Sunday, August 21, 2011

நான் எதற்காக உங்கள் அன்னா ஹாசாரேயை ஆதரிக்க வேண்டும்

பேசி பல நாட்களான தோழியிடமிருந்து நேற்று வந்த ஒரு குறுஞ்செய்தி "Pls Support Anna Hazare". ஒரு பழைய தோழியின் நட்பை புதுபிக்க உதவினார் என்ற முறையில் அன்னா ஹாசாரேவுக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன். 

அன்னா ஹாசாரேயின் உண்ணாவிரதத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு கூடிக்கொண்டே போகிறது. அன்னாவை ஆதரிப்பது இப்பொழுது ஒரு Trend. இப்படி ஆதரவு தெரிவிக்கும் பலரிடமும் எதற்காக இந்த உண்ணாவிரதம் என்று கேட்டால், அவர்கள் சொல்லும் ஒரே பதில் "ஊழலுக்கு எதிராக". இதற்கு மேல் அவர்களுக்கு வேறு எதுவும் சொல்ல தேவையில்லை. லோக்பால் மசோதா வந்தால் நமது நாட்டில் ஊழல் குறைந்துவிடும் இதுதான் அவர்கள் நினைப்பது. சரி, ஒருவேளை இந்த மக்கள் எழுச்சியின் காரணமாக லோக்பால் மசோதா (மன்னிக்கவும்) ஜன் லோக்பால் மசோதா வந்துட்டது என்று வைத்துக்கொள்வோம். அதன் பின் இந்தியாவில் மொத்தமாக ஊழல் அழிந்து விடுமா??? அல்லது குறைந்து விடுமா??. அப்படி குறையவில்லை என்றால், மக்கள் விரக்தியில் அன்னா ஹாசாரேவுக்கு எதிராக கருத்து சொல்ல நேரிடும். இதை அன்னா ஹாசாரேயும் தெரிந்துதான் வைத்திருப்பார் என்று நினைக்கிறேன், அதற்காக தான் அவர் ஆதரவாளர்கள், ஜன் லோக்பால் பற்றி ஒரு P.P.T தயார் செய்து அனைவருக்கும் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அதை எத்தனை பேர் படித்தார்கள் என்பது கேள்வி குறி..

ஜன் லோக்பால் வந்தால், ஊழல் முற்றிலுமாக அழிந்துவிடாது என்பதை மக்களுக்கு முதலில் உணர்த்த வேண்டும். இந்த ஜன் லோக்பால் அமைப்பின் படி, ஏழு பேர் கொண்ட குழு கூடி அனைத்து ஊழல் வழக்குகளையும் விசாரிக்கும். ஏழு பேர் கொண்ட குழுவால் எத்தனை வழக்குகளை விசாரிக்க முடியும். இப்பொழுது நடந்துக்கொண்டிருக்கும் 2G வழக்கில் இதுவரை எனக்கு தெரிந்து கிட்டத்தட்ட 20000 பக்கங்களுக்கு மேல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஏழு பேர் கொண்ட குழுவால் எத்தனை நாட்களில் இந்த குற்றப்பத்திரிக்கையைப் படிக்க முடியும்???

முன்னால் நடந்த அன்னாவின் உண்ணாவிரதத்துக்கும் தற்பொழுது நடக்கும் உண்ணாவிரதத்துக்கும் எத்தனை வித்தியாசங்கள். அன்னா, அவருக்கே தெரியாமல் மீடியாவின் மாய வலையில் விழ்ந்துவிட்டார் என்றே நினைக்கிறேன். அவர் ஓடி வந்து அமர்ந்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்து வைத்த காட்சி எனக்கு விஜயின் திரைப்படங்களைதான் நினைவு படுத்தியது.

நான் அன்னா ஹாசாரேயின் போராட்டத்தை முற்றிலும் எதிர்க்கவில்லை. இப்பொழுது நடக்கும் உண்ணவிரதம் ஊழல் முற்றிலும் அழிப்பதற்காக இல்லை. ஊழல் செய்பவர்களுக்கு தண்டனை தருவதற்காக மட்டுமே என்பது என் கருத்து. சொல்லபோனால் அன்னாவிடம் கேட்டால் கூட இதை தான் சொல்வார்.

