Wednesday, January 18, 2012

ஒரு ஆட்டோகிராப் ப்ளிஸ்

புத்தகக் கண்காட்சியில் புதுப்புனல் பதிப்பகத்தில் எம்.ஜி.சுரேஷ் எழுதிய இரண்டு நாவலை வாங்கினேன். "அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேனீரும்" மற்றும் "அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்" ஆகிய இரண்டு நாவல்கள். இதன் மொத்த விலை ரூபாய் 365 (115+ 250). இதே புத்தகங்களின் புதிய பதிப்பு அடையாளம் பதிப்பகத்தில் கிடைப்பதால், ஸ்டாக் காலி செய்வதாக சொல்லி ரூபாய் 110'க்கு தந்தார்கள். மேலும், என்னைப் பார்த்தால் அவர்களுக்கு கல்லூரி மாணவன் போல் தோன்றியிருக்கும் போல, "கல்லூரி நண்பர்களுக்கும் சொல்லவும். எம்.ஜி.சுரேஷின் அனைத்து புத்தகங்களும் குறைந்த விலைக்கு தருகிறோம்" என்றார்கள்.

இப்பொழுது அது அல்ல பிரச்சனை. சொல்ல போனால் பிரச்சனை என்று எதுவும் இல்லைதான்.

"அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேனீரும்" புத்தகத்தை வீட்டில் வந்து பிரித்து முதல் பக்கத்தைப் பார்த்த போது,  எம்.ஜி.சுரேஷ் கையெழுத்து போட்டு சொக்கலிங்கம் என்பவருக்கு இந்த புத்தகத்தை தந்திருப்பது தெரியவந்தது. கையெழுத்து போட்ட தேதி 16.02.2000. ஆனால் புத்தகம் புதியது போலதான் உள்ளது. போல அல்ல, புதியதே தான். ஒருவேளை கையெழுத்து போட்டபின் புத்தகத்தை சொக்கலிங்கம் வாங்கமால் திரும்ப கொடுத்து இருக்கலாம். இந்த கையெழுதுக்கு பின்னால் கண்டிப்பாக எதாவது ஒரு கதை இருக்கும். அந்த கதை என்னவாகயிருக்கும் என்பதைப் பற்றிதான் இப்பொழுது யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.


6 comments:

அ.முத்து பிரகாஷ் said...

ஏதோ ஒரு குறிப்பிட்ட தருணத்தில் வாசிப்பின் மீது ஆர்வமின்மையோ வெறுப்போ தோன்றுவது சாத்தியமான ஒன்றே..அத்தகைய சூழலில் சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை நமக்குத் தெரிந்த புத்தகப் பிரியர்களிடம் (ஒழியட்டும் சனியன் என) அளிப்பதும் நிகழக் கூடியதே..

ஆறு வருடங்களுக்கு முன்னதாக எனது சேமிப்பான கிட்டத்தட்ட முன்னூறு புத்தகங்களை நூலகத்தில் சில நாட்கள் மட்டுமே பேசிப் பழகிய அறிமுகமில்லாத ஒருவரிடம் அளித்தேன்.. இப்போது நினைத்தால் கண்ணீர் வருகிறது.. சுரா,நகுலன்,ஜெமோ,தேவதேவன்,மனுஷ்,ஆ மாதவன்,வல்லிக்கண்ணன்,திகசி ஆகியோரிடம் சில பல மணி நேரங்கள் உரையாடி விட்டு வாங்கிய அன்பின் எழுத்துக்கள் அடங்கிய புத்தகங்கள் எங்கே எப்படி இருக்கின்றனவோ??

அ.முத்து பிரகாஷ் said...

நாவலாசிரியர் சல்மா,36 A பள்ளம் லஷ்மி மணிவண்ணன்,கருவறை வாசனை கனிமொழி ஆகியோரும் நினைவிலோடுகிறார்கள்..

அ.முத்து பிரகாஷ் said...

உங்கள் கண்களில் என்றாவது அவைகள் தென்படுமானால் எனக்காய் வாங்கி வையுங்கள் சகா..

சரவண வடிவேல்.வே said...

தங்கள் வலியை புரிந்துக்கொள்ள முடிகிறது சகா.

அனைவரும் சொல்வது போல், புத்தகங்கள் மூலம் நமது அறிவு விருத்தியாகிறது என்ற கருத்தை நான் மறுக்க தொடங்கி ரொம்ப நாட்களாகிறது. என்னைப் பொருத்தவரை, வாசிப்பு அனுபவம் ஒருவனை பைத்தியமாக மாற்றுகிறது, சுலபமான முடிவை எடுக்க வேண்டிய கேள்விகளுக்கு மிகவும் கடினமான முடிவை எடுக்கவைக்கிறது, பயத்தை தருகிறது. இவை எல்லாம் என் அனுபவத்தால் நான் உணர்தவை.

ஆனால் எதோ ஒரு வகையில் நாம் புத்தகங்களுக்கு அடிமையாகிவிட்டோம், இந்த போதையிலிருந்து வெளிவருவது மிகவும் கடினம்.

வரும் ஆண்டுகளில் எதாவது ஒரு நாள் என்னிடம் உள்ள புத்தகங்களை எல்லாம் நான் தூக்கி ஏறிந்துவிடுவேனோ என்ற பயம் என்னுள் எப்பொழுதும் இருந்துக்கொண்டேதான் உள்ளது.

இதைப்பற்றி தனியாக ஒரு பதிவு எழுத எனக்கு ரொம்ப நாட்களாக ஆசை. கண்டிப்பாக ஒரு நாள் எழுதுகிறேன்

Ganesan said...

One day i will surely visit your library saravana...

சரவண வடிவேல்.வே said...

u r always welcome boss...