உங்கள் அனைவருக்குமே தெரியும் நான் சாரு நிவேதிதாவின் தீவிர ரசிகன் என்று. என்னூல் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் சாரு, அந்தவகையில் அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அவருடைய எத்தனையோ பதிவுகளை "படித்ததில் பிடித்தது" என்று இந்த வலைப்பதிவில எழுதிவிட்டேன். இனிமேல் அவரைப் பற்றி எழுதவே கூடாது என்றுதான் முடிவு செய்திருந்தேன். ஆனால் என்ன செய்ய??. "தான் சொல்லவருவதை அவரைவிட யாராலும் இந்தளவு தெளிவாகவும் ஆணித்தரமாக எழுதமுடியாது."
அவருடைய சமீபத்திய "அராத்து, கருந்தேள், கேள்வி பதில்" போன்ற பகுதிகள் ஒருவித சலிப்பைத்தான் எனக்கு தந்தது. "அனைவரும் சொல்வதுபோல், நம் சாரு உண்மையாகவே மாறிவிட்டாரா??" என்று ஒரு சந்தேகம் கூட வந்தது. எது எப்படியோ, அவர் தற்பொழுது எழுதியிருக்கும் "என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே?" என்ற பதிவுக்காகவே அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடலாம்.
சாருவின் "என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே?" பதிவில் இருந்து சிலவரிகள் கீழே,
(இது சாரு கட்டுரையின் ஒரு பகுதியே, தயவு செய்து அந்த கட்டுரை முழுவதையும் இங்கு கிளிக் செய்துப்படிக்கவும். நானும் ரஜினியின் ரசிகன் என்பதையும் இங்கே சொல்லிக்கொள்கிறேன்)
"தன் மகள் திருமணத்துக்கு ரஜினிகாந்த் இதுவரை அவரைத் திட்டிய அரசியல் தலைவர்களுக்கெல்லாம் நேரில் போய் பத்திரிகை கொடுத்திருக்கிறார். ஆனால் தன் ரசிகர்களை மட்டும் திருமணத்துக்கு வர வேண்டாம் என்று சொல்லி விட்டார். அவரை எதிர்த்த திருமாவளவனோடும் பாமக தலைவர்களோடும் சிரித்துக் கொண்டு போஸ் கொடுக்கிறார். ”அப்படியானால், அப்போது அந்தக் கட்சித் தொண்டர்களோடு மல்லுக்கு நின்ற எங்கள் நிலை என்ன?” என்ற அதிர்ச்சி அலை ரசிகர்களிடையே எழுந்தது. உடனே ரஜினியும் தன் ரசிகர்களை தனியாக அழைத்து, அவர்களுக்குத் தனியாக விருந்து வைக்க விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். ரஜினி ரசிகர்களுக்கு இதை விட வேறு அவமானம் வேண்டாம்.
ரஜினி என்றுமே தன் ரசிகர்களை மதித்தது கிடையாது. அப்படி இருக்கும் போது ரசிகர்கள் ஏன் அவரை மதிக்க வேண்டும்? ரஜினியின் படம் வந்தால் எல்லோரையும் போல் பார்த்து விட்டுப் போக வேண்டியதுதானே? ஏன் சொந்தக் காசை செலவழித்து ரசிகர் மன்றம் வைக்க வேண்டும்? அவர் படம் வெளிவந்தால் ஏன் அவருக்கு 100 அடி உயர கட் அவுட் வைத்து பீர் அபிஷேகம் செய்ய வேண்டும்? ரஜினி ’என் வீட்டுக்குத் திருமணத்துக்கு வராதே’ என்று சொல்வது போல், ’நாங்களும் உங்கள் படத்தைப் பார்க்க மாட்டோம்’ என்று கூட சொல்ல வேண்டாம்; குறைந்த பட்சம், படம் வந்த உடனே 500 ரூ. டிக்கட் கொடுத்துப் பார்க்காமல் இரண்டு வாரம் கழித்து 50 ரூ. கொடுத்துப் பார்க்கலாமே? நம் மாமனோ மச்சானோ தன் வீட்டுத் திருமணத்துக்கு அழைக்காவிட்டால் அடுத்து அவர்கள் வீட்டு விசேஷத்தை ‘பாய்காட்’ செய்கிறோம் அல்லவா? இதே ரோஷத்தை ரஜினியிடம் காட்டினால் என்ன?
லட்சக் கணக்கான ரசிகர்களை சமாளிக்க முடியாது என்று அவர் சொல்ல முடியாது. அரசியல்வாதி கூட தன் தொண்டர்களை ’வாருங்கள் வாருங்கள்’ என்று அழைத்து பிரம்மாண்டமாய் கூட்டம் கூட்டி பிரியாணி பொட்டலம் கொடுக்கிறார். அரசியல்வாதிக்கு செல்வாக்கு இருக்கிறது, செய்கிறார் என்று பார்த்தால் ஆன்மீகவாதியும் பல்லாயிரக் கணக்கான பக்தர்களை ஒரே இடத்தில் கூட்டுகிறார். அப்படியிருக்கும் போது ரஜினியால் மட்டும் ஏன் முடியாது? காரணம், மனம் இல்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.
