Friday, June 24, 2011

வார்த்தைகளோடு அலைபவன் பிறப்பைப் பற்றி சில குறிப்புகள்

வார்த்தைகளோடு அலைபவன்

2.வார்த்தைகளோடு அலைபவன் பிறப்பைப் பற்றி சில குறிப்புகள்

வார்த்தைகளோடு அலைபவன் பிறந்த நாட்டில், ஒரு வருடத்துக்கு பதினான்கு மாதங்கள் இருந்தன. அந்தந்த மாதங்களில் பூக்கும் பூக்களைக் கொண்டே அந்த மாதங்களை அழைத்தனர். ஒவ்வொரு மாதமும் நாற்பத்து நான்கு நாட்களைக் கொண்டிருந்தது. வார்த்தைகளோடு அலைபவனின் பிறப்பு, செம்பருத்தி மாதத்தின் நாற்பத்தி இரண்டாம் தேதி நடந்தது. அந்த நாட்டில், செம்பருத்தி ஆறுபது வருடங்களுக்கு ஒருமுறையே பூக்கும் பூ என்பதால், அந்த மாதத்தில் பிறந்தவர்களைப் பார்ப்பது அறிது. செம்பருத்தி மாதத்தில் பிறந்த அனைவருமே எதாவது ஒரு துறையில் வல்லுனர்களாக இருந்தனர். கனவுகளை  உருவாக்குபவன், கண நேரத்தில் பொருள்களை  மறைய செய்பவன், தண்ணீரின் சூத்திரத்தை முதலில் கண்டுபிடித்தவன், மலைகளை ஒரே கையில் தூக்கி சுமப்பவன் இப்படி பலரும் பிறந்தது செம்பருத்தி மாதத்தில்தான்.

வார்த்தைகளோடு அலைபவன் பிறந்த அதே நாளில் சுமார் ஆறுபது வருடங்களுக்கு முன்னால், ஒருவரின் தலையனை வைத்தே அவர்களின் எதிர்க்காலத்தை சொல்பவன் ஒருவன் இறந்து போனான். அவன் இறந்த பின்னால் எதிர்காலத்தை யாராலும் சரியாக கணிக்க முடியவில்லை. எதிர்காலத்தை அறிந்துக்கொள்ள முடியாமல் மக்கள் மிகவும் கவலைக்கொண்டனர். எதிர்காலத்தை அறிந்துக்கொள்வதற்க்காக மக்களும் பல வழிகளைக் கையாண்டனர்.

நட்சத்திரங்களைப் பார்ப்பது, தாயத்தை உருத்துவது, கிளிகளைக் கூண்டில் அடைத்து ஓவியங்களில் ஒன்றை எடுக்கச் செய்வது.  இப்படி எத்தனையோ வழிகளின் மூலம் எதிர்காலத்தை யூகித்தனர். ஆனால், அவர்களின் யூகங்கள் அனைத்தும் பொய்யாகியது. எதிர்காலத்தை அறிந்துக்கொள்ள முடியாத மக்கள், மிகவும் விரக்தியில் இருந்தனர். செம்பருத்தி மாதம் நாற்பத்தி இரண்டாம் தேதி ஒருவன் பிறந்து உள்ளான் என்ற செய்தி அறிந்த மக்கள், கண்டிப்பாக அவன் எதிர்க்காலத்தை யூகித்து சொல்ல கூடியவன் என்று நம்பினர்.

வார்த்தைகளோடு அலைபவன், அவனது மூன்றாவது வயதில் தனது முதல் கதையைச் சொல்லத்தொடங்கினான். அதன் பின்னர் மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக "இவன் எதிர்க்காலத்தை யூகித்து சொல்லக்கூடியவன்" என்ற நம்பிக்கை குறையத்தொடங்கியது. இருந்தாலும், "கதைகள் மூலம் இவன் எதிர்க்காலத்தை குறிப்பாக உணர்த்துகிறான்" என்று இன்னும் சிலர் நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

