Thursday, June 3, 2010

Reality Show

"Reality Show", எனக்கு பிடிக்காத டி.வி நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இங்கு "இதுவும் ஒன்று" என்ற வார்த்தையை ஒரு சம்பிரதாயத்துக்காக பயன்படுத்தியிருக்கிறேன். இப்பொழுது எந்த சேனலை பார்த்தாலும் "Reality Show'கள்" மட்டும்தான் நடந்துக்கொண்டு இருக்கின்றன.

"நீயா, நானா?, சூப்பர் சிங்கர், மானாட மயிலாட" என்று பட்டியலை பெரியதாக்கிக்கொண்டே போகலாம் (எனக்கு பலவற்றின் பெயர்கள் கூட நினைவில் இல்லை).

சென்ற வாரம், ஒரு நிகழ்ச்சியில் " Dance Competition " என்று சொல்லி மேடையில் அமைத்த கொட்டும் அருவியில் இருவர் ஜல்சா பண்ணிக்கொண்டு இருந்தார்கள். சனிக்கிழமை இரவு 12க்கு வசந்த் டி.வி.யில் கூட இந்தளவு தெளிவாக காட்டமாட்டார்கள். நம்பாவிட்டால் நீங்களே ஒரு சனிகிழமை இரவு வசந்த் தொலைக்காட்சியை பாருங்கள்.

"Airtel Junior Super singer" என்று இன்னொரு அபத்தம். இந்த நிகழ்ச்சியால் எப்படி குழந்தைகள் மனதளவால் பாதிப்பு அடைகிறார்கள் என்பது, குழந்தைகள் வலைப்பதிவு எழுத தொடங்கினால் மட்டுமே நமக்கு புரியும்.

"நீயா, நானா?" நிகழ்ச்சியை பற்றி சாரு தனது வலைப்பதிவில் தெளிவாக எழுதி இருக்கிறார். எப்பொழுதும் எதைபற்றியும் கவலைப்படாமல், தனது மனதில் தோன்றியதை தெளிவாக எழுதும் சாரு, இதைபற்றியும் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

அதன் முகவரி http://charuonline.com/blog/?p=594

Reality Show'வை பற்றி Jim Carrey நடித்து "truman show" என்ற திரைப்படம் 1998'ல் வெளிவந்தது. நேரம் கிடைத்தால் பாருங்கள்.

4 comments:

நிலவுக்காதலன் said...

i know u will write this blog bcoz i already read charu's blog on this :)btw topic name may be diff instead reality show. bcoz eventhou u written commonly abt reality show ur intention is to support charu only. and i simply laughed by readin his blog last week. its lik குழந்தையின் பிதற்றல் :)

சரவண வடிவேல்.வே said...

அது ஒரு குழந்தையின் பிதற்றலாகவே இருந்துவிட்டு போகட்டும், அந்த குழந்தையின் பிதற்றல் படிப்பதற்க்கு நன்றாக இருக்கிறதே அது போதும். நான் சாருவுக்கு முழுமையாக support எதுவும் செய்யவில்லை. எனக்கு தெரியும் சாரு இப்படிதான் என்று. நாளைக்கே அந்தோனிக்கும் இதுக்கும் எந்த சம்மந்தம் இல்லை, அவர் உத்தமர் என்று சாரு எழுதினால், நான் கண்டிப்பாக அச்சரியம் அடைய போவது இல்லை. அது அவரின் இயல்பு.


So u like reality Show, right???. No problem.. அது உங்களின் தனிபட்ட விருப்பம்.

Airtel Super Singer'ல கிராமத்து குழந்தைகள் எதுவும் பங்குகொள்ளாதற்க்கு காரணம் என்ன?.... கிராமத்து குழந்தைகள் நன்றாக பாட மாட்டார்களா??.. இளையராஜா போன்றவர்கள் கிராமத்தில் இருந்துதானே வந்தார்கள்.

இதைபோல் சில கேள்விகள்தான் எனக்கு reality show'கள் பிடிக்காமல் போனதற்கு காரணம். "i hate reality show", இதை பலரிடம் பலவருடங்களாக சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

என்னை பொறுத்தவரை IPL கூட ஒருவகையான Reality showதான்.

தனி காட்டு ராஜா said...

Business World -இல் இதெல்லாம் சாதாரணமப்பா .....

N.Parthiban said...

hi sarava vadivel,

your articles are nice...unfortunately i was not able to see your comments in my blog which you wrote in april...thanks for writing in...pls do visit when u have time

endrum anbudan,
N.Parthiban,

http://parthichezhian.blogspot.com/