Tuesday, November 29, 2011

பார்க்கிங் செய்த டூ-வீலரை கண்டுபிடித்தது எப்படி..

குறிப்பு: வாசகர்களின் விருப்பபடி "பார்க்கிங் செய்த டூ-வீலரை கண்டுபிடிப்பது எப்படி??" என்ற தலைப்பு "பார்க்கிங் செய்த டூ-வீலரை கண்டுபிடித்தது எப்படி" என்று மாற்றப்பட்டுள்ளது.


கொஞ்ச நாட்களாகவே நான் எழுதுவது எதுவும் புரியவில்லை என்று பலர் வருத்தப்படுகிறார்கள். எழுத்து புரியாத காரணத்தினால், என் வலைப்பதிவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துக்கொண்டே போகிறது. Google analytics'ம் இதை உறுதிப்படுத்துகிறது. Visitors எண்ணிக்கை குறைய ஒருவேளை இந்த வலைப்பதிவை பலர் Google Reader'ல் படிக்கத்தொடங்கி இருப்பது  கூட காரணமாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், என்னுடைய சமீபத்திய எழுத்து புரிவதில்லை என்று புகார் சொன்னவர்களுக்காக அனைவருக்கும் புரியும் படி , "பார்க்கிங் செய்த டூ-வீலரை கண்டுபிடிப்பது எப்படி??" என்ற இந்தப் பதிவை எழுத முடிவு செய்துள்ளேன். மேலும் கொஞ்ச நாட்களாக நான் இழந்த பழைய வாசகர்களையும் இந்த பதிவின் மூலம் மீண்டும் பிடித்துவிடலாம் என்று நினைக்கிறேன்.

சென்னையில் உள்ள பெரிய பிரச்சனைகளில் பார்க்கிங் பிரச்சனையும் ஒன்று. டூ-வீலரை கூட நீங்கள் எதாவது ஒரு சந்து கிடைத்தால் பார்க்கிங் செய்துவிடலாம், ஆனால் காரை பார்க்கிங் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் செத்தீர்கள். டி.நகரில் காரை பார்க்கிங் செய்பவர்கள் எல்லாம், காலை ஆறு மணிக்கே வந்து காரை பார்க்கிங் செய்துவிட்ட பின்னர்தான் வீட்டுக்கு குளிக்க செல்வார்கள் என்று நினைக்கிறேன்.  என்னிடம் இருப்பது டூ-வீலர் மட்டும்தான் என்பதால், கார் வைத்திருப்பவர்கள் எப்படியாவது நாசமாய் போகட்டும் என்று சொல்லிவிட்டு, இங்கு டூ-வீலர் பார்க்கிங்கை மட்டும் பேசுவோம்.

இப்பொழுது புதிதாகக் கட்டப்பட்டு இருக்கும்  EA மாலில் பார்க்கிங் செய்வதற்கு என்றே தனியாக "அன்டர் கிரவுண்ட்" இடம் இருப்பதால் பார்க்கிங்குக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால், பார்க்கிங் கட்டணத்தை கேட்டால் நாம் தலைச்சுற்றி மயங்கி கிழே விழுவது நிச்சயம். மூன்று மணிநேரம் திரைப்படம் பார்க்க EA'வில் டிக்கெட் கட்டணம் ரூபாய் 120, அதே மூன்று மணிநேரத்திற்கு பார்க்கிங் கட்டணம் குறைந்தது 50 ரூபாய். சனி, ஞாயிறு என்றால் கட்டணம் இரண்டு மடங்காகும்.

