Sunday, May 1, 2011

கோ



”கே.வி.ஆனந்த் சார், தயவு செய்து இனி திரைப்படங்கள் எதுவும் நீங்கள் எடுக்க வேண்டாம்”. கோ திரைப்படம் பார்த்தவுடனே இப்படிதான் எழுத நினைத்தேன். ஆனால் கொஞ்சம் யோசித்து பார்த்ததில் தமிழில் எத்தனையோ இயக்குநர்கள் எப்படி எப்படியோ கண்றாவியாகத் திரைப்படம் எடுக்கும் போது, நீங்கள் எடுக்கலாம் தவறே இல்லை. ஆனால், கொஞ்சம் யோசித்து நல்ல திரைப்படமாக எடுக்கவும்.

பத்திரிக்கை துறையில் வேலை பார்த்ததாக சொல்லபடும் கே.வி ஆனந்த் சாரும், சுபா சாரும் நக்சல்கள் பற்றி ஒன்றுமே தெரியாமல் எடுத்திருக்கும் திரைப்படம்தான், “கோ”. எதுக்கு சார் நக்சல்களை இவ்வளவு கேவலப்டுத்த வேண்டும். நீங்கள் சொல்லும் நக்சல்களுக்கான இலக்கணம் மிகவும் புதியதாக உள்ளது. நக்சல்கள் உங்கள் மீது மான நஷ்ட வழக்கு போட்டாலும் ஆச்சர்யம் அடைவதற்கில்லை.

கே.வி சார்,  ”கோ” திரைப்படம் பார்வையாளர்களிடம் ஒரு சிறிய எழுச்சியை எற்படுத்துகிறது. நம் தமிழ்மக்கள் எப்பவும் உண்ர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். அதைப்போல் மறதியும் உடையவர்கள். திரைப்படத்தை பார்த்துவிட்டு வரும் சிலர், இதைப் போல் எதாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் வீட்டுக்கு வந்து, ஏர்டெல் சூப்பர் சிங்கர் பார்த்தவுடனயே பழையதை மறந்துவிட்டு, தானும் ஒரு சூப்பர் சிங்கராக மாற வேண்டும் என்று கனவுகானத் தொடங்கிவிடுவார்கள். கே.வி சார்,  நீங்கள் சொன்னதை இன்னும் நன்றாக சொல்லியிருந்தால், அந்த மறதியை  குறைத்திருக்கலாம். ஒருவேளை நீங்கள் ஒரு சாதாரண பொழுதுப்போக்கு படத்தைதான் எடுக்க விரும்பினீர்களா??.

கே.வி சார் ஏற்கனவே பத்திரிக்கை துறையை சேர்ந்தவர் என்பதால், பத்திரிக்கை சம்மந்தமான காட்சிக்கள் நன்றாக வந்துள்ளது. ஆனால் கல்லூரி காட்சிகள்??? ஒருவேளை கே.வி சார் கல்லூரியில் படிக்கவில்லை  போல, எப்படி ஒரே கல்லூரியில் படித்த மாணவர்கள் பின் நாட்களில் ”டாக்டர், இன்ஜினியர்” என்று இரு வேறு தொழிலுக்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. நக்சல்வாதிகள் என்றாலே ஜோல்னா பை'தான் வைத்திருக்க வேண்டுமா??. அதுவும் ஜோல்னா பை'யை கொலை செய்யும் இடத்துக்கும் கொண்டுவர வேண்டுமா  கே.வி சார்??.

ஜீவா தன் கல்லூரி நாட்களை சொல்லும்போது, ஒரு ப்ளாஸ்பேக் காட்சி வருகிறது. சரி, எதோ பெரிய மேட்டர் இருக்கு போல என்று எதிர்பார்த்தால், ஒரே ஒரு பாடல் காட்சியோடு அந்த ப்ளாஸ்பேக் முடிந்துவிடுகிறது. ப்ளாஸ்பேக்கை ஒரே வார்த்தையில் சொல்லியிருக்கலாமே சார்??. தோழி இறந்து விடுகிறாள், அதுவும் கொலை செய்யப்படுகிறாள். காதலியின் அறையின் ஒருவன் புகுந்ததால் அவளும் பயந்து இருக்கிறாள். இந்த இடத்தில் ஒரு டூயட் பாடல் தேவைதானா, கே.வி சார்??. உங்களில் பழைய படத்திலும் இதைப்போன்ற தவறைதான் செய்திருந்தீர்கள்.




