Saturday, October 9, 2010

நந்தலாலா

“அங்காடித்தெரு” திரைப்படத்தை அடுத்து நான் மிகவும் எதிர்பார்த்த படம், மிஷ்கினின் “நந்தலாலா”. திரைப்படம் முழுவதும் தயாராகியும், கிட்டத்தட்ட கடந்த ஒன்றரை வருடங்களாக திரைக்கு வரமுடியாத நிலையில் இருந்தது. கடைசியாக வரும் 20ம் தேதி வெளிவர இருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றது.


”அஞ்சாதே” திரைப்படத்தை குறைந்தது ஆறு முறையாவது முழுமையாக பார்த்திருப்பேன். நான் எந்த திரைப்படத்தையும் ஒரு முறைக்கு மேல் பார்ப்பது இல்லை. ஆனால், அஞ்சாதே திரைப்படம் என்னுல் ஏற்படுத்திய அதிர்வு, என்னை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது. ”திரைப்படத்தில் வரும் மொட்டை வில்லன், பூ விற்க்கும் கிழவி, எப்பொழுதும் சித்தியை திட்டிக்கொண்டு இருக்கும் குருவி, ஒயின் ஷாப்பில் வேலைப்பார்க்கும் அந்த சிறுவன், மனைவியின் தலையை வெட்டி காவல்நிலையத்துக்கு எடுத்துவரும் கணவன், அப்பாவிடம் “என்னை பார்க்காதீங்க பா” என்று சொல்லும் கைலியோடு நடுரோட்டில் நிற்க்கும் பெண், என்கவுண்டருக்காக தன் விரலை தானே சுட்டுக்கொள்ளும் போலிஸ்” இப்படி சின்ன சின்ன கதாபாத்திரங்களுக்கு மிஷ்கின் தந்த முக்கியத்துவமே என்னை மீண்டும் திரைப்படத்தை பார்க்க தூண்டியது. அந்த பூ விற்க்கும் கிழவியை கண்டிப்பாக யாராலும் மறக்க முடியாது.

சமீபத்தில் ஒரு ஹிந்தி நண்பர் “இது வரை தமிழில் எதாவது சீரியஸ் திரைப்படம் வந்துயிருக்கா??” என்று கேட்டார். நான் சிறிதும் யோசிக்காமல் சொன்ன பதில் “அஞ்சாதே”. ஏனோ அந்த நேரத்தில் ”கற்றது தமிழ்” திரைப்படம் கூட நினைவுக்கு வரவில்லை.




மிஷ்கினுக்கு புத்தகங்கள் மிகவும் பிடிக்கும் என்று அறிந்தபோது, அவர் மீது இருந்த மதிப்பு கொஞ்சம் அதிகமாகிவிடட்து. புத்தகங்களை (இலக்கிய புத்தகங்களை) படிக்கும் தமிழ் இயக்குனர்கள் மிகவும் குறைவு, விரல் விட்டு எண்ணிவிடலாம்.

மிஷ்கினின் பேச்சை இரண்டு முறை நேரடியாக கேட்டு இருக்கிறேன். இரண்டுமே புத்தக வெளியீட்டு விழா. ஒரு விழாவில் “நல்ல புத்தகங்கள் பற்றியும், நல்ல திரைப்படங்கள் பற்றியும் தொடர்ந்து எல்லாரிடமும் பேசுங்கள். அப்பொழுதுதான் அது எல்லாருக்கும்,சென்று அடையும்” என்றார். மற்றோரு முறை “Wolf Tottem" புத்தகத்தைப்பற்றி புகழ்ந்து பேசினார், ஏனோ என்னால் அந்த புத்தகத்தை இருபது பக்கங்கள் தாண்டி படிக்க முடியவில்லை.

தினமலர் வாரமலரில் மிஷ்கின் ஒரு தொடர் கட்டுரை எழுதி வந்தார். இது திருச்சி பதிப்பில் வெளிவந்தது. அதில் படித்த ஒன்று இன்னும் என் நினைவில் இருக்கிறது “சித்திரம் பேசுதடி படத்தில் வரும் அப்பா கேரக்டர் எப்பொழுதும் எதையாவது துடைத்துக்கொண்டு இருப்பார். அவர் மனதில் அழுக்கு இருந்தது, அதை சுத்தம் செய்வதற்க்காகவே அவர் எப்பொழுதும் துடைத்துக்கொண்டு இருப்பது போல் உருவாக்கியிருந்தேன்”.

எத்தனை இயக்குனர்கள் இதை போல் கதாபாத்திரஙகளை கூர்மையாக உருவாக்குகிறார்கள்??. போன வாரம் நான் பார்த்த ஒரு திரைப்படத்தில் “சந்தானமும், கருனாஸும்” விஞ்ஞானிகள். கொஞ்சமாவது விஞ்ஞானி போல அவர்கள் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கலாம். அப்படி இருந்தும் அவர்கள் ஒன்றும் நடிக்க தெரியாத நடிகர்கள் அல்ல. அவர்கள் என்ன செயவார்கள் பாவம், இயக்குனர் என்ன சொல்கிறாறோ அதைப்போல்தானே நடிக்க முடியும்.  

