Wednesday, October 6, 2010

இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன்

"மிகவும் பயம் கொண்ட, தன்னம்பிக்கையற்ற, ராசியில்லாத, தெளிவாக பேசத்தெரியாத ஒரு மனிதன்". அசோக்கைப் பற்றி இதற்குமேல் சுறுக்கமாக சொல்ல முடியாது. இது அசோக்கை பற்றிய கதை. இப்படி எந்த ஒரு சுவராசியம் இல்லாத அவனைப்பற்றி எப்படி ஒரு கதை  எழுத முடியும் என்று கேட்கிறீர்களா??. நீங்கள் கேட்கலாம். உங்களுக்கு அந்த உரிமை  இருக்கிறது. கேள்வி கேட்பது நம் உரிமை. ஆனால் அசோக்குக்கு தான் கேள்வி கேட்கவே தெரியாது. இன்று பஸ்ஸில் கூட நான்கு ரூபாய் டிக்கெட்க்கு அசோக் ஐந்து ரூபாய் கொடுத்தான், மீதி ஒரு ரூபாயை கண்டக்டர் தரவில்லை. அப்பொழுது கண்டக்டர், ஒரு பயணியிடம் ஏதோ ஒரு காரணத்திற்க்காக வாக்குவாதம் செய்துக்கொண்டு இருந்தார். பஸ் ரொம்ப கூட்டமாக வேறு இருந்ததால் பாவம் என்று அவனும் கேட்கவில்லை. ஆனால். இந்த பாவம் எல்லாம் நம்மை  நாமே சமாதானம் செய்துக்கொள்ளதான். அவன் அந்த இடத்தில் மீதி ஒரு ரூபாய் கேட்டு இருக்க வேண்டும். எங்கே கண்டக்டர் எதாவது சொல்லிவிடுவாரோ என்ற பயம் அவனுக்கு. 

என்னடா??, என்ன என்னமோ எழுதுறான். ஆனால் இப்படி பயந்தவனா இருக்கான் என்று நினைக்கிறீர்களா???.  உண்மையாகவே இதுதான் அசோக். இந்த தைரியம் எல்லாம் எழுத்தில் மட்டும்தான். அங்குதான் அவனை யாரும் கேள்வி கேட்க முடியாதே??. (அசோக் ஒரு வலைப்பதிவில் எழுதிக்கொண்டு இருக்கிறான் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்)

அவனின் Orkut Profile'லும் இப்படிதான். கொஞ்சம் Terror'ஆக தமிழில் எழுதியிருப்பான். இதைப்பார்த்த அவன் நண்பனின்  நண்பன் ஒருவன், அசோக்கை கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று ஒன்றைக்காலில் நின்று இருக்கிறான். நண்பனும் அவனிடம் "அசோக் எல்லாம் அந்தளவு worth இல்லை" என்று எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லையாம். அவனை  கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று ஒரே முடிவில் இருந்திருக்கிறான். ஒரு சேகுவரா படத்தை Orkut'ல் போட்டது தப்பாக போய்விட்டது.

சென்ற முறை நாகூர் சென்றபோது, அசோக்கிடம் அவன் நண்பன் அவனை அறிமுகம் செய்து வைத்தான். ஒரு பத்து நிமிடம்தான் பேசியிருப்பான், அதற்குள் ஒரு இருபது தடவையாவது அவன் அசோக்கிடம் கேட்டுவிட்டான் "நீங்கள்தான் உண்மையாகவே அந்த Orkut Profile ஓனரா??" என்று. அந்த பத்து நிமிட உரையாடலோடு அவர்கள் நட்பு முடிந்துவிட்டது. அதன்பிறகு அவன் அசோக்கின் நண்பனிடம் ரொம்ப வருத்தப்பட்டு இருப்பான் போல. "அசோக்கை ரொம்ப நம்பியதாக".

இதற்க்கு எல்லாம் அசோக் என்ன சார் செய்ய முடியும். அவன் சின்னவயதில் இருந்தே வளர்ந்தது அப்படி. இப்பொழுது உங்கள் வீட்டு முன்னால் ஒரு கொலை  நடக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள். அட்லீஸ்ட் போலீஸ்'காவது ஒரு போன் செய்து சொல்வீர்கள அல்லவா. ஆனால் அசோக்கின் அப்பா அப்படி இல்லை, வீட்டை பூட்டி உள்ளேயே இருந்துக்கொள்வார், பின்னால் போலிஸ் வந்துகேட்டால் கூட, அந்த நேரத்தில் நாங்கள் குடும்பத்தோடு முருகன் கோயிலுக்கு போயிருந்தோம் என்று சொல்லிவிடுவார். இது உண்மையாக நடந்தது.  அப்பொழுது அசோக் பனிரெண்டு'டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தான். ஒருவன் கத்தியால் குத்தப்பட்டு ரோட்டில் விழுந்தது இன்னும் ஏதோ ஒரு கனவை போல் அவன் நினைவில் இருக்கிறது. மாடியில் இருந்த ஜன்னலோரமாக அசோக் அதைப்பார்த்துக்கொண்டு இருந்தான்.

அப்பறம் இன்னொன்று, ஒருவன் தமிழில் எழுதினால், அவன் தமிழ் பித்தன், தமிழ் தீவிரவாதி என்று படிப்பவர்களே பெயர் வைத்து ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அசோக்  தமிழில் எழுதுவதற்க்கு உண்மையான காரணம் என்னவென்றால், அவனுக்கு சுட்டுப்போட்டாலும் அங்கிலம் வராது. தமிழும் அரைக்குறைதான். ஏதோ இப்பொழுதுதான், கொஞ்சம் கொஞ்சமாக எழுத்துப்பிழை  இல்லாமல் எழுத ஆரம்பித்து உள்ளான்.

இப்படிபட்ட அசோக்கைப்பற்றிதான் தொடர்ந்து ஒரு பத்து பதிவுகள் எழுதலாம் என்று இருக்கிறேன். இந்த பதிவில் அவனின் பயத்தைப்பற்றி பார்த்துவிட்டோம், இனி அடுத்தப்பதிவில் அவன் ராசியைப்பற்றி  பார்ப்போம்.

3 comments:

தனி காட்டு ராஜா said...

//அந்த நேரத்தில் நாங்கள் குடும்பத்தோடு முருகன் கோயிலுக்கு போயிருந்தோம் என்று சொல்லிவிடுவார்//

யாமிருக்க பயமேன் என்று முருகன் சொல்லுவதால் இருக்கலாம்.......

//"அசோக் எல்லாம் அந்தளவு worth இல்லை"//
:))))
அசோக் தன் பயத்தை பற்றி வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்து உள்ளதே ...அவன் துணிவு வளர ஆரம்பித்து விட்டது என்பதை தானே காட்டுகிறது ......??


புனைவு என்றால் என்ன -விளக்கவும் ( 5 மதிப்பெண் வினா )

சரவண வடிவேல்.வே said...

அது யாருக்கு தெரியும்.. எல்லாரும் அந்த வார்த்தையை பயன்படுத்துறாங்க, அதான் நானும்....

இதைப்பற்றி நாம் வரயிருக்கும் பதிவர்கள் உலகத்தமிழ் மாநாட்டில் விரிவாக பேசுவோம் நண்பா..

தனி காட்டு ராஜா said...

//இதைப்பற்றி நாம் வரயிருக்கும் பதிவர்கள் உலகத்தமிழ் மாநாட்டில் விரிவாக பேசுவோம் நண்பா..//

:)))))))))))