Saturday, September 4, 2010

புரிந்தும் புரியாமலும் - II

”ஹலோ,

“ம். சொல்லு”

“இப்பத்தான் டா, உன் ப்ளாக்’யை படித்தேன். உண்மையாவே அந்த பொண்ணுகிட்ட ‘I Love You” சொல்லிட்டியா??”.

“ஆமாம்”

“அடப்பாவி, அந்த பொண்ணு என்ன சொன்னுச்சு??”

“அதான் எழுதியிருந்தேன்’ல!!, அதைத்தான் சொன்னுச்சு”

”சரி, இதைலாம் ப்ளாக்’ல எழுதுவியா?? உனக்கு அறிவே இல்லையா?? அந்த பொண்ணு படிச்சா, உன்னைப்பற்றி என்ன நினைப்பாள்”

“அவளாம் என் ப்ளாக்’யை படிக்க மாட்டா. படிச்சாலும் அவளுக்கு நான் யாரைப்பற்றி எழுதியிருக்கேனு தெரியாது. அவளை பொருத்தவரை, நான் தினமும் ஒரு பொண்ணுக்கு ’ ‘I Love You’ சொல்றவன்”.

“ஏன்டா, இப்படி ரொம்ப vex ஆகி பேசுற!!.. சரி, நாளைக்கு வீட்டுக்கு வா?. அம்மா வரச்சொன்னாங்க”

“யே, அம்மாகிட்ட எதாச்சும் இதைப்பற்றி சொல்லிட்டியாடி”

”ஹா, ஹா.. ஏன்டா, இந்த பயம் இருக்குதுல, அப்பறம் என் இதைலாம் எழுதுற!!. நான்லாம், அம்மாகிட்ட ஒன்னும் சொல்லல. நீ நாளைக்கு வந்து ஒன்னும் உளறாமல் இருந்தா சரி”

“எனக்கு என்னமோ உன் மீது சந்தேகமா இருக்கு. நான் அடுத்த ஞாயிற்று கிழமை வரேன். நாளைக்கு பசங்க’கூட வெளியில போலாம்னு இருக்கேன்”

”அதுலாம் எனக்கு தெரியாது. ஒழுங்கா, நாளைக்கு மத்தியானம் சாப்பிட வர. சிக்கன் பிரியாணி. அப்பறம் பின்னாடி வருத்தபடுவ”

”யே, புரிஞ்சுக்கோ. அடுத்த வாரம் வரேன். அம்மாகிட்ட எதாவது சொல்லி நீ சமாளி”

“அடுத்த வாரம்’லாம் உனக்கு வீட்ல ‘No Entry’. என்னை பெண் பார்க்க வராங்க”

“துரோகி, சொல்லவே இல்ல. மாப்பிள்ளை யாரு. ஏதோ MEPZ பக்கத்துல வீடு, Infosys’ல வேலை பார்க்கிறானு ஒரு தடவை அம்மா சொன்னாங்கல. அவனா??”

“நாளைக்கு வீட்டுக்க்கு வா, அம்மா ‘Full Detail’ சொல்லுவா. நான் இப்ப ரொம்ப பிஸி பா”

“சரி பொழைத்து போ. நாளைக்கு வீட்டுக்கு வரேன்”

“ம், அந்த பயம். சரி, நான் உன்கிட்ட அப்பறம் பேசுறேன். Bye Bye”

“யே, அப்படியே என் ப்ளாக்’ல கொஞ்சம் Comments எழுது பா”

“டேய், நீ திருந்தவே மாட்டியா. சரி. Will try. Bye bye.”

“Bye”

2 comments:

நிலவுக்காதலன் said...

எனக்கு புரிந்த அளவு அவன் காதலிக்கும் பெண் இவளெதான் :)

சரவண வடிவேல்.வே said...

சகா, நான் ஒரு காதல் தோல்வியை எவ்வளவு சோகமாக சொல்லி இருக்கிறேன்.

உங்களுக்கு "அந்த பெண்" யார் என்று கவலை. எனக்காகவும் கொஞ்சம் கவலைப்படவும் :)