Friday, October 28, 2011

இது சூப்பர் ஹீரோக்களின் காலம்

தீபாவளிக்கு வந்திருக்கும் திரைப்படங்களை பார்க்கும் போது ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது, "இது சூப்பர் ஹீரோக்களின் காலம்" என்று.  எங்கு திரும்பினாலும் சூப்பர் ஹீரோக்களாக இருக்கிறார்கள். இந்த தீபாவளிக்கு மட்டும் மூன்று புதிய சூப்பர் ஹீரோக்கள் உருவாகியுள்ளார்கள். (நான் இன்னும் ரா-1 பார்க்கவில்ல்லை, ஆனால், அந்த திரைப்படத்தைப் பார்த்த நண்பன் சொன்ன கதையின்படி அதுவும் சூப்பர் ஹீரோ திரைப்படம் தான் என்பது உறுதியாக தெரிகிறது)

ஏழை, பணக்காரன் என்று எல்லாருக்கும் சூப்பர் ஹீரோ தேவைப்படுகிறார்கள். அதை நன்கு அறிந்த சினிமா இயக்குநர்கள், இந்த முறை மூன்று புதிய சூப்பர் ஹீரோக்களை உருவாக்கியுள்ளார்கள். ஒருவன் - ஏழைகளுக்காக, மற்றொருவன் - தமிழர்களின் பெருமையை நிலைநாட்ட, இன்னொருவன் விளையாட்டில் மூழ்கியிருக்கும் இன்றைய சமூகத்துக்காக.

முதலில், மூன்று புதிய சூப்பர் ஹீரோக்களை தாங்கும் அளவு நாம் தயாராகயிருக்கிறோமா???. ஒரு சூப்பர் ஹீரோ வீடியோ கேமிலிருந்து குதிக்கிறார். இன்னொரு ஹீரோ மரபணு என்கின்ற Intellactual வார்த்தையிலிருந்து. மூன்றாவது சூப்பர் ஹீரோ, மேலே சொன்ன இரண்டை போலவும் இல்லாமல், ஒரு சாதாரண மனிதனே சூப்பர் ஹீரோவாக மாறுகிறார். "எந்த ஒரு புதிய சக்தியும் தேவை இல்லாமல், ஒரு சாதாரண மனிதன் கூட சூப்பர் ஹீரோவாக மாறலாம்" என்று சொல்வதின் மூலம், முதல் இரண்டு ஹீரோக்களை கடைசியாக வந்தவன் வீழ்த்தி விடுகிறான்.


நாம் சொன்ன அந்த சாதாரண சூப்பர் ஹீரோவால், "எப்படி இவ்வளவு விரைவாக ஒட முடிகிறது?? அதுவும் ரயிலை விட வேகமாக,!!! எப்படி வானிலிருந்து ஒரு காரின் மேல் குதிக்க முடிகிறது?? அதுவும் குதித்தவுடன் எப்படி காரின் நான்கு பக்க கண்ணாடியும் உடைகிறது!! எப்படி ஒரு இரும்பு கம்பியால், தலையில் அடித்த பின்னரும் சண்டை போட முடிகிறது?? கோயம்பேடிலிருந்து அண்ணா நகர் போகவே ஒருமணிநேரமாகும் இந்த காலத்தில் எப்படி சென்னை முழுவதும் அந்த சாதாரண சூப்பர் ஹீரோவால் போக முடிகிறது?? தலையில் தொப்பி போட்டாலே, வானத்தை நம்மால் பார்க்க முடியாத போது, நெற்றியை பாதி வரை துணியால் மறைத்த ஒருவனால், எப்படி நாலாம் பக்கமும் பார்த்து சண்டை போட முடிகிறது??" இப்படி பல கேள்விகளை கேட்பீர்கள் என்றால் உங்களுக்கு வரும் ஒரே பதில் "இது சினிமா பாஸ்".

சரி அவர்கள் சொல்வது போல் இது சினிமாவகே இருந்துவிட்டு போகட்டும், வாழ்க இளைய தளபதி.

சரி இன்னொரு சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் என்ன செய்கிறார்கள்??? 



ஏ.ஆர். முருகதாஸ் சார், தமிழர்கள் பற்றி நன்கு தெரிந்துவைத்து இருக்கிறீர்கள். திரைப்படம் முழுவதும் தமிழன், தமிழன் என்று சொன்னாலே படம் ஓடிவிடும் என்று நம்புகிறீர்கள். நல்ல வியாபார யுக்தி, நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துகள். சர்க்கஸ் ஹீரோ தீடிர் என்று தமிழர், தமிழ் தேசம், தமிழ் மொழி என்றெல்லாம் பேசுகிறார், அந்த வசனம் வரும் வரை, அவர் தமிழ் மீது ஆர்வம் உள்ளவர் என்று திரைப்படத்தில் எங்கேயுமே காட்டவில்லை. ஒருவேளை வசனம் எழுதி தயாராக இருப்பதால், அந்த காட்சியில் மட்டும் அவர் தமிழர் தலைவனாக மாறியிருக்கலாம். தவறில்லை, இது உங்கள் திரைப்படம், நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம். மீண்டும் வாழ்த்துகள்.

