“இந்த பதிவை யார் மனதையையும் புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை”இரண்டு மாதங்களுக்கு முன்னால், வலையில் மேய்ந்து கொண்டு இருந்தபோது. ஒரு பெண் வலைப்பதிவாளர் எழுதிய ஒரு பதிவை படிக்க நேர்ந்தது. அதன் சுருக்கம்
“ கற்றது தமிழ் படத்தின் கதாநாயகன் போல் உண்மையில் யாராவது இருக்கிறார்களா என்று பல நாட்களாக சந்தேகம் இருந்தது. ஆனால், அவரை பார்த்தவுடன் அந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது. கிட்டத்தட்ட அவர் கற்றது தமிழ் ஜீவா மாதிரியே இருப்பார். சொந்தக்கார பையந்தான். சில நாட்கள் மனநல காப்பகத்தில் கூட வைத்து இருந்தார்கள். இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார். அவரைப் பார்ப்பதற்கே பாவமாக இருக்கும். தினமும் போனில் அவருடன் பேசிக்கொண்டு இருக்கிறேன். சில நாட்கள் வேலை காரணமாக நான் போன் செய்ய மறந்தால் கூட, அவரே போன் செய்து “என் இன்று போனில் பேசவில்லை” என்று விசாரிக்கிறார். முன் எல்லாம் அவருடன் ரோட்டில் தனியாக நடக்கவே பயமாக இருக்கும். இப்பொழுது எல்லாம் அப்படி இல்லை. ”
இதுதான் அவர் எழுதி இருந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள் ” இந்த பதிவுக்கு நான் பார்த்த போதே 30 பின்னுட்டம் . இப்பொழுது எத்தனை என்று தெரியவில்லை”. அந்த பின்னுட்டம் எல்லாம் இப்படிதான் இருந்தது “ ஒரு மனிதனை திருத்தியதற்க்கு வாழத்துக்கள்” “ சூப்பர்” என்று. அதில் சில அறிவுஜீவிகள் சந்தேகம் வேறு கேட்டு இருந்தார்கள்.
நான் படித்தவுடன் அந்த வலைப்பதிவின் முகவரியை கூட பார்க்காமல் அப்படியே மூடிவிட்டேன்.
நீங்கள் இதைப்படிக்கும் போது உங்களுக்குள் என்னவிதமான எண்ணங்கள் உதிக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், சத்தியமாக எனக்கு தோன்றியது “ அந்த பதிவை எழுதியவரையும், அதற்கு பின்னுட்டம் எழுதியவர்களையும் ஒன்றாக நிற்க்கவைத்து கன்னத்தில் பளார் என்று அறையவேண்டும் ”.
ஒருவர் ஒருவனை தற்கொலைக்கு தூண்டுகிறார். அதற்க்கு பலர் பின்னுட்டம் எழுதுகிறார்கள். இதுதான் எனக்கு தோன்றியது.
நான் இப்படி சொல்வதற்க்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. கண்டிப்பாக ஒரு நாள் அவருக்கும் தெரியவரும், நம் மீது இரக்கப்பட்டு தான் அனைவரும் அன்பு காட்டுகிறார்கள் என்று. அது தெரியவரும்போது அவர் மீண்டும் பழைய நிலையைவிட மோசமாக போக வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் யார் மீதாவது இரக்கப்பட்டு அன்பு செலுத்துகிறீர்கள் என்றால், அது ஒரு பிச்சைக்கு சமம். ஒரு மனிதன் வாழ்வதற்க்கு தன்னம்பிக்கையை தாருங்கள், பிச்சையை அல்ல.
5 comments:
"நீங்கள் யார் மீதாவது இரக்கப்பட்டு அன்பு செலுத்துகிறீர்கள் என்றால், அது ஒரு பிச்சைக்கு சமம். ஒரு மனிதன் வாழ்வதற்க்கு அவருக்கு தன்னம்பிக்கையை தாருங்கள், பிச்சையை அல்ல." அசத்திட்ட சகா :) dis s really true most people wont realis it. proud to be ur frnd :) and im the first to comment dis. hehehe. O)
அப்படிப் போடு அண்ணாத்தே! இப்பதான் புரிஞ்சது... இதை நினச்சுத்தான் Blog Title Description - ஐ மாத்தினீங்களோ? 'நல்லதோர் வீணை செய்தே...' நல்லா தானே இருந்துச்சு. அதைப் போய் ஏன் மாத்தினீங்கன்னு யோசிச்சிட்டே இருந்தேன்.
@ Subramania Athithan & தமிழகழ்வன் -
நன்றி..
சரவணா ,
பொதுவாக இரக்கம் என்பதே வேண்டாத உணர்வு தான் ....ஆனால் அது வரத்தான் செய்கிறது ....
உதாரணத்துக்கு ஒரு முதியவரோ ,உடல் ஊனமுற்றவரையோ நாம் பார்க்க நேர்ந்தால் ஒரு 5 ருபாயோ 10 ருபாயோ கொடுத்து விட்டால் நம் மனம் அந்த நேரத்துக்கு திருப்தி அடையும் ....
ஆனால் புத்தி கொண்டு யோசித்து பார்த்தால் ......நாம் கொடுத்தது ஒரு வேலை உணவுக்கு வேண்டுமானால் உதவலாம்...அனால் அவர் வாழ் நாள் முழுவதும் யார் உதவுவார்?
நம்மில் கூட சிலர் ஆனாதை இல்லங்களுக்கு மாதம் 2000 கொடுப்போர் உண்டு ...அதற்கு பதிலாக ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தால் நன்றாக இருக்கும்...........
மாதம் 2000 கொடுப்பது இரக்கம் அல்லது பிச்சை ...
தத்து எடுத்து வளர்த்தல் என்பது கருணை ....
மனிதர்களில் 98% பேர் இரக்க குணம் கொண்டவர்களே ...(நான் உட்பட )...
எல்லா உயிரையும் தம் உயிராக பார்ப்பது தான் கருணை .....
ஆனால் இந்த குறிப்பிட்ட பிரச்சினையை பொருத்த வரை ....அவரை நாம் சக மனிதனாக ஏற்று தன்னம்பிக்கை கொடுப்பது தான் நல்லது ...
கோபி,
உங்கள் கருத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன். இரக்க குணம் எல்லா மனிதனுக்குள்ளும் இருக்கிறது. இந்த அவசர உலகில் இந்த குணமாவுது இருக்கிறேதே என்று சந்தோஷ படவேண்டியதுதான்.
உங்கள் கருத்துக்கள் என்னை கொஞ்சம் யோசிக்க செய்கிறது. நன்றி..
Post a Comment