Monday, February 14, 2011

தன்னிரக்க கவிதை

ஒரு தன்னிரக்க கவிதையை
யாராலும் அவ்வளவு எளிதில்
எழுதி விடமுடியாது,

அதற்க்கு நீங்கள் பல ஏமாற்றங்களை
சந்தித்திருக்க வேண்டும்.

முக்கியமாக, ஒரு பெண் உங்கள் காதலை
நிராகரித்திருக்க வேண்டும்.

நம்பிக்கை துரோகம் பற்றி நண்பன்
ஒருவன் கற்பித்திருக்க வேண்டும்.

யாரை இனி பார்க்கவே கூடாது
என்று நினைத்தீர்களோ,
அவர் வீட்டு கதவை
நீங்கள் தட்டியிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம், இரண்டு முறையாவது
தற்கொலைக்கு முயற்சி செய்திருந்தால்
இன்னும் உசிதம்.

தோட்டத்தில் புதிதாக பூத்த பூ,
எதிர்வீட்டு குழந்தையின் புன்சிரிப்பு,
சாலையில் ஊதுபத்தி விற்க்கும் குருடன்,
ஓஷோ புத்தகங்கள்,
என்று தன்னம்பிக்கை தரும்
எல்லாவற்றையும் சில நாட்கள்
பார்க்கவே கூடாது.

முடிந்தால்
கவிதையின் முடிவில்
இது ஒரு தன்னிரக்க கவிதை
என்று முடியுங்கள்.

5 comments:

தனி காட்டு ராஜா said...

ஆமா சரவணா ...ஒரு தன்னிரக்க கவிதையை
யாராலும் அவ்வளவு எளிதில்
எழுதி விடமுடியாது...

ஆனா ..தண்ணிய இறக்கிட்டா ...கவிதை கவிதையா எழுத முடியுமாமே :)

தன்னிரக்க அல்லது தண்ணிய இறக்கு... Choice is ours :)

சுப்பிரமணி சேகர் said...

இரசிக்காமல் இருக்க முடியவில்லை.

Shakthee said...

i feel it thozha..... :-)
romba nalaikku piragu oru rasikkum kavithaiya padichu irukken...!!!

Unknown said...

good points --
i have felt most of what you have described ... but yet to get to self-pity !
hopefully i will get their soon ...

#en yennaku mattum ippadi ellam nadakuthunu...# oru post ezhutheduren!

Arun said...

நல்லா இருக்கு டா...:)