முருகதாஸ் சார் ஒரு சந்தேகம் சார் "இது இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நடக்கும் சண்டையா, இல்ல தமிழ் நாட்டுக்கும் சீனாவுக்கும் நடக்கும் சண்டையா??" நமது கேப்டன் மற்றும் ஆக்‌ஷன் கிங் கூட இந்தியாவுக்காக தான் போராடுவார்கள். தமிழனுக்காக போராடும் முதல் ஹீரோ இவர்தான் என்று நினைக்கிறேன். அப்பறம் இன்னொன்று சார், திரைப்படத்தில் ஒரு வசனம் வருகிறது "ஒரு தமிழனை முப்பது நாடுகள் சேர்ந்து கொன்றால், அது துரோகம்" என்று. (வாக்கியம் சரியாக நினைவில்லை) இந்த வசனம் எதற்காக அந்த காட்சியில் வருகிறது என்பதை இரவு முழுவதும் யோசித்தும் என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

இப்பொழுது இது போதும். இதை போல் எழுதிக்கொண்டு இருந்தால், என்னை கூட எதாவது சூப்பர் ஹீரோ தாக்க நேரிடும் அபாயம் இருக்கிறது.

மொத்தத்தில் தீபாவளிக்கு இது போன்ற திரைப்படங்கள் பார்க்க நேரிடுவது, நரகாசுரனை கொன்ற பாவத்தாலேயே என்று நினைக்கிறேன்.

7 comments:

தனி காட்டு ராஜா said...

///மொத்தத்தில் தீபாவளிக்கு இது போன்ற திரைப்படங்கள் பார்க்க நேரிடுவது, நரகாசுரனை கொன்ற பாவத்தாலேயே என்று நினைக்கிறேன்.///

:))

bandhu said...

//மொத்தத்தில் தீபாவளிக்கு இது போன்ற திரைப்படங்கள் பார்க்க நேரிடுவது, நரகாசுரனை கொன்ற பாவத்தாலேயே என்று நினைக்கிறேன்.//
this is nice..

நிலவுக்காதலன் said...

7 am arivu is gud only sir..:) social network nu movie la zuckerberg vachu edutha, US karan best,motivating themsel apdi ipdi nu pugazhringa. tamil karan perumaya solli padam edutha viyabara yukthi nu mattam thatturinga. and circus karan en tamil pathi pesakoodathu.avanu tamilan thana. also he talked dat dialogue at the right time in the movie only. ofcourse der r flaws in the movie as u said. nothin can be 100% perfect. wat msg we take from the movie is imp. jus follow our culture which is like pokkisham but we dono the importance of it but praising and followin others.

and luv the way u write machi.. sema kalai a :)sense of humor athigama pochu :)

தலையில் தொப்பி போட்டாலே, வானத்தை நம்மால் பார்க்க முடியாத போது, நெற்றியை பாதி வரை துணியால் மறைத்த ஒருவனால், எப்படி நாலாம் பக்கமும் பார்த்து சண்டை போட முடிகிறது? :):):)

சரவண வடிவேல்.வே said...

@Subramani Machi, i never told, whether the movie is bad or good... my question is why we are linking the word "tamil"" with this movie...???

(Facebook'ல் நான் எழுதிய சிலவற்றை இங்கே காப்பி செய்துள்ளேன்)

ஏழாம் அறிவு திரைப்படம் "The 7th Sense" என்ற பெயரில் தெலுங்கிலும் வந்திருப்பதாக செய்தியில் படித்தேன். இங்கு "தமிழ், தமிழன், தமிழ் தேசம்" என்று வரும் வாக்கியங்கள் எல்லாம், தெலுங்கில் "தெலுங்கு, தெலுங்கினம், தெலுங்கன், ஆந்திரா" என்றே வரும் என்று நினைக்கிறேன்....

இந்த படத்தில் தமிழர்கள் பற்றி பேசி இருப்பதுலாம், ரசிகர்கள் விசிலடிக்கவும், ரசிகர்களை உசிபேத்தவும் உதவும் ஒரு business trick என்கிறேன்...

"ஒரு தமிழனை, முப்பது நாடுகள் சேர்ந்து கொள்வது , பெரிய துரோகம்" இப்படி ஒரு வாக்கியம் இந்த திரைப்படத்தில் வரும் (சரியாக வரிகள் நினைவில் இல்லை)... ஆனால், அந்த காட்சிக்கும் அந்த வாக்கியத்துக்கும் சம்மந்தமே இல்லை பா... இது ஒரு எடுத்துக்காட்டு தான்... இதை போல் எத்தனையோ எழுதிக்கொண்டே போகலாம்...

முக்கியமாக, இந்த படத்தின் கதையே இந்தியாவை சீனா அழிக்க முயற்சிப்பது தானே, பின் எதற்காக பா, வார்த்தைக்கு வார்த்தை தமிழன்...... அதுவும் இலங்கை வரைக்கும் போக வேண்டிய கட்டாயம் என்ன??

Anonymous said...

அருமையான விமர்சனம். இந்த படத்தின் மூலமாக நான், இல்லை எல்லோரும் தெரிந்துக்கொண்ட ஒரு விஷயம் போதிதர்மன் மட்டும் தான், மற்றும் அவர் ஒரு தமிழர். இதை வைத்துக்கொண்டு படத்தை வெற்றிப்படமாக ஆக்க முடியும் என்று இயக்குனரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்...

சுப்பிரமணி - social network படத்தில் எனக்கு என்னமோ அவர் ஒரு அமெரிக்கர் என்று அடிக்கடி சொன்னவாறு எனக்கு தோணவில்லை.

சரவண வடிவேல்.வே said...

நம்ப தகுந்த செய்திகள் மூலம் கிடைத்த ஒரு தகவல்...தெலுங்கில் போதிதர்மர் குண்டூரில் பிறக்கிறாராம்... வாழ்க தமிழ்

நிலவுக்காதலன் said...

adappavigala. ithu veraya.:)"ஒரு தமிழனை, முப்பது நாடுகள் சேர்ந்து கொள்வது , பெரிய துரோகம்" me too confused machi. sudden a face a morappa vachu solluvana..:)hayio haiyo:)watsoever.. can watch for surya acting n hardwork. n luv bodhidharma..