வார்த்தைகளோடு அலைபவனின் கதைகளையும், அவனைப் பற்றிய தொகுப்புகளை வைத்திருக்கும் லில்லி மாதத்தில் பிறந்த ஒருவன், வார்த்தைகளின் அலைபவனின் பிறப்பைப் பற்றி அவனுடைய குறிப்பு புத்தகத்தில் கீழ்க் கண்டவாறு எழுதியுள்ளான்
"அவனின் பிறப்பை பற்றி நமக்கு எதுவும் சரியாக தெரியாத நிலையில், மற்றவர்கள் சொல்லும் கதைகளை வைத்து இப்படி ஒரு முடிவுக்கு நாம் வர நேருகிறது. அதன் படி,  வார்த்தைகளோடு அலைபவன் செம்பருத்தி மாதம் நாற்பத்தி இரண்டாம் தேதி பிறந்துள்ளான். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், நம் கிரகத்திலிருந்து சுமார் 1988 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் மனிதர்கள் வாழும் ஒரு கிரகத்தில் "மீட்பர்" மறைந்து 1956 ஆண்டுகள் கழித்து வார்த்தைகளோடு அலைபவன் பிறந்து உள்ளான். தண்ணீரின் சூத்திரத்தை  கண்டுபிடித்தவன், சமீபத்தில் உருவாகிய சூத்திரத்தை வைத்து பார்க்கும் போது, நமது கிரகத்திலிருந்து அந்த கிரகத்துக்கு செல்ல வேண்டும் என்றால் 1988 ஓலி ஆண்டுகள் நாம் பின்னோக்கி போக வேண்டும். அப்படி சென்றால் மீட்பர் சிலுவையில் அறைந்த நாளுக்கு சென்று விடலாம். மீட்பர் 32 ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்தார். ஆகவே நாம் இன்னும் 32 ஆண்டுகள் பின்னோக்கி சென்றால், அவரின் பிறந்த வருடத்துக்கு சென்று விடலாம். அன்றுதான் நமது கிரகத்தில் வார்த்தைகளோடு அலைபவனும் பிறந்து உள்ளான்"

லில்லி மாதத்தில் பிறந்தவன் எழுதிய குறிப்புகளைப் படித்த பலர் "அவன் தன்னுடைய அறிவுதிறனையும், தான் எல்லாம் தெரிந்தவன் என்பதையும் காட்டுவதற்காகவே இந்த குறிப்பை எழுதியுள்ளான்" என்று புகார் கூறினர். ஆனால்,  வார்த்தைகளோடு அலைபவன் பற்றி முழுமையாக அறிந்தவர்கள் வேறுயாரும் இல்லாததால் லில்லி மாதத்தில் பிறந்தவன் எழுதிய குறிப்புகளையே நாம் நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்ப்படுகிறது.   

11 comments:

தனி காட்டு ராஜா said...

//செம்பருத்தி மாதம் நாற்பத்தி இரண்டாம் தேதி ஒருவன் பிறந்து உள்ளான் என்ற செய்தி அறிந்த மக்கள், கண்டிப்பாக அவன் எதிர்க்காலத்தை யூகித்து சொல்ல கூடியவன் என்று நம்பினர்.//

நீயும் கடைசிவரி வார்த்தையோடு அலைபவன் சொல்லிய கதையை சொல்லால் ......வார்த்தையோடு அலைபவன் கதையை சொல்லுகிறாயே......
இதில் தான் விசேசம் உள்ளது.....வார்த்தையோடு அலைபவன் தான் முக்கியம்....அவன் சொல்லும் கதையை விட... சரி தானே சரவணா :)

சரவண வடிவேல்.வே said...

சரியாக சொன்னீர்கள் கோபி..

கதை O.K'யா??

தனி காட்டு ராஜா said...

//கதை O.K'யா?? //

Yes..it is something different :)

Srikanth said...

கதையா ?

really very good..I like it..In 3 days i read all your post.. :)

சரவண வடிவேல்.வே said...

மிகவும் நன்றி ஸ்ரீ......

இது புனைவுகதை தான்.. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.,.. :)

என் வலைப்பதிவில் இருக்கும் அனைத்துமே ஒரு வகையான கதைதான்.

தங்களுடைய புதிய வலைப்பதிவை படிக்க ஆசை...

Srikanth said...

super ..my post is on blackrwhite.wordpress.com

சுப்பிரமணி சேகர் said...

I am going mad of your stories... I am going mad by your stories :)

சரவண வடிவேல்.வே said...

நன்றி நண்பா..

பல நேரங்களில் புதிதாக எதாவது முயற்சித்து பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது :)

நிலவுக்காதலன் said...

nice machi. expectin more :)

அருண் said...

அற்புதம் டா. நல்லா இருக்கு. நல்ல புனைவு. புனைவு உனக்கு கைகூடுகிறது :)

சரவண வடிவேல்.வே said...

@அருண் & Subramania Athithan

நன்றிகள் பல :)