இந்தமுறை தமிழ் திரைப்படங்களுக்கு 13 தேசியவிருதுகள். அதில் சன் பிக்சர்ஸ் தயாரித்த "ஆடுகளம்" திரைப்படத்திற்க்கு மட்டும் ஆறு விருதுகள். அதே நிறுவனம் தயாரித்த சென்ற ஆண்டின் மாபெரும் திரைப்படத்திற்க்கு இரண்டு தேசியவிருது. தேசிய விருது வாங்க எல்லாவித தகுதியும் "ஆடுகளம்" திரைப்படத்திற்க்கு இருக்கிறது. சன் பிக்சர்ஸ் யாரையும் மிரட்டியோ, பணம் கொடுத்தோ வாங்கியிருக்க தேவையில்லை. ஒருவேளை அப்படி செய்திருந்தால் அது இந்தத் திரைப்படத்திற்க்குதான் கேவலம். என்ன செய்ய?? இப்பொழுது எல்லாவற்றையும் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
தேசியவிருதுகள் பெற்ற "தென்மேற்க்கு பருவ காற்று" மற்றும் "நம்ம கிராமம்" திரைப்படங்களைப் இன்னும் பார்க்கவில்லை. எல்லா திரைப்படங்களையும் DVDயில் வைத்திருக்கும் நண்பன் ஒருவனிடம் சொல்லி வைத்திருக்கிறேன். ஷாஜி இரண்டு மாதங்களுக்கு முன்னால் "தென்மேற்க்கு பருவகாற்று" திரைப்படத்தைப் பாராட்டி உயிர்மையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அப்பொழுதே அந்த திரைப்படத்தை பார்க்க நினைத்தேன், பின் வரிசையாக தமிழில் வெளிவந்த சில சூப்பர் ஹீட் திரைப்படங்கள் காரணமாக அதை மறந்துவிட்டேன்.
எங்க தலைவர் மிஷ்கினின் "நந்தலாலா" திரைப்படத்திற்க்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை. அதை நினைத்து எனக்கு கொஞ்சம் வருத்தமே. கண்டிப்பாக அடுத்த வருடம் "யுத்தம் செய்" திரைப்படத்திற்க்கு கிடைக்கும். நம்புவோம்.
நான் சிம்புவின் ரசிகனாக மாறிக்கொண்டிருக்கிறேனா?? என்று பயமாகயிருக்கிறது. ஏனென்றால், எனக்கு "வானம்" திரைப்படம் பிடித்திருந்தது. அந்த கடைசி இருபது நிமிடங்களைத் தவிர்த்துப் பார்த்தால் வானம் ஒரு நல்ல திரைப்படம்.
கடன் தொல்லையிருந்து மீண்டு குழுந்தையைப் படிக்கவைக்க ஒரு குடும்பத்துக்கு நாற்பது ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. இன்னொரு பக்கம், தன் காதலியுடன் புதுவருட இரவை கொண்டாட ஒருவனுக்கு நாற்பது ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. மற்றொரு பக்கம், புது வருடத்திலிருந்து சொந்தமாக விபச்சார தொழில் செய்யபோகிறாள் ஒருவள், அன்றைய இரவின் விலை நாற்பது ஆயிரம் ரூபாய். "Economic inequality"க்கு இது ஒரு சிறந்த உதாரணம். இதைதான் சமீபத்தில் நமது சுப்ரீம் கோர்ட்டும் சொல்லியது "பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று. வானம் திரைப்படத்தில் சிம்பு, அனுஷ்கா இருவரின் நடிப்பும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்னும் இதே போல் இரண்டு படங்கள் சிம்பு நடித்தால் அவரின் ரசிகனாக நான் மாறுவது உறுதி.
"எவன்டி உன்னை பெத்தான்" பாடலை சிம்புவே எழுதி உள்ளார். அதில் வரும் சில வரிகள்
என் Facebook Statusசும் நீதான்,
என் Tweeter Twitting நீதான்,
.........................
என் BBMமும் நீதான், என் Facetimeமும் நீதான்...
எப்படி சிம்பு சார்?? எப்படி??.. தயவுசெய்து "வள்ளவன், மன்மதன்" போல் எந்த திரைப்படமும் இனி எடுக்காமல் இருங்கள்.. நீங்கள் எங்கேயோ போலாம் சிம்பு சார்.
