Saturday, August 20, 2011

சில இடைவெளிகள்

"எதற்க்காக இப்பொழுது வலைப்பதிவு அதிகம் எழுத மாட்டேங்கிறாய்??" இப்படி யாரும் என்னிடம் கேட்கவில்லை. அப்படி கேட்டால் எந்தமாதிரி பதில் சொல்வது என்று அப்பொழுது யோசிக்க கூடாது என்பதற்காக, இப்பொழுதே யோசித்து எழுதிவிடுகிறேன்.

இப்பொழுதுலாம், வலைப்பதிவு எழுதுவதை விட, Facebook' ல் Status எழுதவும் , twitter'ல் ட்விட் செய்யவும்தான் அதிகம் பிடிக்கிறது. காரணம் சரியாக தெரியவில்லை. நமது வலைப்பதிவை யார் படிக்கிறார்கள் என்ற எண்ணமாக கூட இருக்கலாம்.

முன்னர் எல்லாம், வலைப்பதிவில் ஒரு பதிவை எழுதிவிட்டு ஒரு மணிநேரத்துக்கு ஒரு தடவை எதாவது கமெண்ட் வந்து உள்ளதா என்று பார்த்துக்கொண்டே இருப்பேன். இரண்டு நாள்கள் கழித்து இரண்டு சுப்புரமணிகளில் யாராவது ஒருவர் கமெண்ட் போட்டு இருப்பார்கள். அதை பார்த்தவுடன் வரும் சந்தோசம் இருக்கிறதே, அப்பப்பா...

இதனால், வலைப்பதிவில் ஒரு கடலில் தனியாக பயணிப்பது போல் எண்ணம், தனியாக நிச்சல் அடிப்பது ஆபத்தானது,, சிலர் நம்மை பைத்தியம் என்று நினைக்கக் கூடும்.

எனக்கு பாராட்டுகள் மீது அதிகம் நம்பிகையில்லைதான். ஆபிஸில் நான் செய்யும் வேலைக்கு யாரவது பாராட்டும் போது, எனக்கு லஜ்ஜையை உண்டு பண்ண கூடியவை இந்த பாராட்டுக்கள். பிறருக்கு நான் செய்த உதவியை யாராவது பொது இடத்தில் சொன்னால், அங்கேயிருந்து தப்பிக்கவே நினைப்பேன். ஆனால், யாராவது எனது வலைப்பதிவை புகழ்ந்து சொல்லும் போது, எனக்கு வரும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடிவதில்லை.

Facebook' ல் Status போட்டவுடன் உடனே ஒரு பத்து லைக் வருகிறது, குறைந்தது இருவராவது எதாவது கமெண்ட் சொல்கிறார்கள். ட்விட்டரில் நமது wavelength'ல் சிலர் நம்முடம் பயணிப்பது போல் எண்ணம். அதனால் தான், Facebook' ல் Status எழுதவும் , twitter'ல் ட்விட் செய்யவும் அதிகம் விரும்புகிறேன் என்று நினைக்கிறேன்.

எனக்கே தெரியாமல் Facebook மற்றும் ட்விட்டருக்கு அடிமையாகி விட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து தப்பி, இந்த வலைப்பதிவிற்க்கு மீண்டும் வருவேன் என்ற நம்பிக்கையில், தற்பொழுது வணக்கம் சொல்லி விடை பெற்றுக்கொள்கிறேன்.

2 comments:

சுப்பிரமணி சேகர் said...

உலகில் உள்ள எல்லாருக்கும் பக்கம் பக்கமாக படிக்கும் பொறுமை இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது..
தினம் முக நூலுக்குள் நுழைகிறேனோ இல்லையோ வலைத்தளம் சென்று சரவணாவின் கருத்து கேட்க,
பக்கம் பக்கமாய் தமிழ் படிக்க ஆசைப்படுகிறேன்.

சரவண வடிவேல்.வே said...

நன்றி நண்பா... ஆனால் இந்த பாராட்டுகள் எனக்கு கொஞ்சம் அதிகம்..

யாராவது இதை படித்தால், ஏதோ நான் கத்திமுனையில் உங்களை எழுத சொல்லியது போல் காட்சியளிக்க கூடியது. :)