Friday, June 26, 2009

மூன்று சம்பவங்கள்

சம்பவம் - 1

வலைப்பதிவு தோழி ஒருத்தி, பெயர் காவ்யா. அவளுடைய வாழ்க்கையில் தினமும் நடக்கும் நிகழ்ச்சிக்களை தனது வலைப்பதிவில் எழுதி வருபவள். அவளுடைய காதல் சமீபத்தில் Break ஆகிவிட்டது. இது காவ்யாவின் இரண்டாவது காதல். காவ்யாவின் முதல் காதலனுக்கு ஒரு வருடம் முன்னர் திருமணம் நடந்துவிட்டது. காவ்யா தனது வலைப்பதிவில் கடைசியாக எழுதி இருப்பதின் சுருக்கம் "என்னுடைய முதல் காதலனை நேற்று Facebook'யில் பார்த்தேன். Online'யில் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டோம். என்னுடைய காதல் தோல்வியை அவனிடம் பகிர்ந்துக்கொண்டேன், ஏதோ என் மனப்பாரம் குறைந்தது போல ஒரு எண்ணம். பிறகு போனில் இரவு முழுவதும் எதை பற்றியோ பேசிக்கொண்டு இருந்தோம். வரும் ஞாயிறு மாலை சந்திப்பதாக முடிவு செய்து உள்ளோம். அவனை கடைசியாக பார்த்து ஒரு வருடம் மேலாகிவிட்டது. நான் செய்வது தவறு என்று எனக்கு தெரியும்."

சம்பவம் - 2

என்னுடைய கல்லூரி நண்பன் ஒருவன், பெயர் குரு. குருவும் ஒரு பெண்ணும் மிகவும் தீவிரமாக காதலித்தனர். அந்த பெண் வீட்டில் அவளை கட்டாயபடுத்தி வேறு ஒரு பையனுடன் கல்யாணம் செய்து வைத்தனர். இது நடந்து ஒரு வருடம் மேல் இருக்கும். அந்த பெண்ணின் கணவர் ஒரு பெரிய கம்பேனியில் Sales Department'ல் வேலை செய்பவன். Meeting Meeting என்று எதாவது ஊருக்கு அலைந்துக்கொண்டு இருப்பான். குரு கடந்த சில மாதங்களாக தன் பழைய காதலியுடன் போனில் இரவு முழுவது பேசிக்கொண்டு இருக்கிறான். இதை பற்றி அவன் என்னிடம் சொன்னது "மச்சி, நான் செய்றது சரியா, தப்பானு எனுக்கு தெரியல டா??"

சம்பவம் - 3

கர்ணாவிற்கு திருமணம் நட்ந்து இரண்டு குழந்தைகள் இருக்கிறது. குழந்தைகள் இரண்டுமே பயங்கர சுட்டி. கர்ணாவின் மனைவி Income-Tax Department'ல் நல்ல வேலையில் இருக்கிறாள். சமீபகாலமாக கர்ணாவின் பழக்கவழக்கத்தில் மாற்றம் தெரிந்தது. ஒரு பெண்ணுடன் ஊர் சுற்றுவதாக எனக்கு செய்தி வந்தது. நேற்று E.C.R'யில் கர்ணாவும் ஒரு பெண்ணும் கட்டிப் பிடித்துக்கொண்டு பைக்கில் போவதை பார்த்தேன். இதை பற்றி அவனிடம் விசாரித்தபோது அவன் சொன்ன பதில் "இதுல என்ன தப்பு இருக்கு சரவணா??".

5 comments:

பழூர் கார்த்தி said...

காலம் மாறிக்கொண்டே இருப்பதை இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன.. வாழ்வின் ஒழுக்க மதிப்பீடுகள் இன்னும் பத்திருபது வருடங்களில் அழிந்திடுமோ என்று பயமாயிருக்கிறது...

ஜெகநாதன் said...

இது ஒரு சமநிலை குலைவு. ஒன்றுக்​கொன்று ஏதாவது ஒரு வகையில் ​தொடர்பும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். விரியும் FaceBook ​தேடல் ஒருநாள் கர்ணாவைக் காட்டும். Sales Department யதேச்சையாய் Income Tax officeக்கு போகும். சமநிலை என்பது ஒரு சமாதானம். அவ்வளவே! இதில் அறசிந்தனைப் பற்றி வருத்தப்பட ஏதுமில்லை.

Thamizhmaangani said...

gd post... all these true incidents sound so intimidating but from their point of view, they may think that there is nothing wrong. it all depends on the situation and how things go ard them:)

Perinba said...

Nalla Irukku machi...

Subramania Athithan said...

நீ எழுதிய பதிவுகளில் எனக்கு பிடிக்காத பதிவு இது நண்பா. ஆம் சமூகத்தில் நடக்கும் சில கசப்பான உண்மைகளை இப்படி அப்பட்டமான உதாரணத்தோடு சொன்னால் யாருக்கும் பிடிக்காது.