Thursday, October 7, 2010

இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் - II

ஒர் எதிர்வினை

வணக்கம் சார். என் பெயர்தான் அசோக். " மிகவும் பயம் கொண்ட, தன்னம்பிக்கையற்ற, ராசியில்லாத, தெளிவாக பேசத்தெரியாத ஒரு மனிதன்" என்று போன பதிவில் சரவணா எழுதியிருந்தானே, அது என்னைப்பற்றிதான்.

அவன் என்ன சார் சொல்றது. நான் சொன்றேன் சார். "நான் மிகவும் பயம் கொண்ட, தன்னம்பிக்கையற்ற, ராசியில்லாத, தெளிவாக பேசத்தெரியாத ஒரு மனிதன்". இப்படி சொல்வதில் எனக்கு எந்த ஒரு வெட்கமும் இல்லை சார். யாரு சார், இங்கே பயப்படல, இந்த சென்னையில் இருக்கிற எல்லாருமே எப்பொழுதும் பயந்துக்கொண்டுதான் இருக்காங்க. அவர்கள் கண்களின் எப்பொழுது ஒரு பயம் தெரிகிறது. ஒருவனின் கண்களை வைத்தே அவன் சென்னைவாசியா?? இல்லையா?? என்று கண்டுப்பிடித்து விடலாம். நம்பிக்கையில்லை என்றால், உங்கள் கண்களை நீங்களே ஒருமுறை  கண்ணாடியில் பாருங்கள். கண்ணாடியில் தெரியும் உங்கள் பிம்பத்தைக்கூட, உங்கள் கண்கள் சந்தேகித்து பார்க்கும். சந்தேகம் தான் சார், பயத்திற்க்கு முதல் காரணம்.

என்னைப்பற்றி தொடர்ந்து பத்து பதிவுகள் எழுதபோவதாக சரவணா சொல்லியிருக்கான். அவன் யாரு சார், என்னைப்பற்றி எழுதுவதற்க்கு. நான் எழுதுகிறேன் என்னைப்பற்றி, எந்தவொரு மிகையும் இல்லாமல், உள்ளது உள்ளபடி. ஒன்றை  மிகைப்படுத்தி எழுதுவதற்க்கு சரவணாவிற்கு நிகர் சரவணாவேதான். சென்ற பதிவில்கூட பாருங்கள், ஒரு ரூபாய்காக கண்டக்டரை  வில்லன் போல் சித்தரித்துவிட்டான்.  நான் சொல்றேன் சார், அன்னைக்கு உண்மையாக என்ன நடந்து என்று.

கலெக்டர் நகரில் இருந்து சி.ம்.பி.டி'க்கு டிக்கெட் விலை, நான்கு ஐம்பது. மீதி ஐம்பது காசு அவர் எனக்கு தரவேண்டும். கண்டக்டரும் பை முழுவதும் தேடிப்பார்த்தார், ஐம்பது காசு நாணயமே இல்லை, எல்லாம் ஐந்து ரூபாய் நாணயம்தான். நம்ம கவர்மெண்ட் இந்த ஐம்பது காசு நாணயத்தையே இப்பொழுது அடிப்பதில்லை  போல இருக்கு. கண்டக்டர் தேடி பார்த்து கிடைக்காதால், நானும் சில்லரையை கேட்காமல் விட்டுவிட்டேன். இதுதான் சார் நடந்தது.

இதை எப்படிலாம் மிகைப்படுத்த வேண்டுமோ அப்படிலாம் மிகைப்படுத்தி இந்த சரவணா  எழுதிவிட்டான்.

இதைப்பற்றி அவனிடம் கேட்டால், அவன் சொல்வான் "இப்படி எழுதுனாதான் படிக்க நல்லாயிருக்கும் டா". ஙோத்தா, அதற்க்கு என்னைப்பற்றியா எழுதவேண்டும். சாரி சார், என்னை  அறியாமல் கெட்டவார்த்தை சொல்லிவிட்டேன்.

நீங்கள் ஒன்றை நோட் செய்தீர்களா, எங்கே எல்லாம் அவனைப்பற்றி எழுதுகிறானோ அப்பொழுது எல்லாம் ஏதோ அவன் மட்டும்தான் இந்த உலகத்தில் நல்லவன் என்பதுபோல் எழுதிவிடுவான். சரிவிடுங்கள், கொஞ்சம் பேரின் எண்ணங்கள் அப்படி. இந்த உலகத்திலேயே அவர்கள் மட்டும்தான் நல்லவர்கள் என்ற நினைப்பு.

சரி சார், உங்கள் நேரத்தை நான் இதற்குமேல் சோதிக்கவிரும்பவில்லை. மீண்டும் அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

1 comment:

தனி காட்டு ராஜா said...

////இந்த சென்னையில் இருக்கிற எல்லாருமே எப்பொழுதும் பயந்துக்கொண்டுதான் இருக்காங்க. அவர்கள் கண்களின் எப்பொழுது ஒரு பயம் தெரிகிறது. ஒருவனின் கண்களை வைத்தே அவன் சென்னைவாசியா?? இல்லையா?? என்று கண்டுப்பிடித்து விடலாம். நம்பிக்கையில்லை என்றால், உங்கள் கண்களை நீங்களே ஒருமுறை கண்ணாடியில் பாருங்கள். கண்ணாடியில் தெரியும் உங்கள் பிம்பத்தைக்கூட, உங்கள் கண்கள் சந்தேகித்து பார்க்கும். சந்தேகம் தான் சார், பயத்திற்க்கு முதல் காரணம்.////

உண்மைதான் சரவணா ........பொதுவாக பகல் நேர சென்னை பரபரப்பு கொண்டதாக இருக்கும்......
இரவு நேர சென்னை ரசிக்கும் படி இருக்கும்.....சென்னையை நீ ரசிக்க வேண்டும் எனில் இரவு 12 to 6 தான் சரியான நேரம் ........

இரவு செகண்ட் ஷோ சினிமா பார்த்து விட்டு .....கிண்டியில் கத்திபாரா ஜங்ஷன் -இல் ஒரு டி (சைக்கிள் -ளில் வைத்து விற்பார்களே...) ....அப்புறம் DLF park வந்தவுடன் அங்கே ஒரு டி குடித்து விட்டு ....ரூம் -க்கு நடந்து செல்வேன் ....அந்த இரவு நேரங்கள் எல்லாம் ரசிக்கும் படி ரம்யமாக இருக்கும்.....

////ஙோத்தா, அதற்க்கு என்னைப்பற்றியா எழுதவேண்டும். சாரி சார், என்னை அறியாமல் கெட்டவார்த்தை சொல்லிவிட்டேன்.////

ஙோத்தா, -இது சென்னை செந்தமிழ் ,கெட்டவார்த்தை இல்லை சரவணா...
ஒரு நிமிடத்துக்கு ஒரு தரமாவது இந்த வார்த்தையை உச்சரிக்காத சென்னை வாசி கிடையாதே ....