"எவன்டி உன்னை பெத்தான்" பாடலை தொடர்ந்து சிம்புவின் அடுத்த அமர்க்களம் "போடா போடி" திரைப்படத்தில் வரும் "லவ் பண்ணலாமா?? வேண்டாமா??" இதுதான் இப்பொழுது என்னுடைய Favourite. (பாடல் கீழே)
வானம் திரைப்பட ஆரம்பத்தில் முஸ்லீமாக வாழ்வதால் எற்படும் பிரச்சனைகளைப் பற்றி அருமையாகச் சொல்லியிருந்தாலும், கடைசி இருபது நிமிடங்களில் சொதப்பிவிடுகிறார்கள். முஸ்லீம்களுக்கு மட்டும்தான் வெடிக்குண்டு தயாரிக்க தெரியுமா என்ன??. கோ, வானம் இந்த இரண்டு திரைப்படங்களும் சொல்லும் ஒரு கருத்து, தீவிரவாதி = மூஸ்லிம் & நக்சலைட் = ஹிந்து. கிறிஸ்துவர்கள் யார் என்று இதைப் படிக்கும் நீங்கள் கேட்கலாம். அவர்கள் வழக்கம் போல் அப்பாவிகள்.
இந்த மாதத்தில் நான் பார்த்த இன்னும் இரண்டு திரைப்படம் "அழகர்சாமியின் குதிரை மற்றும் எங்கேயும் காதல்" அழகர்சாமியின் குதிரை நல்ல திரைப்படம்தான் என்றாலும் எந்த காட்சியும் மனதில் நிக்கவில்லை, எங்கேயும் அழுத்தமும் இல்லை. இதாவது பராவாயில்லை, மற்றொரு திரைப்படமான "எங்கேயும் காதல்" திரைப்படமே இல்லை.
முன்னர் எல்லாம் ஹரிஸ் ஜெயராஜ் சார், இரண்டு படங்களுக்கு இடையே அதிக இடைவெளி தருவார். குறைந்தது ஆறு மாதங்களாவது இருக்கும். அந்த ஆறு மாதங்கள் புதிய ட்யூன்களைத் தேடுவதற்க்காகயில்லை, அவரின் பழைய டியூன்களை மக்கள் மறப்பதற்க்காக என்பது நாம் அனைவருக்கும் அறிந்ததே. அவரின் கோ மற்றும் எங்கேயும் காதல் அடுத்தடுத்து வந்ததால், எந்த பாடல் எந்த திரைப்படம் என்பதை கண்டுபிடிக்க மிகவும் கடினமாக உள்ளது. எனக்கு Pushக்கும் Pullக்கும் எப்பொழுதும் குழப்பம் இருந்து கொண்டேயிருக்கும். தள்ள வேண்டிய இடத்தில் இழுப்பதும், இழுக்கும் இடத்தில் தள்ளுவதும் நான் செய்யும் அன்றாட வேலைகளில் ஒன்று. ஆனால், இப்பொழுது "Push, Pull"யை விட "கோ மற்றும் எங்கேயும் காதல்" பாடல்கள்தான் என்னை அதிகம் குழப்புகிறது.
"என்ன வாழ்க்கடா இது"
6 comments:
Classic ... you are getting better and better :)
Thank You.. Thank you.. :)
முன்னர் எல்லாம் ஹரிஸ் ஜெயராஜ் சார், இரண்டு படங்களுக்கு இடையே அதிக இடைவெளி தருவார். குறைந்தது ஆறு மாதங்களாவது இருக்கும். அந்த ஆறு மாதங்கள் புதிய ட்யூன்களைத் தேடுவதற்க்காகயில்லை, அவரின் பழைய டியூன்களை மக்கள் மறப்பதற்க்காக என்பது நாம் அனைவருக்கும் அறிந்ததே.
Rotfl
As Ree said you are on a way to become a gr8 writer, congrats.
Push & Pull analogy chanceless and smart.
"கிறிஸ்துவர்கள் யார் என்று இதைப் படிக்கும் நீங்கள் கேட்கலாம். அவர்கள் வழக்கம் போல் அப்பாவிகள்"
"மற்றொரு திரைப்படமான "எங்கேயும் காதல்" திரைப்படமே இல்லை" kalakkal nanba:) even i do hav push n pull prob :D:D
@Travis Bickle..
Really very thanks nanba... It's like tonic to me. :)
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிட்டாங்கய்யா!!!
:)
@Subramania Athithan
push, pull'யை விட தள்ளு, இழு ரொம்ப கொடூரம்... :)
Post a Comment