நான் இதுவரை எதிர்பார்த்து போன எந்த திரைப்படமும் நன்றாக இருந்ததில்லை. “நந்தலாலா” வெற்றி அடைய வாழ்த்துவதை தவிர, வேறு என்ன என்னால் செய்ய முடியும்??.

வாழ்த்துக்கள்.

10 comments:

சென்ஷி said...

பகிர்விற்கு நன்றி நண்பரே...

சரவண வடிவேல்.வே said...

நன்றி சென்ஷி,

உங்களை போன்றவர்கள் எனக்கு பின்னூட்டம் எழுதுவது, எனக்குள் ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

சென்ஷி said...

//எத்தனை இயக்குனர்கள் இதை போல் கதாபாத்திரங்களை கூர்மையாக உருவாக்குகிறார்கள்??. //

உங்களுக்கு நினைவில் தெரிந்து வேறு எந்த இயக்குனரை குறிப்பிடுவீர்கள்??

காலப் பறவை said...

நல்ல பகிர்வு சரவணன் ..... மீண்டும் ஒருமுறை 'அஞ்சாதே'- வை பார்க்க தூண்டுகிறது.....

'Wolf Tottem'குறித்து சாருவின் புத்தக வெளியீட்டு விழாவில் சிலாகித்து பேசியதாக ஞாபகம்..புத்தகத்தின் பெயரை மறந்து விட்டேன்..நினைவூட்டியதற்கு நன்றி....

சரவண வடிவேல்.வே said...

@ சென்ஷி,

எனக்கு தெரிந்தவரை யாருமே இல்லை.

பாலு மகேந்திரா’வை சொல்லலாமா??

யாத்ரீகன் said...

சின்ன சின்ன விஷயங்களையும் நுணுக்கமாய் இழைப்பதென்பது.. இவர் படத்தில் சித்திரம் பேசுதடியிலிருந்து கலக்கலாய் இருக்கும் .. அதர்கெனவே திருப்பி திருப்பி பார்க்கனும்.. :-)

கல்வெட்டு said...

Kikujiro

http://www.youtube.com/watch?v=CjXvptz3pW8

விளம்பரத்திற்கன போட்டோ தற்செயலான் ஒன்றா அல்லது மொத்த படமுமே தற்செயலான ஒன்றா? தனிப்பட்ட சிந்தனையாக இருந்தால் இயக்குனருக்கு வாழ்த்துகள்.

சரவண வடிவேல்.வே said...

Behindwoods நேர்காணலில் மிஷ்கின் சொன்னது...

Question: Is Nandalala inspired from a Japanese film?

Mysskin: Now, I cannot answer this question and convince anyone. When my film is released, you can take the DVD of the Japanese film and then compare and say. Of course, I am an ardent fan of Takeshi Kitano. In fact, you can call him my guru. In a way his Kikujiro stimulated me to take Nandalala but Nandalala is not Kikujiro. You can tell me this after you see the film.

இங்கே படிக்கலாம்..

http://www.behindwoods.com/features/Interviews/interview-5/director/mysskin-01.html

மனசாலி said...

anjathe padathil oru scene. adhil andha appa character bus stopil nirkum podhu phone varum. magalai kadathiyavargal pannuvaargal. appodhu bus stopil arugil nirpavar ringtone kettavudan adhu thanakku vandha phone enru enni avan sattai paiyil kai viduvaan. paratukkal miskin.

சரவண வடிவேல்.வே said...

ஆம், பல திரைப்படங்களில் இதைப் போல் சின்ன சின்ன விசயங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால், இதன் காரணமாக பார்வையாளன பார்க்க வேண்டிய காட்சியில் இருந்து திசை மாற அதிக வாய்ப்பு உள்ளது.

”நான் மகான் அல்ல” திரைப்படத்தில் இதைப்போல் பல காட்சிகள் உள்ளது. முக்கியமாக அந்த “இறகை போல” பாடலில். “சினிமா பார்க்கும் போது, எட்டி பார்க்கும் பின் சீட்டு ஆசாமி. பூங்காவில் திரும்பி பார்க்கும் சிறுமி மற்றும் அவள் அப்பா. காலை வாக்கிங்கில், திரும்பி பார்க்கும் ஒரு நபர்” எனறு பல.

அஞ்சாதேவில் நீங்கள் சொன்ன காட்சியில், அஜ்மல் “என் கைலி” என்பானே. அது எனக்கு மிகவும் பிடித்த காட்சி. அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும்.