :)
Post a Comment