Tuesday, October 5, 2010

எந்திரன் & Peepli live

"என்ன, எந்திரன் படத்தைப்பற்றி இன்னும் எழுதல??" என்று கேட்ட நண்பனுக்காக இதை எழுதவேண்டியதாக போயிற்று. ஏதோ நம் வலைப்பதிவை படிப்பவர்களே, நம் நண்பர்கள் மட்டும்தான், அவர்கள் ஆசையைக்கூட நிறைவேற்றவில்லை என்றால், பின் எதற்க்காக இந்த வலைப்பதிவு??.

போன சனிக்கிழமை காலை ஆறு மணிக்கு நானும் நண்பனும் சேர்ந்து ஒரு திரைப்படம் பார்த்தோம். அங்கில படத்திற்கு நிகரான பிரமாண்டம், திரைப்படம் முழுவதும் வழிந்து ஓடியது. டைட்டில் கார்டில் "எந்திரன்" என்று பெயர் போட்டார்கள்.

திரையரங்கில் நுழைந்த போது, எனக்கு ஒரு இனம் புரியாத எதிர்ப்பார்ப்பு இருந்தது உண்மைதான். திரையில் "ரஜினிகாந்த்" தோன்றியபோது என் முகத்தில் நூறு வாட்ச் வெளிச்சம் அடித்தது உண்மைதான். திரைப்படம் முடியும்வரை, என் உடம்பு முழுவதும் ரத்தம் ஒரு புதுவேகத்தில் ஓடியது உண்மைதான். அதற்காக, இவை அனைத்தையும் வைத்துக்கொண்டு எந்திரன் ஒரு சிறந்தப்படம் என்று சொல்லிவிடமுடியாது.

இன்னும் ஒரு நான்கு மாதங்களுக்கு பிறகு இதே படத்தை பார்த்தால் கண்டிப்பாக நமக்கு ஒரு ஏமாற்றம்தான் மிஞ்சும். எந்திரன், தற்பொழுதைய "Hyperworld"க்கு ஏற்ற ஒரு சாதாரண கமர்ஷியல் திரைப்படம். இன்னும் ஒரு வருடம் கழித்து பார்த்தால், நம்மை அறியாமல் நமக்கு ஒரு சிரிப்புதான் ஏற்படும், பழைய ராமராஜன் படங்களை பார்க்கும்போது ஒரு சிரிப்புவருகிறதே, அதேபோல்.

"Over Excitemnet" காரணமாக இந்த திரைப்படத்தை அனைவரும் கொஞ்சம் அதிகமாக புகழ்கிறார்கள். கடைசி 40 நிமிடங்களில் சங்கர் என்ன சொல்லவருகிறார் என்றே புரியவில்லை. திரைமுழுவதும் ரஜினியை காட்டினாலே போதும், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துவிடுவார்கள் என்று சங்கர் நினைத்து இருப்பார்போல. ஆனால், அதுதான் உண்மை. ஒரு சினிமா பார்வையாளனைப் பற்றி, சங்கரை தவிர வேறுயாராலும் இந்தளவு சரியாக புரிந்துக்கொள்ள முடியாது.

***************************************************************************
இந்தவாரம் நான் பார்த்த இன்னொரு படம் "Peepli live". அங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு, Black Humour. தமிழில் பகடி என்று சொல்லலாம். "Peepli Live" ஒரு பகடி திரைப்படம். தற்பொழுதைய அரசியலையும், தொலைக்காட்சிகளையும், ஊடகங்களையும் இதற்க்குமேல் கிண்டல் செய்ய முடியாது.

"தற்கொலை செய்துக்கொண்டால் ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும் என்று கேள்விப்படும் ஒரு விவசாயி, தற்கொலை செய்துக்கொள்ள முடிவு செய்கிறான். அந்த கிராமத்தில் இடைத்தேர்தல் நடக்க இருப்பதால், அந்த செய்தி எந்தளவு முக்கியத்துவம் பெறுகிறது. அதை  வைத்து எத்தனைப்பேர் லாபம் சம்பாதிக்கிறார்கள். கடைசியில் அந்த விவசாயி தற்கொலை செய்துக்கொண்டானா?? " இதுதான் கதை.

தற்பொழுதைய Reality Show'களுக்கும், T.V News'க்கும் எந்த ஒரு வேற்றுமையும் இல்லாமல் போய்விட்டது. எல்லாவற்றிலும் நம் மக்கள் ஒருவித மசாலாவை எதிர்ப்பார்க்கிறார்கள். எல்லாவற்றிக்கும் ஒரு Opinion Poll. அது ஒரு தற்கொலையாக இருந்தாகும் கூட. இவை அனைத்தையும் இந்த திரைப்படம் முழுவதும் பகடி செய்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்தப்படத்தை தயாரித்து இருப்பது அமீர்கான். நம் தமிழ் ஹீரோக்கள், இதைப்போல் ஒரு திரைப்படம் தயாரிக்க முன்வருவார்களா??