இப்படிபட்ட கொள்ளையர்கள் ரூம் போட்டு வசிக்கும் EA'வுக்குதான் போன சனி அன்று டூ-வீலரில் "மயக்கம் என்ன" திரைப்படம் பார்க்க போனேன். ராக்கியிலும், தேவி கருமாரியிலுமே திரைப்படம் பார்த்து பழக்கப்பட்ட நான், EA'வுக்கு போனதிலும் ஒரு காரணம் இருக்கிறது. எனது அலுவலக தோழி ஒருத்தியும் திரைப்படம் பார்க்க வந்திருந்தாள். அவள் தீவிர செல்வராகவன் ரசிகையாம். இங்கே தோழி என்ற வார்த்தையை கேட்டவுடனே நீங்கள் என் மீது பொறாமை கொள்ள தொடங்கியிருப்பீர்கள். இப்பொழுது உங்களுக்கு தெரிகிறதா, நான் எதனால் யாருக்கும் புரியாத மாதிரியே எழுதுகிறேன் என்று??

திரைப்படம் ஆரம்பிக்கும் வரை நன்றாக பேசிக்கொண்டு இருந்தவள், திரைப்படம் ஆரம்பித்த பின் ஒரு வார்த்தை பேசவில்லை. இந்த மவுனம் திரைப்படம் முடியும் வரை தொடர்ந்தது. இடைவேளையில் மட்டும் ஒரு முறை வாயை திறந்து "One Coke and Black Forest Cake" என்றாள். செல்வராகவனின் ரசிகைகள் கூட செல்வராகவன் திரைப்படத்தின் கதாநாயகிகள் போலவே தான் இருக்கிறார்கள். திரைப்படம் முடிந்தவுடனேயே, அவளுடைய அப்பா வெளியில் அவளுக்காக வெயிட் செய்வதாக சொல்லி அவள்  சென்றுவிட்டாள்.

இனிமேல் தான் பிரச்சனையே. இந்த பதிவின் தலைப்புக்கு இப்பொழுதுதான் வரப்போகிறோம். எனது டூ-வீலரை எடுக்க பார்க்கிங் ஏரியாவுக்கு வந்தால், நான் வண்டியை பார்க்கிங் செய்த இடம் மறந்துவிட்டது. எனக்கு ஞாபக மறதி அதிகம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்தது தான் என்றாலும், என்னுடைய ஞாபக மறதியை எடுத்துக்காட்டுடன் சொல்லவேண்டும் என்றால், என்னுடைய வண்டி நம்பர் எனக்கே ஞாபகம் இருக்காது.

ஒருவழியாக வண்டி நம்பரை ஞாபகம் செய்து, வண்டியை தேடினால் எங்கேயும் காணோம். தூரத்திலிருந்து பார்க்கும் போது நமது வண்டியை போல இருக்கும், ஆனால் பக்கத்தில் போனால், வண்டி நம்பர் வேறாக இருக்கும். நானும் எனது தோழியும் ஒன்றாகதான் வந்தோம் என்பதால், அவளுக்கு போன் செய்து கேட்கலாம் என்று பார்த்தால், அவளும் போனை எடுக்கவில்லை.

ஒருவழியாக இருபது நிமிடம் கழித்து அவள் போன் செய்து சொன்னபின்தான் தெரிந்தது " EA'வில்  B1, B2, B3 என்று மூன்று அடுக்கு இருப்பதாகவும், நான் வண்டியை நிறுத்தி இருப்பது B3'ல், நான் இப்பொழுது தேடிக்கொண்டு இருப்பது B2'வில்" என்று. கடைசியில் டூ-வீலரை எடுத்துக்கொண்டு வாயிலுக்கு செல்கையில் அங்கே இருவர் தயாராக நின்றுக்கொண்டு இருந்தனர், எனக்கான கட்டணத்தை சொல்ல.

இப்பொழுது என்னுடைய சந்தேகங்கள் எல்லாம்,
1) அவள் என்னுடன் வந்ததால்தான் நான் பார்க்கிங் செய்த இடத்தை மறந்துவிட்டேனா??
2) எதற்காக எனக்கு மட்டும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எதாவது ஒரு பெண் மூலம் பிரச்சனை வந்துக்கொண்டே இருக்கிறது??
3) இந்த பெண்னை எப்பொழுது காதலிக்க தொடங்கினேன்??

