அவர் வேறு யாரும் இல்லை, நம் "மகாகவி பாரதியார்" தான். என்ன வியப்பாக இருக்கிறதா?? அதே போன்ற ஒரு வியப்பைத்தான், அவரின் "காக்காய் பார்லிமெண்ட்" என்ற கதையை படிக்கும்போது நான் உணர்ந்தேன். புதுமைப்பித்தன் கதைகளில் இருக்குமே ஒரு நையாண்டி கலந்த நகைச்சுவை எழுத்து, அதே போன்றுதான் இந்த கதையும் உள்ளது. பகடி கலந்த புனைவு என்றுகூட சொல்லலாம்.
புதுமைப்பித்தன் எழுத்துக்கே பாரதியார்தான் முன்னோடி என்று நான் பலமுறை கேள்விப்பட்டது உண்டு, ஆனால் அதை முதல் முறையாக இப்பொழுது உணர்கிறேன்.
பாரதியார் கவிதை எழுதுவதில் மட்டும் இல்லாமல், கதை எழுதுவதிலும் வல்லவராக இருந்து உள்ளார். பின், ஏன் அவர் தொடர்ந்து கதைகள் எழுதவில்லை?? என்று தெரியவில்லை.
நம்மை பொருத்தவரை பாரதியார் என்றால் அவர் கவிதைகள்தான் நினைவில் வரும். எனக்கு பிடித்த கவிஞர்களில் முதலில் இருப்பவர் பாரதியார். பாரதியாரிடம் எல்லாவற்றிக்கும் கவிதை இருக்கும். "நீங்கள் ஒரு யுத்தத்தில் வெற்றி அடையும் போது, காதலியை பிரியும் போது, காதலியுடன் இனையும் போது, கடவுளை வேண்டும்போது, தாய் மண்ணை நினைக்கும் போது" இப்படி எல்லாவற்றிக்கும் கவிதை எழுதிருக்கிறார்.
"காக்காய் பார்லிமெண்ட்" என்ற அந்த கதையை நீங்கள் இங்கு படிக்கலாம்.
http://azhiyasudargal.blogspot.com/2010/10/blog-post_27.html
காக்காய் பார்லிமெண்ட் கதை தற்பொழுதைய காலத்துக்கும் தகுந்தால் போல் உள்ளது. இப்பொழுது படிக்கும்போது, ஏதோ நம் தமிழ்நாட்டு முதல் அமைச்சரையும், அவர் குடும்பத்தையும் பகடி செயவது போல் இருக்கிறது. இந்த கதையில் அவர் "காக்காவின் பாஷை" அகராதியைப் பற்றி சொல்லும் போது சிரிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதே போல் கீழே உள்ள வரிகளை படித்து பாருங்கள்,
"நான் சொல்வதுதான் சரியான பிரயோகம் என்பதற்கு போகர் இலக்கணத்தில் ஆதாரமிருக்கின்றது. “போகர் இலக்கணம் உமக்கு எங்கே கிடைத்தது?” என்று கேட்கலாம். அதெல்லாம் மற்றொரு சமயம் சொல்லுகிறேன்."
இதே போன்ற எழுத்தை புதுமைப்பித்தன் கதைகளிலும் காணலாம்.
இந்த கதையை முடிக்கும் போது, "இது நிஜமாக நடந்த விஷயமில்லை. கற்பனைக் கதை" என்று முடித்து உள்ளார். அந்த கடைசி வரி மட்டும் தேவையில்லாத ஒன்று என்று தோன்றுகிறது. ஒருவேளை, அந்த காலத்தில் இது போன்ற கதைகள் ஒரு புதிய முயற்சி என்பதால், மக்களுக்கு புரியும் பொருத்து, அந்த வரியை எழுதியிருக்கலாம்.
இந்த வார இறுதியில் பாரதியாரின் கதைகள் தொகுப்பை வாங்கி எல்லா கதைகளையும் படிக்கலாம் என்று இருக்கிறேன். "அவரின் கவிதை தொகுப்பை போல், கதை தொகுப்பையும் யாராவது வெளியிட்டு இருக்கிறார்களா என்ன??".
3 comments:
பாரதியின் கதைபற்றீய பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்
படித்தேன் சரவணா ....அருமை .....
எக்காலத்துக்கும் அடிப்படை விஷயங்கள் பொருந்தும் என்றே நினைக்கிறேன் ....
பாரதியின் கண்களை பார் சரவணா .....என்ன ஒரு ஒளி....
பாரதியை பற்றி எனக்கு அதிகம் தெரியாது ....பாரதியார் கவிதை புத்தகம் ஓன்று கூட பரிசாக கிடைத்தது ......அதை படிக்கவேண்டும் என்று கூட எனக்கு தோன்றவில்லை .....
"நிற்பதுவே ,நடப்பதுவே ....நானும் ஓர் கனவோ .........வெறும் காட்சி பிழை தானோ " என்று தமிழ் சினிமா -வில் வரும் பாரதி பாடல் வரி முலமே அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொண்டேன் .....நான் ரசிக்கும் பாடலில் இதுவும் ஓன்று .......
அவர் கவிஞர் மட்டும் அல்ல ......அதற்கும் மேலே .....
//**அவர் கவிஞர் மட்டும் அல்ல ......அதற்கும் மேலே**/
சரியா சொன்னிங்க கோபி. அவரின் கவிதைகளும், கதைகளும் எந்த ஒரு காலத்திலும் தடைப்பட்டு நின்றுவிடாது. அது காலத்தால் அழியாதது.
அவரின் எழுத்தில் எப்பொழுதும் தான் என்ற கர்வமும், ஆணவமும் இருக்கும். இதைபோன்ற எழுத்தை நீங்கள் புதுமைப்பித்தன் எழுத்திலும் பார்க்கலாம். ஒரு எழுத்தாளனுக்கு எப்பொழுதும் இருக்கவேண்டியவை இவை.
நேரம் கிடைத்தால் அவரின் கவிதைகள் அனைத்தையும் படித்து பாருங்கள்.
Post a Comment