இன்னொரு கொடுமை. நக்சலைட்டுகள் நான்கு போலீஸ்காரர்களைக் கடத்தி வைத்துக் கொண்டு, அதில் ஒரு போலீஸ்காரரைக் கொன்று போட்டிருக்கிறார்கள். அதே நாளில் இந்தியாவின் ஹோம் மினிஸ்டர் இங்கே சென்னையில் எந்தப் பதற்றமும் இல்லாமல் ரஜினி வீட்டுக் கல்யாணத்தில் விருந்து சாப்பிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்."
(இது சாரு கட்டுரையின் ஒரு பகுதியே, தயவு செய்து அந்த கட்டுரை முழுவதையும் இங்கு கிளிக் செய்துப்படிக்கவும்)
3 comments:
எப்படி சரவணா உன்னால முடியுது ..?
நான் சாரு நிவேதிதாவோட 0 டிகிரி புத்தகம் ஒரு மாசத்துக்கு முந்தி வாங்கினேன்.....
ஒரு 15,20 புத்தகம் படித்து இருப்பேன்....எதோ பைத்தியகார ஆஸ்பத்திரியில் நுழைந்த உணர்வு ....
ஒரு நாள் முழுதும் கூட ஓஷோ,சாண்டில்யன் புத்தகம் படித்து இருக்கேன்...தலை வலி வந்ததே கிடையாது ....
அமாம் ..... 0 டிகிரி புத்தகத்தோட மைய கருத்து தான் என்ன .....???மிண்டும் படிக்கலாம் என்று உள்ளேன் ....
ம்....ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை ....
ரஜினி ரசிகர்களை மதிக்கவில்லை என்று நான் நினைக்க வில்லை சரவணா .....
அவர் ரசிகர்களை அனுமதித்தால் மிக பெரிய கூட்டமே வந்து விடும் ....சமாளிப்பது மிக மிக கடினம் .....
ரஜினி -டம் எத்தனயோ தவறுகள் இருக்கலாம்.......ஒரு மனிதன் சாதரனமாக இவ்வளவு புகழ் பெற முடியாது ....
ரஜினி சாதரனமாகவே நான் தண்ணி,கஞ்சா,பெண் இல்லாமல் இரவை கழிக்க முடியாது என்று சொன்னவர் ...
புகழின் உச்சியில் எவனாவது ...இப்படி வெளிப்படியாக சொல்லி உள்ளனா ...(கண்ண தாசனை தவிர )....
எத்தனையோ அரை குறைகள் தன் சொட்டை தலை யை மறைக்க டோப்பா வைத்து கொண்டு போலியாக தன் தோற்றத்தை காட்டி கொண்டு உள்ளர்கள் ....
ரஜினி -இடம் போலி தனம் இல்லை ......
யாருக்கு எது கிடைக்க வேண்டுமோ ...அது தான் கிடைக்கும்......
ரஜினி இடம் தவறு இருந்தால் இருந்து விட்டு தான் போகட்டுமே .....யாரிடம் தான் தவறு இல்லை ...
எதோ சிலர் ரஜினியை தாக்கி விட்டால் தாங்கள் பெரிய ஆட்கள் என்று நினைத்து கொள்கிரார்கள் ...
ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை... சரியா சொன்னீங்க பாஸ்....
சாருவின் எழுத்தை 0 டிகிரியில் இருந்து தொடங்கியது தவறு என்று நினைக்கிறேன். நீங்கள் அவரின் "காமரூபக் கதைகள்" புத்தகத்தில் இருந்து தொடங்கியிருக்க வேண்டும். (பெயரை வைத்து தவறாக நினைக்க வேண்டாம்). அதன் பின் "ராஸலீலா" புத்தகம்.
சத்தியமாகவே சொல்கிறேன், என் வாழ்க்கையை இரண்டாக பிரிக்கலாம் "சாருவின் எழுத்துக்கு முன்", "சாருவின் எழுத்துக்கு பின்" என்று. இதை நான் அவரை புகழ்வதற்காக சொல்லவில்லை, அப்படி ஒரு மாற்றத்தை என்னூல் ஏற்படுத்தியவர். "ஏது சரி, ஏது தவறு" என்று குழப்பத்தில் இருந்த போது அவர் எழுத்துதான் எனக்கு ஒரு தன்னம்பிக்கையை தந்தது. இது சிலருக்கு ஓஷோ'வால் கிடைக்கலாம், சிலருக்கு ஒரு பெண்ணால் கிடைக்கலாம். எனக்கு அது அவரின் எழுத்தில் கிடைத்தது.
அந்த கட்டுரையில் சாரு ரஜினியைப் பற்றி கடைசியில் மட்டுமே பேசுகிறார்கள். அந்த கட்டுரையின் முழு அம்சமே, கருணாநிதி குடும்பத்தைப் பற்றியும், உமாசங்கர் ஐஏஎஸ் பற்றியும் சொல்வதுதான்.
Post a Comment