திரைப்படத்தின் முதல் பகுதி முழுவதும் மீடியாவைப் பற்றியே சொல்லப்படுகிறது. அது எப்படி என்று தெரியவில்லை எங்கே பிரச்சனை என்றாலும் ஜீவா அங்கே ஆஜராகிவிடுகிறார்.

கோ - புரட்சியைப் பற்றி பேசும் திரைப்படம்.  புரட்சியை இதுவரை  டி.வி.களிலும், புத்தகங்களிலும் மட்டுமே படித்த நாம் புரட்சிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். அதை திரைப்படத்தில் பார்த்தவுடன் சில நொடிகள் உணர்ச்சி வசப்படுவது உண்மையே. ஆனால், புரட்சியால் எதுவும் சாதிக்க முடியாது என்பதுதான் உண்மை. அதுதான் இந்த திரைப்படத்தின் கதையும் கூட. ஆனால், இந்த திரைப்படத்தில் அதை சொல்லியவிதம் தவறு.

ஒரு புரட்சியை உருவாக்குவது இவ்வளவு சுலபம் இல்லை,கே.வி சார். அது மிகவும் கடினம். நீங்கள் முதல் அமைச்சர் அளவுக்கு சென்றுவிட்டீர்கள். ஒரு தொகுதியில் வேட்பாளராக  போட்டி போடுவதே எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியுமா??.

மொத்தத்தில் “கோ” மிகவும் சாதாரண ஒரு கமர்ஷியல் திரைப்படம், இந்த திரைப்படத்தை பார்த்தெல்லாம் நாம் உணர்ச்சி வசப்பட வேண்டிய அவசியமில்லை.

பின் குறிப்பு:


தமிழ்சினிமாவின் மரபின் படி, கே.வி சார் பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம், கே.வி சார் என்று ”சார்” போட்டே எழுதியுள்ளேன்.

9 comments:

Anonymous said...

Sir please avoid these kind of negative comments..idhey padatha neenga solra madiri edutha 30 hours or 1 day full ah odura madiri dhan edukanum.

Anonymous said...

Boss padathula konjam mistake dhan iruku atleast unga comment ah vadu sariya irundirukalam. Padathula university nu pottu oru board ah mela irundu keela varaikum focus pannangaley neenga adha paakalaya?

சரவண வடிவேல்.வே said...

சரி பாஸ், நீங்கள் சொல்வது போல் அது University’யாகவே இருந்துவிட்டு போகட்டும். உங்கள் மனசாட்சியை தொட்டு அந்த இறுதிக்கட்டக் காட்சிகளைப் பற்றி சொல்லுங்கள். அந்தளவு வேகமாக எல்லா பழியையும் நக்சல்கள் மீது போட்டுவிட்டு திரைப்படத்தை முடிப்பது ஏன்??.. திரைப்படத்திற்க்கும் அந்த இறுதிக்கட்ட காட்சிகளுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லாத மாதிரியே இருக்கிறது.

Travis Bickle said...

நம் தமிழ்மக்கள் எப்பவும் உண்ர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். அதைப்போல் மறதியும் உடையவர்கள்

Thala full form

Chumma pinringa.

தனி காட்டு ராஜா said...

போடாங்"கோ" .-அப்படி தானே சொல்ல வர்ற சரவணா :)

சரவண வடிவேல்.வே said...

அதே தான் தலைவா!!

Vignesh Prabhu said...

i felt da movie was pretty gud.. ya songs n song timing wasnt gud.. but overall a pretty gud one.. 3 on 5..

சரவண வடிவேல்.வே said...

i will give 1/5 only...

that 1 mark also for my Piaa.. :)

நிலவுக்காதலன் said...

வீட்டுக்கு வந்து, ஏர்டெல் சூப்பர் சிங்கர் பார்த்தவுடனயே பழையதை மறந்துவிட்டு, தானும் ஒரு சூப்பர் சிங்கராக மாற வேண்டும் என்று கனவுகானத் தொடங்கிவிடுவார்கள்" nanba aruma da aruma :) film epdi iruntha enna.. en nanben kalakuran :)