சமீபத்தில் Facebook'ல் மனுஷ்ய புத்திரன் எழுதியது...
*****************************************************
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ
*****************************************************
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ
பாரதியின் இந்த வரிகளைப் படிக்கும்போதெல்லாம் அவர் மனித மனதின் விசித்திரமான ஒரு இயல்பை எவ்வளவு நுட்பமாக சொல்கிறார் என்ற வியப்பு மேலிடுகிறது. நம் வாழ்கையில் சில நிமிடங்கள் பழகிய ஒருவரின் முகம் பிறகு எப்போதோ துல்லியமாக நினைவுக்கு வருகிறது. ஆனால் நம்மோடு பலவருடங்கள் நெருங்கி வாழ்ந்த ஒருவரின் முகத்தை சட்டெனெ நினைத்துக்கொண்டால் மூட்டமான காட்சிதான் மிஞ்சுகிறது. 2 ஆம் வகுப்பில் என்னோடு படித்த ஒரு பையனின் முகம் இவ்வளவு வருடங்களுக்கு பிறகும் நினைவில் இருக்கிறது. ஆனால் எனது 20 ஆம் வயதில் இறந்துபோன அம்மாவின் முகத்தை எவ்வளவு நினைவுபடுத்திப் பார்த்தாலும் ஏதோ ஒரு சாயல்தான் மனதில் தோன்றுகிறதே தவிர அந்த முகத்தை மீட்க முடியவில்லை. ’நேசம் மறக்கவில்லை எனில் நினைவு முகம் மறக்கலாமோ? என்ற பாரதியின் கேள்வியில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. நம் மனம் தீவிரமான அன்பையோ காதலையோ அடையும்போது மனித உடல் மறைந்து அது வேறொரு ரூபத்தில் நமக்குள் உருக்கொண்டு விடுகிறது. அதனால்தான் ஆசை முகம் நினைவுக்கு வர மறுக்கிறது. நினைவும் மறதியும்தான் நம் வாழ்க்கையின் மொத்த சாரமுமே இல்லையா?.
5 comments:
thousand "likes" nanba. kavithai is gr8 and ur last line explanation is awesome. my long time doubt clarified..
"நம் மனம் தீவிரமான அன்பையோ காதலையோ அடையும்போது மனித உடல் மறைந்து அது வேறொரு ரூபத்தில் நமக்குள் உருக்கொண்டு விடுகிறது" this one :D
இது நான் எழுதியதில்லை. பாரதியார் கவிதைப் பற்றி மனுஷ்ய புத்திரன் எழுதியது. எல்லா புகழும் மனுஷ்ய புத்திரனை சேரும்.
:) okies.. manushyaputhiran's last line :)
Thanks for sharing
Post a Comment