Friday, May 29, 2026

Crontab: Ashok.exe - Amazon Kindle Book


 Crontab என்ற பெயரில் நான் எழுதிய பதிவுகளை Crontab: Ashok.exe என்ற பெயரில் Amazon Kindle புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

நண்பன் ஒருவன் Kindle Direct Publishing பற்றி சொல்ல, நானும் விளையாட்டாக உள்ளே நுழைந்தேன். அடுத்த அரை மணி நேரத்தில் புத்தகம் தயார். வெள்ளைக்காரனா வெள்ளைக்காரன்தான். ஒரு புத்தகத்துக்கு முன்னுரை எழுதுவதை விட, அதை வெளியிடுவது சுலபமாக இருக்கிறது.

புத்தகத்தின் விலை 49 ரூபாய். Amazon கமிஷன் போக எனக்கு 15 ரூபாய் கிடைக்கும்.

உடனே மனது கணக்கு போட்டது.

எனது நண்பர்கள் 100 பேர் வாங்கினால்,

100 × 15 = 1500 ரூபாய்.

இப்படியே இரண்டு மூன்று புத்தகம் போட்டால், முழு நேர எழுத்தாளனாகிவிடலாம்.

இந்த யோசனை வந்த ஐந்து நிமிடத்திற்குள் நண்பர்கள் அனைவருக்கும் WhatsApp-ல் புத்தக link-ஐ அனுப்பிவிட்டேன். அடுத்த 48 மணி நேரத்தில் இதுவரை இரண்டு பேர் வாங்கியுள்ளனர்.அதில் ஒருவர் தீவிர வாசகரான நான். இன்னொருவர் யார் என்று தெரியவில்லை.

Amazon அந்த விவரத்தை எழுத்தாளர்களிடம் சொல்ல மாட்டார்களாம். ஒருவேளை அவர் இந்தப் பதிவைப் படித்துக்கொண்டு இருக்கலாம்.

அப்படியென்றால், இந்த புத்தகத்தின் முதல் வெளி முதலீட்டாளருக்கு எனது நன்றி.

புத்தகத்தின் link:

https://amzn.in/d/0idH5bOn

No comments: