"என்னப்பா, நம்ம சொந்தத்திலேயே அழகா ஒரு அஞ்சு பொண்ணுங்க இருக்கு. அதுல ஒன்ன பார்த்து உனக்கு முடிச்சிடலாமா??".
இப்படித்தான் அசோக்கின் தாத்தா, அவனிடம் பேச ஆரம்பித்தார். தாத்தா, அசோக்கை தனியாக கூப்பிடும் போதே, இதில் ஏதோ வில்லங்கம் இருக்கு என்று அசோக்கிற்கு தெரிந்துவிட்டது.
"உன் அப்பன்கிட்ட பேசித்தேன். இந்த காலத்து பசங்க யாரையும் நம்ப முடியாது, நீங்களே அசோக்கிடம் பேசி ஒரு முடிவுக்கு வாங்கனு சொல்லிட்டான். ஏன்டா?? உன் மனசுல எதாச்சும் இருந்தா இப்பவே சொல்லிடு" என்றார்.
"அதுலாம் ஒன்னும் இல்ல தாத்தா. இப்ப என்ன கல்யானத்துக்கு அவசரம். கொஞ்ச நாள் ஆகட்டும்"
"பொண்ணை பார்த்து, நாளைக்கே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறமாதிரி பேசுற. இப்ப பார்க்க ஆரம்பித்தால்தான், ஒரு வருடத்தில் கல்யாணம் முடியும்" என்றார்.
இப்படிதான் ஒரு சுபயோக சுபதினத்தில் அசோக்கிற்கு பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்தது. "சொந்தத்திலேயே அழகா ஒரு அஞ்சு பொண்ணுங்க இருக்கு" - இதில் அசோக்கிற்கு சந்தேகம், அது யாருடா நமக்கு தெரியாம, அழகா ஐந்து பொண்ணுங்க என்று. "நம்ம குடும்பத்திலேயே இதுவரை அழகு’னா அது யசோதாதான்" என்று ஒருமுறை தாத்தாவே சொல்லியிருக்கிறார். யசோதா பிறந்த வருடம் 1938. இதை அவர் யசோதா பாட்டியின் கருமாரியின் போது சொன்னார்.
அசோக்கும் கடந்த நான்கு வருடமாக எல்லா திருமண விழாவிலேயும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான், இதுவரை அவர்கள் சொந்தத்தில் ஒரு பெண்ணைக்கூட பார்த்தது இல்லை. பின் எப்படி இந்த தாத்தாவால் மட்டும் ஐந்து பெண்களை கண்டுபிடிக்க முடிந்தது!! அதுவும் அழகாக!!
அடுத்த வரியை தாத்தா சொன்ன போதுதான் அந்த "அழகான அஞ்சு பொண்ணுங்க" என்ற வார்த்தையின் உள்ளர்த்தம் அசோக்கிற்கு புரிந்தது. "உனக்கும் பொருத்தமாக" என்றார். அன்று இரவு அசோக்கின் அப்பா, அசோக்கிடம் "இது உன் வாழ்க்கை. எல்லாம் உன் இஷ்டம், யோசித்து முடிவு எடு" என்றார்.
அடுத்த நாள், கோயில் திருவிழாவில் அசோக்கிடம் அவன் தாத்தா ஒரு பெண்ணை காட்டினார். "இப்ப நம்ம ரவி பொண்ணு எடுத்திருக்கான்’ல அவுகளோட சித்தப்பா பொண்ணு" என்றார். பார்ப்பதற்கு மிகவும் அழகாக, "ஜெயங்கொண்டான்" திரைப்படத்தில் வரும் பாவனா’வை போல் இருந்தாள். அசோகிற்கு ஒரே சந்தோஷம், அன்று இரவு அவன் கனவில் வெள்ளை நிற தேவதைகள் வந்து வந்து போனார்கள்.
ரவியின் மூலம் அந்த பெண்ணின் அப்பாவிற்கு தாத்தா செய்தி அனுப்பினார். "பொண்ணு இன்னும் படிக்க போகுது, அதனால் ஒரு இரண்டு வருடமாகும்" என்று பதில் வந்தது. தாத்தாவிற்கு இந்த பதிலால் எந்த ஒரு மனவருத்தமும் ஏற்படவில்லை. கடந்த இருபது வருடங்களாக சொந்தங்கள் எல்லாருக்கும் திருமணம் செய்து வைத்துக்கொண்டு இருக்கிறார். இந்த பதிலை அவர் பலமுறை பலரிடம் கேட்டு இருந்தார்.
ஆனால் அசோக்கிற்குதான் அந்த இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. கனவில், கரும் இருளில் தனியாக உட்கார்ந்து இருந்த அவனை பார்த்து தேவதைகள் சிரித்துவிட்டு போயின. சில நாட்களுக்கு கழித்து "அந்த பொண்ணையும், அசோக்கையும் சேர்த்து வைத்து பார்த்தால், கருப்பு வெள்ளை டி.வி’யை பார்த்தமாதிரி இருக்கும்" என்பதால்தான் அந்த பெண்ணின் அப்பா சம்மதிக்கவில்லை என்று அறிந்தபோது, கொஞ்சம் அதிகமாகவே அசோக் வருத்தப்பட்டான். அசோக்கின் தாத்தாவுக்கும் இந்த விஷயம் தெரிந்தே இருந்தது, ஆனால் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்ளவில்லை.
"பார்த்த முதல் பெண் தடைப்பட்டு விட்டால், பின் அந்த பையனின் திருமணம் ரொம்ப நாட்கள் தள்ளிப்போகும்" என்று கண்ணன் மாமா, அசோக்கிடம் ஒருநாள் சொன்னார்.
இதற்குள் அசோக்கின் தாத்தா அவனுக்கு இரண்டாவது பெண்ணை பார்த்திருந்தார். இந்த முறை அசோக் பெண்ணை பார்க்கவில்லை. ஆனால், அழகாக இருப்பாள் என்று அக்காவின் மூலம் கேள்விப்பட்டான். ஆனால், இதிலேயும் ஒரு பிரச்சனை வந்தது. அந்த பெண் பிறந்த வருடம் 1991. கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் வித்தியாசம். இவ்வளவு சின்ன பொண்ணு வேண்டவே வேண்டாம் என்று அசோக் சொல்லிவிட்டான். அசோக்கின் அப்பாவும், "எல்லாம், அவன் இஷ்டம்" என்று சொல்லிவிட்டார். அம்மாவுக்கும், தாத்தாவுக்கும்தான் கொஞ்சம் வருத்தம் "இப்படி நல்ல பொண்ணை வேண்டாம்’னு சொல்லிடானே" என்று.
மூன்றாவது பெண்ணை, அசோக் பார்த்த போது இந்த முறை எல்லாம் சரியாகவே நடக்கும் என்று நினைத்தான். ஆனால், பெண்ணின் தம்பி மூலம் பிரச்சனை வந்தது. "விசாக நட்சத்திர பையன், தம்பி இருக்கும் பெண்ணை மணந்தால், அது அந்த தம்பியை அடித்துவிடும்" என்று ஒரு சோதிடக்காரன், வேலையில்லாத ஒரு மாலை வேளையில் சொல்லிவிட்டான். இதனால், அந்த பெண்ணின் வீட்டில் எல்லாரும் பயந்துவிட இந்த பெண்ணும் அசோக்கிற்கு கிடைக்காமல் போய்விட்டது.
இந்த மூன்று சம்பவத்தால், மனதளவில் அசோக் பாதிக்கப்பட்டான். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இதைப்பற்றி பேச வேண்டாம் என்று வீட்டில் கறாராக சொல்லிவிட்டான். ஆனால், அசோக்கின் தாத்தா மறைமுகமாக ஒரு பெண்ணை பார்த்தார். அந்த பெண் "தான் ஒரு பையனை காதலிப்பதாகவும், அவனைத்தான் திருமணம் செய்வேன்" என்று வீட்டில் அடம்பிடித்ததால், இந்த பெண்ணும் இல்லாமல் போனது. அதன் பின், அசோக்கின் தாத்தாவும் பெண் பார்க்கும் படலத்தை ஒத்திவைத்தார்.
ஆனால் இது நடந்து ஒரு ஆறு மாதங்கள் பிறகும், அசோக்கின் தேவதை கனவுகள் மட்டும் நிற்கவே இல்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான தேவதைகள் கனவில் வந்துக்கொண்டே இருந்தனர்.

4 comments:
கல்யாண சந்தையில் இது எல்லாம் சாதரணமப்பா....
எனக்கு கூட வீட்டில் பெண் பார்ப்பதாக சொல்லுவார்கள் .......6 மாதம் போகட்டும் ...6 மாதம் போகட்டும்..என்றே ஒட்டிக் கொண்டு உள்ளேன் .....இல்லைனா நம்ம சுகந்திரம் போயிருமே சரவணா .......
25 வருடத்தில் கல்யாணம் செய்து கொண்டால் ...அடுத்த 40 வருடத்துக்கு அதே முஞ்சிய தான் பார்க்க போகிறோம் ..
அப்புறம் சோசிய காருனக எனக்கு ராகு தோஷம் ,சனி தோஷம் -நு எல்லாம் தோஷமும் இருக்கறதா சொல்லுறானுக ..... [எனக்கே கூட ஜோசியம் ஓரளவு தெரியும் .......சைடு பிசினெஸ் ரெடி ..]
பொதுவாக கல்யாணாம் என்பது பச்சையான வியபாரம்தான் .......இந்த லச்சனத்தில் இங்குள்ள அரைகுறைகள் எல்லாம் மேற்கத்திய கலாசாரத்தை குறை சொல்லுறானுக .........நான் எல்லாம் USA -வுல பிறக்க வேண்டியவன் ....
அழகை பார்த்து ஏமாந்து விடாதே .......பருவத்தில் பண்ணி கூட அழகாக இருக்கும்.........
திறந்த மனதுடன் இரு ........உன் ரசனையும் பெண்ணின் ரசனையும் ஒத்து போனால் கல்யாணம் செய்து கொள்....
கல்யாணாம் செய்து கொண்டவர்கள் எல்லாம் கழுதை மாதிரி தான் ........துணி முட்டை மாதிரி பொறுப்பு என்ற மூட்டையை சுமந்து கொண்டு திரிபவர்கள்......
//ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான தேவதைகள் கனவில் வந்துக்கொண்டே இருந்தனர்.//
சரி ..சரி ..உன் அண்ணி சுனைனா வந்தா மட்டும் ...அண்ணன் உங்களுக்காக காத்து கொண்டு இருப்பாருனு சொல்லி என் கனவுக்கு அனுப்பி வச்சுரு ...சரியா?
"உனக்கும் பொருத்தமாக" hehehe :) sema thattha :)
@கோபி, அண்ணியை பற்றி நீங்கள் சொல்லிதான் எனக்கு தெரிய வேண்டுமா என்ன???.. :)
good one da.....it resembles real life
hotmail, limewire
hotmail, limewire
Post a Comment