Thursday, June 11, 2009

கதை கேளு கதை கேளு

அண்ணாநகர் Coffee Day'யில் நான் அவளுக்குகாக காத்துக்கொண்டு இருந்தேன். அண்ணாநகர் Coffee Day என்றவுடன் அனைவருக்கும் சாந்தி காலணி அருகில் இருக்கும் Coffee Day'தான் நினைவில்வரும், ஆனால் நான் சொல்லும் Coffee Day திருமங்கலம் சிக்னல் அருகில் உள்ளது.

L.C.D T.V' யில் Akon'னின் Beautiful பாடல் ஓடிக்கொண்டு இருந்தது. Beautiful என்ற வார்த்தையை Akon'யை தவிர வேறுயாராலும் இந்தளவு Beautiful'ஆக சொல்லமுடியாது.

அரைமணி நேரம் கழித்துத்தான் வந்தாள். வந்தவள் "Sorry'டா லேட் ஆயிடுச்சு" என்றாள். சுஜாதா சொல்வது போல, அழகான பெண்கள் செய்யும் தவறுகள் மட்டும் உடனே அனைவராலும் மன்னிக்கபடுகின்றன.

அவள் கையில் ஒரு வெள்ளை துணி இருக்க,

"என்னது கையிலே ?"

"துப்பட்டா" என்றாள்.

"அது என் கையில் வைத்து இருக்கிறாய்?"

" வெயில் அதிகமாக இருக்குல, அதான் தலையில் போட்டுக்கொண்டு வந்தேன்".

நல்லவேளை இப்பொழுது எல்லாம் நான் பெண்களின் கழுத்தைப்பார்த்து பேசுவது கிடையாது.

Compass'யை வைத்து குத்தினால் போல நேற்றியில் ஒரு பொட்டு, கையில் போட வேண்டிய வளையலை காதிலும், கலுத்தில் போட வேண்டிய செயினை கையிலும் அணிந்துயிருக்கிறாள். இதை அவளிடம் சொல்ல நினைத்து பின் ஏன் வம்பு என்று நிறுத்திவிட்டேன்

டேய் போதும் கதைக்கு வா என்கிறீர்களா. யார் சொன்னது இப்பொழுது கதை எழுதபோறேன் என்று. ஏன் பா, நீங்க என்னை ஒரு கதையாவது நிம்மதியா எழுதவிடுறீங்களா ?. எது எழுதுனாலும் அதில் ஒரு குற்றம் சொல்லவேண்டியது. இதுல மதி சொல்றான் நான் எல்லா கதையையும் Romantic'காக முடிக்கவேண்டுமாம். செல்வாவோ நான் எழுதுறது எல்லாம் "cut n copy" என்கிறான். நரேனுக்கும், மதனுக்கும் அவர்களின் கதாபாத்திர பெயர் குறித்து பிரச்சனை. சுப்புரமணி தனது வலைப்பதிவில் என்னைப்பற்றி கதை எழுதபோவதாக கங்கனம் கட்டிகிட்டு அலைகிறான். "கடவுளே கணபதி" பதிவை நீக்கவேண்டும் என்று ஒரு பெண்ணிடம் இருந்து கொலை மிரட்டல் வேறு.

மேலும், எனக்கு இதுவரை தொடர்ந்து Comments எழுதிவந்த ரீ-மதி புதிதாக வேலையில் சேர்ந்து உள்ளதால், எனக்கு இப்பொழுது Comments'கள் எழுதுவதுயில்லை. நான் கடைசியாக எழுதிய இரண்டு பதிவுகளுக்கும் இதுவரை Zero Comments. (சுப்புரமணிக்கு SMS செய்து " எதாவது Comments எழுதவும் " என்று சொல்லியும் இதுவரை " No Response ")

இப்பொழுது சொல்லுங்கள் இப்படிபட்ட இந்த " So Called " readers'க்காக நான் ஏன் தொடர்ந்து எழுதவேண்டும் (உன்னை யாருடா எழுத சொன்னா ? என்கிறீர்களா). ஆனால், நான் உங்கள் உயிரை எடுக்கும்வரை தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருப்பேன். அருணை போல என் பதிவும் உயிரோசையில் வரும்வரையாவது நான் எழுதுவதை நிறுத்துவதாக இல்லை. அதுவரை என் பதிவை தொடந்து படித்துக்கொண்டு இருக்கும் நீங்கள் ஆறு பேரும், என் பதிவை தொடர்ந்து படித்து ஆதரவு அளிக்கும்மாறு வேண்டிவிரும்பி கேட்டுக்கொள்கிறேன்!!!!!!!!! Plz...

2 comments:

பேரின்பா said...

நீ தொடர்ந்து எழுது மச்சி..
எழுத்து என்பது எழுதுவது...
பின் திருத்தி எழுதுவது
கிழித்து எறிந்துவிட்டு மறுபடியும்
எழுதுவதுனு... எங்கையோ படிச்ச ஞாபகம்...

Subramania Athithan said...

"அண்ணாநகர் Coffee Day'யில் நான் அவளுக்குகாக காத்துக்கொண்டு இருந்தேன்." eppa da intha koothullam nadakkuthu. GD la pudicha ponnaa :)

"அழகான பெண்கள் செய்யும் தவறுகள் மட்டும் உடனே அனைவராலும் மன்னிக்கபடுகின்றன" very true saga

(சுப்புரமணிக்கு SMS செய்து " எதாவது Comments எழுதவும் " என்று சொல்லியும் இதுவரை " No Response ")- இதோ வந்துட்டோம்ல.. நீ நல்லா கதை எழுதுடா மச்சி(but pls change naren name when do so for others(madan)பையன் அழுறான் :)). கண்டிப்பா உயிரோசையில் வரும். சரி இவ்ளோ பிட் போட்ருக்கேன். அந்த அண்ணாநகர் Coffee Day'ல ஒரு treatuuuuuu :)
no need for dat white duppatta. bcoz...

If u wann to walk with me
come and walk, with me
if u wann to cry with me
come and cry, with me
if u wann to laugh with me
come and laugh, with me
if u wamn to die with me
come and die, with me
if u wann to talk with me
sorry, I'm not the one
you are searching for.:)