Sunday, September 26, 2010

சிறிய அன்பு

ஒரு சிறிய அன்பிற்காக இனியும்
நான் காத்துக்கொண்டு
இருக்க தேவையில்லை.

காலையில் பார்த்த எதிர்வீட்டு
குழந்தையின் கையசைப்பில்
அது நிறைந்து வழிந்தது.

பேருந்தின்
பக்கத்து இருக்கை
பயணியின் புன்னகையில்
அது எட்டி பார்த்தது.

ஒரு மூதாட்டிக்கு நடைப்பாதை
கடக்க உதவிய போது
அவள் கண்களில்
அது தெளிவாக தெரிந்தது..

முகம் தெரியாத யாரோ
ஒருவர் எழுதிய பின்னூட்டத்தில்
கூட அது இருந்தது.

சிறிய அன்பின் உண்மையான
இருப்பிடத்தை இப்பொழுது
கண்டுக்கொண்டேன்.

இனியும் அந்த சிறிய அன்பிற்காக
அவளிடம்
கைக்கட்டி நிற்க தேவையில்லை,

அந்த சிறிய அன்பு என்னைச்சுற்றி
எல்லா இடத்திலும்
நிறைந்திருக்கிறது.

நேற்று நான் குடித்த மதுவின்
கடைசி துளியில்
அது ஒளிந்துக்கொண்டு இருந்தது  போல.

2 comments:

தனி காட்டு ராஜா said...

அருமை அருமை அருமை சரவணா........

//இனியும் அந்த சிறிய அன்பிற்காக
அவளிடம்
கைக்கட்டி நிற்க தேவையில்லை, //

நாம எல்லாம் யாரு....சிங்கம்-ல....


//நேற்று நான் குடித்த மதுவின்
கடைசி துளியில்
அது ஒளிந்துக்கொண்டு இருந்தது போல. //

எப்படியோ ஒளிந்து கொண்டு இருந்தத கண்டு பிடிச்சாச்சு .....

நிலவுக்காதலன் said...

"நேற்று நான் குடித்த மதுவின்
கடைசி துளியில்
அது ஒளிந்துக்கொண்டு இருந்தது போல" அது சரி :)ஆமா யாருகிட்ட கைக்கட்டி நிக்கனும்:)