5 comments:

தனி காட்டு ராஜா said...

//இன்னும் ஒரு வருடம் கழித்து பார்த்தால், நம்மை அறியாமல் நமக்கு ஒரு சிரிப்புதான் ஏற்படும், பழைய ராமராஜன் படங்களை பார்க்கும்போது ஒரு சிரிப்புவருகிறதே, அதேபோல்.//

சிரிப்புன்னு பார்த்தா எல்லாமே சிரிப்பு தான் சரவணா ......நம்ம வாழ்கையை கூட நாமே திரும்பி பார்த்தால் சில சமயம் சிரிப்பு தான் வரும் ....
ஒருவேளை ...நீ சாரு ரசிகன் என்பதால் இவ்வாறு சொல்லி சாருவை support செய்கிராயோ ???
எப்படியோ தலைவர் (?) படம் மகத்தான வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி ....

//இந்தப்படத்தை தயாரித்து இருப்பது அமீர்கான். நம் தமிழ் ஹீரோக்கள், இதைப்போல் ஒரு திரைப்படம் தயாரிக்க முன்வருவார்களா??//

"தமிழ் படம் " வந்ததே சரவணா .....

சரவண வடிவேல்.வே said...

//நீ சாரு ரசிகன் என்பதால் இவ்வாறு சொல்லி சாருவை support செய்கிராயோ ???///

ஒருவேளை இதுகூட உண்மையாக இருக்குமோ??

எனக்கும் நம்ம தலைவர் படம் மாபெறும் வெற்றி அடைந்ததில், ரொம்ப மகிழ்ச்சிதான் நண்பா..

//"தமிழ் படம் " வந்ததே சரவணா//

"தமிழ்படம்" Spoof வகை படங்களை சேரும். Black Humour வகைப்படங்கள் இன்னும் தமிழுக்கு வரவில்லை என்றே சொல்வேன். வெங்கட் பிரபு நினைத்தால், அவரால் கண்டிப்பாக எடுக்க முடியும்.

Black Humour மற்றும் Spoof, இவை இரண்டுக்கும் சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. தமிழகழ்வன் கொஞ்சம் உதவலாம்!!!!!!

Subramania Athithan said...

"ஏதோ நம் வலைப்பதிவை படிப்பவர்களே, நம் நண்பர்கள் மட்டும்தான்" ஆதங்கமா :)

“இன்னும் ஒரு வருடம் கழித்து பார்த்தால், நம்மை அறியாமல் நமக்கு ஒரு சிரிப்புதான் ஏற்படும், பழைய ராமராஜன் படங்களை பார்க்கும்போது ஒரு சிரிப்புவருகிறதே, அதேபோல்” do u laugh when u see batsha movie now. be honest :)


சாரு ரசிகன் or சாரு தீவிரவாதி :)

Reality Show-- சாரு on vijay tv. :) :)

சரவண வடிவேல்.வே said...

பாட்ஷா திரைப்படம் ஒரு சரித்திரம் நண்பா.. சரித்திரத்தை அனைவரும் படிக்கலாம், சொந்த கருத்துகளை சொல்ல கூடாது.

சரி, நீங்களே சொல்லுங்கள்.. எந்திரன் திரைப்படம் மூலமாகத்தான் நம் தமிழ்சினிமா உலகம் முழுவதும் பேசப்படுகிறது என்றால்..நம்மைப்பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்.

நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம். உங்களுக்கு தெரிந்த எதாவது ஒரு ஹிந்தி நண்பரிடம் சொல்லிபாருங்கள்.. "தமிழ் சினிமாவிலேயே எந்திரன் திரைப்படம்தான் சூப்பர்" என்று..

தமிழ்சினிமாவின் மொத்த அடையாளமாக எந்திரன் மாறிவிட்டதை நினைத்துதான் கொஞ்சம் அதிகமாக கவலைப்படுகிறேன்.

பெர்சியன் திரைப்படம் என்றாலே நமக்கு நினைவிற்க்கு வருவது "Children of heaven".. இத்தாலி என்றால் "Life is Beautiful"..

அதைப்போல் தமிழுக்கு ஒரு திரைப்படம் வரவேண்டும். அது கண்டிப்பாக எந்திரன் அல்ல.

விமலன் said...

பிரமாண்டங்களையும்,மசாலாக்களையும் ஏற்க பழகிப் போனது மட்டுமல்ல.
அதற்கு நம்மை பழக்குகிறார்கள் என்பதாய்ப் படுகிறது.