நாமதான் சினிமா பைத்தியம் முதல் நாளே திரைப்படத்தை பார்க்கிறோம் என்றால், நமக்கு முன்னாலேயே சிலர் திரைப்படத்தை பார்த்துவிடுகிறார்கள். அப்படிதான் "ஆரண்ய காண்டம்" திரைப்படத்தை ஒருநாள் முன்னாலேயே பிரிவியூ ஷோவில் பார்த்துவிட்டு நண்பன் என்னிடம் சொன்னது "தமிழில் முதல் முறையாக ஒரு neo-noir வகை திரைப்படம்" என்று.
இந்த neo-nair என்ற வார்த்தையையே இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். அவனிடமே neo-nair என்றால் என்னவென்று விளக்கம் கேட்டததற்க்கு, "ஒருவகையான Thriller Movie" என்று சொல்லிமுடித்து விட்டான். அவன் எப்பொழுதுமே இப்படிதான். ஒன்று யாருக்குமே புரியாத வார்த்தையில் பேசுவான் அல்லது எப்படி சொன்னால் ஒருவனுக்கு ஒரே வார்த்தையில் புரியுமோ, அப்படி சொல்லி முடித்துவிடுவான். நானும் விக்கிபீடியாவில் neo-nair பற்றி படித்து பார்த்தேன். பக்கம் பக்கமாக போட்டு இருந்தார்கள்.
neo-nair என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறிவதற்க்காகவே "ஆரண்ய காண்டம்" திரைப்படத்தை பார்க்கப் போனேன். தமிழில் ஒரு வித்தியாசமான திரைப்படத்தை பார்க்க போகிறோம் என்பதை அப்பொழுது நான் அறிந்திருக்கவில்லை. திரைப்படத்தின் ஆரமபத்தில் வரும் வாக்கியங்கள்
"எது தர்மம்?"
"எது தேவையோ, அதுவே தர்மம்"
இதுதான் திரைப்படத்தின் கதையும் கூட. கேங்ஸ்டர் வாழ்க்கையின் ஒருநாள்தான் கதையின் கரு. வானம் திரைப்படம் போலவே நான்கு விதமான கதைகள், ஆனால், இங்கு அந்த நான்கு கதைகளும் திரைப்படத்தின் முடிவில் ஒன்று சேரவில்லை. நான்கு கதைகளும் படத்தின் ஆரம்பத்திலிருந்தே ஒன்றோடு ஒன்று பின்னப்படுகிறது.
படத்தை இயக்கி இருப்பவர் புதுமுக இயக்குநர் "தியாகராஜன் குமாராஜா". படத்தில் எங்கேயுமே பார்வையாளர்களின் சட்டையை பிடித்து “நீ கண்டிப்பாக சிரிக்க வேண்டும், நீ கண்டிப்பாக இந்த காட்சிக்கு அழ வேண்டும்” என்று கட்டாயப்படுத்தவில்லை. அதைப்போல் திரைப்படத்தின் பின்னனி இசையும் அற்புதமாக உள்ளது. சிலர் வழக்கம்போ, யுவன் இந்த இசையை இந்த மொழியிலிருந்து காப்பியடித்து விட்டார் என்று சாட்சியுடன் சொல்லலாம், அது அவர்களின் பிரச்சனை.
திரைப்படத்தின் எல்லா கதாபாத்திரமும் அற்புதமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். தமிழ் சினிமாவை உலகளவில் எடுத்து செல்ல "அழகர்சாமியின் குதிரை" போன்ற திரைப்படங்களால் மட்டுமே முடியாது. அதற்க்கு கண்டிப்பாக "ஆரண்ய காண்டம்" போன்ற ஸ்டைலான திரைப்படங்களின் உதவியும் தேவை.
இந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இப்பொழுது டைப் செய்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட neo-nair என்ற வார்த்தையைப் பற்றி குழப்பம் இருந்துக்கொண்டேயிருக்கிறது.
2 comments:
சட்டையை பிடித்து “நீ கண்டிப்பாக சிரிக்க வேண்டும், நீ கண்டிப்பாக இந்த காட்சிக்கு அழ வேண்டும்” :):):) shall v go next week da.. :)
sure machi...
Post a Comment