ஊழலை முற்றிலுமாக அழிக்க இது போன்ற போராட்டங்களால் மட்டும் முடியாது. ஒவ்வொரு தனிமனிதனும் நினைத்தால் மட்டுமே முடியும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், படிப்பிற்க்காக டோனேஷன் என்ற பெயரில் லஞ்சம் தர தயாராக இருக்கிறோம். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புரோக்கருக்கு லஞ்சம் தர தயாராக இருக்கிறோம். நேர்மையாக ஒருவனுக்கு கிடைக்கும் வாய்ப்பை நாம் தட்டிப்பறிக்க லஞ்சத்துடன் தயாராகயிருக்கிறோம். ஒரு சின்ன விசயத்துக்கு கூட லஞ்சத்துடன் தயாராக நின்றுக்கொண்டு இருக்கிறோம். நம்புங்கள் நாம்தான் லஞ்சத்துக்கு எதிராக பேசுகிறோம்.

இன்று டிராபிக் போலிஸுக்கு 100 ரூபாய் லஞ்சம் கொடுத்தேன். இப்பொழுது சொல்லுங்கள் நான் எதற்காக உங்கள் அன்னா ஹாசாரேயை ஆதரிக்க வேண்டும்.

7 comments:

Srikanth said...

நண்பா, ஒப்புக்கொள்கிறேன் இந்த போராட்டத்தால் நிச்சயமாக ஊழலை முடிவுக்கு கொண்டு வர முடியாது, எந்த ஒரு நாட்டிலும் ஊழலே கிடையாது என்று இல்லை, ரயில் டிக்கெட் வாங்குவது, பள்ளியில் டொனேஷன் கொடுப்பது எல்லாம் பாதிப்பது மிக குறுகிய மக்களை தான், இது அனைத்து நாடுகளிலும் நடப்பது, அனால் இந்தியா உலக ஊழல் வரிசையில் 87 வது இடத்தில் உள்ளது.திட்ட திட்ட 1456 பில்லியன் அமெரிக்க டாலர் வெளி நாடுகளில் கருப்புப்பணமாக உள்ளது. மேலும் இந்த மசோதாவின் படி ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் கமிஷனை போல் தனிப்பட்ட அமைப்பை ஏற்படுத்தி அவர்கள் தான் ஊழலை விசாரிப்பார்கள்.

இருந்தும் இது உன் தனிப்பட்ட கருத்து, நானும் உன்னை ஆதரிக்க சொல்லவில்லை.

Srikanth said...

அந்த கருப்புப்பனத்தின் மதிப்பு நம் நாட்டின் மொத்த கடனை விட 13 மடங்கு அதிகம்.

சரவண வடிவேல்.வே said...

என் கருத்துக்களை சரியான முறையில் புரிந்துக்கொண்டமைக்கு நன்றி நண்பா..

இந்த போராட்டத்தின் வெற்றியைப் பற்றி காலம்தான் பதில் சொல்ல வெண்டும்..

Anonymous said...

அண்ணா ஹஜாரேவை ஆதரித்து போராடுவோர்,தாங்கள் லஞ்சம் கொடுக்க மாட்டோம் என்று முதலில் சபதம் ஏற்கட்டும்.பள்ளி,கல்லூரிகளில் சேர்வதற்கு டொனேஷன் கொடுப்பதை நிறுத்தட்டும்.தாங்களும் போராட்டத்தில் கலந்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ள வணிகர் சங்கங்கள் உண்மையான விற்பனையைக் காட்டி சரியான விற்பனைவரி,வருமானவரியைச்செலுத்தட்டும்.ஊழலுக்கும்,லஞ்சத்திற்கும் வித்திடும் இவர்களெல்லாம் சரியாக இரு்ந்தால் சட்டம் எதற்கு?அதற்காக போராட்டம் எதற்கு?

தனி காட்டு ராஜா said...

படிப்பிற்க்காக டோனேஷன் என்ற பெயரில் லஞ்சம் தர தயாராக இருக்கிறோம். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புரோக்கருக்கு லஞ்சம் தர தயாராக இருக்கிறோம். நேர்மையாக ஒருவனுக்கு கிடைக்கும் வாய்ப்பை நாம் தட்டிப்பறிக்க லஞ்சத்துடன் தயாராகயிருக்கிறோம். //ஒரு சின்ன விசயத்துக்கு கூட லஞ்சத்துடன் தயாரக நின்றுக்கொண்டு இருக்கிறோம். நம்புங்கள் நாம்தான் லஞ்சத்துக்கு எதிராக பேசுகிறோம்.

இன்று டிராபிக் போலிஸுக்கு 100 ரூபாய் லஞ்சம் கொடுத்தேன். இப்பொழுது சொல்லுங்கள் நான் எதற்காக உங்கள் அன்னா ஹாசாரேயை ஆதரிக்க வேண்டும்.//

:))

சரவண வடிவேல்.வே said...

@suji... நண்பா, பழக்க தோஷத்தில் லைக் பட்டனை தேடிக்கொண்டு இருக்கிறேன்... :)

சரவண வடிவேல்.வே said...

@கோபி..

:) :)