Thursday, December 30, 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்

என்னை பொருத்த வரை 2010 மிகவும் மோசமான ஆண்டு. எப்படியோ முடிந்துவிட்டது. அதுவரை சந்தோஷம். இனி வரும் வருடமும் இதைவிட மிகவும் மோசமாக இருக்கும் என்றே நம்புகிறேன்.

இந்த ஆண்டாவது, பல நாட்களாக எனது புத்தகப்பையில் தூங்கிக்கொண்டு இருக்கும் "Kafka, Fyodor Dostoevsky" ஆகியோரின் புத்தகங்களை முடித்தாக வேண்டும். இனி எவன் பேச்சை கேட்டும் ஆங்கில புத்தகங்கள் மட்டும் வாங்கவேகூடாது என்ற முடிவோடு இருக்கிறேன். அவர்கள்தான் சொன்னார்கள் என்றால் எனக்கு எங்கே போனது புத்தி, எனது ஆங்கில புலமைதான் எனக்கு நன்றாக தெரியுமே.

தமிழிலேயே எத்தனை அழகான புத்தகங்கள் இருக்கின்றன், முதலில் அவற்றை படிப்போம். அதற்கே இந்த ஆயுள் பத்தாது.

சரி சார், வரும் நான்காம் தேதி முதல் " 34வது சென்னை புத்தகக் கண்காட்சி " தொடங்க இருக்கிறது. நாம் தேடும் எல்லா புத்த்கங்களும் கிடைக்கும். கண்டிப்பாக அங்கே சந்திப்போம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


3 comments:

சுப்பிரமணி சேகர் said...

"அவர்கள்தான் சொன்னார்கள் என்றால் எனக்கு எங்கே போனது புத்தி, எனது ஆங்கில புலமைதான் எனக்கு நன்றாக தெரியுமே."
அது சரி...

சுப்பிரமணி சேகர் said...

நன்றி அண்ணே! ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன் இந்த வருடப் புத்தகக் கண்காட்சியை.

சுப்பிரமணி சேகர் said...

புத்தாண்டு வாழ்த்துகள்... புத்தகம் ஆள வாழ்த்துகள்...!