Thursday, September 29, 2011

எதற்கும் உங்கள் மனதை தயார் படுத்திக்கொள்ளுங்கள்

சினிமாக்களைப் பற்றி எழுதவே கூடாது என்று நினைத்தாலும், மீண்டும் மீண்டும் அங்கேயே வந்து நிற்கிறேன். தமிழகத்தில் சினிமாவை தவிற்று பேச வேறு எதாவது இருக்கிறதா என்ன??

இந்தமுறை இந்த பதிவு "எங்கேயும் எப்போதும்" திரைப்படம் பற்றி. வழக்கம் போல் இந்த படத்தையும் முதல் நாளே பார்த்தாகிவிட்டது.  பார்த்த இடம் எங்க ஊரில் இருக்கும் தேவி திரையரங்கம். கொஞ்ச பேருக்கு ஸ்டார் தியேட்டர் என்றால்தான் தெரியும். அவர்களாம் நாகைக்கு வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மேலானவர்களாக இருக்ககூடும். காரைக்கால், திருவாரூர், நாகை இந்த மூன்று ஊர்களில் இருப்பதிலேயே சிறந்த தியேட்டர் தேவிதான் என்று தினேஷ் சொல்கிறான், அது உண்மையா என்று தெரியவில்லை.

திரைப்படத்தை பார்த்து இரண்டு வாரங்கள் கழித்து இந்த பதிவை எழுத காரணம், "அன்று திரைப்படத்தைப் பார்த்த போது அந்தளவு முக்கியமான திரைப்படமாக எனக்கு தோன்றவில்லை". ஆனால், இப்பொழுது திரைப்படத்திற்கு வரும் பாராட்டுக்களை பார்க்கும் போது, அந்த படத்தைப் பற்றி சிலவற்றை மேலோட்டமாக சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். எனென்றால், வரலாறு மிகவும் முக்கியம் அல்லவா??



இந்த திரைப்படத்தைப் பாராட்டுபவர்கள் சொல்லும் காரணங்கள்.... காதல் காட்சிகள் மற்றும் அந்த பேருந்து விபத்து.

எனக்கு "எங்கேயும் எப்போதும்" ஒரு "நாளைய இயக்குநர்" வகை திரைப்படம் போல்தான் தோன்றுகிறது. முதலிலேயே அந்த பேருந்து விபத்து எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு அதற்கு தகுந்தால் போல், கதையை நகர்த்தி உள்ளனர்.

ஒரு கொடூரமான காட்சியை வைத்தால் திரைப்படம் வெற்றி பெற்று விடும் என்ற பிம்பத்தை இந்த திரைப்படம் உருவாக்க அதிக வாய்ப்புள்ளது. ஆங்கில சினிமாக்களில் "Saw, Hostel மற்றும் Final Destination" போன்ற திரைப்படங்கள் மூலம் எற்கனவே இந்த பிம்பத்தை உருவாக்கிவிட்டார்கள்.  தமிழ்சினிமாவில், "பருத்திவீரன்" தந்த பாதிப்பு "ஈசன்" திரைப்படம் வரை தொடர்ந்து வந்ததை நாம் அனைவருமே பார்த்தோம்.

அடுத்து காதல் காட்சிகள் பற்றி, உண்மையாகவே நிஜவாழ்வில் காதல் இப்படிதான் இருக்குமா??, எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும்.

மொத்தத்தில் என்னைப் பொறுத்த வரை "எங்கேயும் எப்போதும்" ஒரு சுமாரான திரைப்படம் மட்டுமே, நீங்கள் சொல்வது போல் "தமிழ்சினிமாவை மாற்றியமைக்க ஒரு புது முயற்சி" என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

கடைசியாக,

எதற்கும் உங்கள் மனதை தயார் படுத்திக்கொள்ளுங்கள், கொடூரமான காட்சிக் கொண்ட திரைப்படங்கள் இனி வரிசையாக தமிழ் சினிமாவில் வரலாம்.

4 comments:

dinesh said...

dai athu devila da vijaylakshmi....theatre pa

சரவண வடிவேல்.வே said...

மச்சி, அரசியலில் அதைலாம் பார்க்ககூடாது பா...

Travis Bickle said...

Thala , Back to form!

சமுத்ரா said...

உண்மை தான்!:)