3 comments:

சுப்பிரமணி சேகர் said...

We can provide suggestion to blogger.com to add a like button for every post...


(3) இந்த பெண்னை எப்பொழுது காதலிக்க தொடங்கினேன்?? - மறுபடியும் முதல்ல இருந்தா?

(2) எதற்காக எனக்கு மட்டும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எதாவது ஒரு பெண் மூலம் பிரச்சனை வந்துக்கொண்டே இருக்கிறது?? - ஆறு மாதத்துக்கு ஒருமுறைதானே... விடுங்கள். நீங்கள் எவ்வளவோ பரவாயில்லை.

(1) அவள் என்னுடன் வந்ததால்தான் நான் பார்க்கிங் செய்த இடத்தை மறந்துவிட்டேனா?? - ஆரியக் கூத்தாடினாலும் காரியத்துல கண்ணா இருக்கணும் அண்ணா!!

தனி காட்டு ராஜா said...

//எது எப்படி இருந்தாலும், என்னுடைய சமீபத்திய எழுத்து புரிவதில்லை என்று புகார் சொன்னவர்களுக்காக அனைவருக்கும் புரியும் படி , "பார்க்கிங் செய்த டூ-வீலரை கண்டுபிடிப்பது எப்படி??" என்ற இந்தப் பதிவை எழுத முடிவு செய்துள்ளேன். மேலும் கொஞ்ச நாட்களாக நான் இழந்த பழைய வாசகர்களையும் இந்த பதிவின் மூலம் மீண்டும் பிடித்துவிடலாம் என்று நினைக்கிறேன்.
//

:))


////1) அவள் என்னுடன் வந்ததால்தான் நான் பார்க்கிங் செய்த இடத்தை மறந்துவிட்டேனா??
2) எதற்காக எனக்கு மட்டும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எதாவது ஒரு பெண் மூலம் பிரச்சனை வந்துக்கொண்டே இருக்கிறது??
3) இந்த பெண்னை எப்பொழுது காதலிக்க தொடங்கினேன்??

////

மைனர் வாழ்கையில் இது எல்லாம் சாதாரணம் சரவணா :))
//என்னுடைய ஞாபக மறதியை எடுத்துக்காட்டுடன் சொல்லவேண்டும் என்றால், என்னுடைய வண்டி நம்பர் எனக்கே ஞாபகம் இருக்காது. ///

:))


////இந்த மவுனம் திரைப்படம் முடியும் வரை தொடர்ந்தது. இடைவேளையில் மட்டும் ஒரு முறை வாயை திறந்து "One Coke and Black Forest Cake" என்றாள். செல்வராகவனின் ரசிகைகள் கூட செல்வராகவன் திரைப்படத்தின் கதாநாயகிகள் போலவே தான் இருக்கிறார்கள். திரைப்படம் முடிந்தவுடனேயே, அவளுடைய அப்பா வெளியில் அவளுக்காக வெயிட் செய்வதாக சொல்லி அவள் சென்றுவிட்டாள்.////

///இங்கே தோழி என்ற வார்த்தையை கேட்டவுடனே நீங்கள் என் மீது பொறாமை கொள்ள தொடங்கியிருப்பீர்கள். இப்பொழுது உங்களுக்கு தெரிகிறதா, நான் எதனால் யாருக்கும் புரியாத மாதிரியே எழுதுகிறேன் என்று??
///

பொறாமையா....ha ha ha

பொண்நுக அப்பாவைவிட புருஷனை விட Security-ய அதிகம் நம்புவார்கள்....யு ஆர் எ லக்கி security :)) #For fun and fun only...

சரவண வடிவேல்.வே said...

என்னது இங்கேயும் லைக் பட்டனா?? போதும்பா.....................